Monday, November 03, 2008

இலங்கையோ இலங்கை - அஜீவனுக்கு ஒரு விளக்கம்

என்னுடைய இதற்கு முந்தைய பதிவானா இலங்கையோ இலங்கையில் அஜீவன் என்பவர் ஒரு பெரிய பின்னூட்டத்தினை இட்டிருந்தார். அதற்கு பதில் எழுத ஆரமபித்து அது அதைவிடப் பெரிதாய் போனதால் போன பதிவின் தொடர்ச்சியாக இந்தப் பதிவை வெளியிட்டுள்ளேன்.


//வீட்டில ஒரு வேளை சாதத்துக்கு திண்டாடும் ஒரு மனிதன், அம்மா பசிக்குது என்று பாதையில கையேந்துற குழந்தைக்கு கையில இருக்கிற நாலானாவை கொடுக்கிறவன பாத்திருப்பீங்க. அவன் நிச்சயம் பாதிக்கப்பட்ட ஒருவனாத்தான் இருப்பான். பணக்காரனுக்கு அந்த மனசு உடனே வராது. ஆதாயம் இல்லேண்ணா அவனால அதுக்கு மனசே வராது.//

நீங்க சொல்ற இந்த விஷயம் பணக்காரனுக்கு மட்டுமில்லை, ஒரு சாதாரணனுக்கும் பொருந்தும். இருப்பவன் கொடுப்பதில்லை, கொடுப்பவனிடம் இருப்பதில்லை என்று சொல்வதெல்லாம் அடைமொழி பேச்சுக்கு வேண்டுமானால் நன்றாய் இருக்குமே தவிர, நடைமுறை அதுவல்ல நண்பரே.

//இது இதயத்துக்கும் மூளைக்கும் இடைப்பட்ட மோதல். ஐயோ என்றால் அது இதயத்தின் உணர்வு. இது எல்லா இடத்திலும் நடக்கிறதுதானே என்றால் அது மூளையின் செயல்பாடு.
சந்தனக்கடத்தல் வீரப்பனோடு இலங்கை தமிழர் போராட்டத்தை ஒப்பிட்டதோடு பதிவாளர் விபரமே அறியாதவர் என புரிகிறது.//

ஈழத் தமிழர் போராட்டத்தினை வீரப்பனின் செய்லகளோடு நான் ஒப்பிடவில்லை. இந்தக் கருத்தை நீங்கள் எங்கிருந்து பிடித்தீர்கள் என்று தெரியவில்லை. நான் சொல்ல வருவது, பிரபாகரனின் செயல்பாட்டு முறை குறித்த ஒரு கருத்தை மட்டுமே. உங்களைக் காட்டிலும் எனக்கு ஈழத் தமிழர்கள் மீது அக்கறை என்று நான் கூறிக் கொள்ள மாட்டேன். ஆனால் எனக்கும் ஓரளவுக்கு அவர்கள் மீது அக்கறை உள்ளது.

//பிரபாகரனுக்கு பின்னர் இந்த மோதல் நின்று விடும் என்றால்....எங்கப்பன் செத்த பிறகு நாங்களும் செத்துடுவோம் என நினைப்பது மாதிரி ஆகிடும்.//

நான் சொல்ல வருவது உங்களுக்குத்தான் புரியவில்லை நண்பரே. பிரபாகரன் இறந்துவிட்டால் போராட்டம் நின்றுவிடும் என்று நான் கூறவில்லை. போராட்டத்தின் வடிவம் மாறுபட்டுவிடும். சற்றே சிந்தியுங்கள், இன்று புலிகளில் எத்தனை பேர் நன்கு படித்தவர்கள்? இந்த போராட்டதிற்கு பிறகு அவர்களின் வாழ்க்கை என்னாகும்? நாளை போராட்டம் முடிந்ததும் நாளை மறுநாள் டை கட்டிக்கொண்டு எங்காவது வேலைக்குச் சென்றுவிடுவார்கள் என்று எண்ணுகிறீர்களா? போராட்டத்தில் தவறில்லை. போராடும் முறை தான் தவறு. 50 ஆண்டு காலமாய் சண்டையிட்டு மடிவதற்கு பதில், சமாதானம் பேசும் வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் இது ஐந்து வருடங்களில் முடிந்திருக்காதா?

//அப்போ, முதலாளித்துவத்துக்கு எதிராக குரல் கொடுத்த அனைவரும் பயங்கரவாதிகளா?//

இதில் எங்கே வருகிறது முதலாளித்துவம்?

//கர்னாடக தமிழர் பிரச்சனை ஒரு உதாரணம். காலா காலமாக , அடித்த போதெல்லாம் தமிழ் நாட்டுக்கு ஓடிவந்தார்கள். கடந்த முறை நாங்களும் எதையும் சந்திக்கத் தயார் என்று அறிக்கை விட்டு , கன்னட தமிழர்கள் சரிக்கு சரி நின்ற போது அங்கே வன்முறைகள் நின்றன. தமிழக மக்களும் "நீ அங்கே அடி. நாங்க இங்கே உதைக்கிறோம்" என்ற போது அது அவர்களை சிந்திக்க வைத்தது இல்லையா?//

இதன் பின்னணியில் உள்ளது முழுக்க முழுக்க அரசியல் தான். நம் மாநிலத்தை ஆண்ட கழகங்கள் பேசுகிறோம் பேசுகிறோம் என்று சொல்லியே காலத்தைக் கடத்தியது தான் மிச்சம். இங்கே நம் கழகக் குஞ்சுகளும், அங்கே வாட்டாள் நாகராஜ் போன்ற உதவாக்கரைகளும் ஒன்று சேர்ந்து உருவாக்கிய பிரச்சினையால் தான் தமிழன் கர்நாடகத்தில் அடிவாங்கினான். உண்மையில், எந்த ஒரு சாதாரண கர்நாடகவாசியும் இன்னொரு சாதாரண தமிழனை வதைக்க நினைப்பதில்லை என்பது தான் நிஜம்.

//அது காலம் கடந்தே ஈழத்தில் தொடங்கியது.எனக்குத் தெரிந்து 1958 : 1977 : 1983 என 1950களிலிருந்தே இந்தப் பிரச்சனையில் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல இலங்கையில் தமிழ் பேசும் அனைவரும் பாதிக்கப்பட்டனர். உண்ணாவிரதமிருந்தோர் தாக்கப்பட்டார்களே?//

தவறு தானைய்யா. இல்லையென்று சொல்லவில்லை. தாக்கியது நம்மூர் வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் தானே? அத்தகைய மக்களின் நோக்கம் கலகம் விளைவிப்பது தானே.

//1980களுக்கு பிறகுதானே இளைஞர் எழுச்சியாக ஆரம்பித்தது. வாழும் பருவத்தில் கருகிப் போக எந்த இளைஞனும் விரும்பமாட்டான். அவன் என்ன துறவறமா செல்கிறான்? அடுத்த நிமிடம் அவனது உயிர் போகும் என்று தெரிந்தே சிரிப்போடு வாழ்கிறான்.//

விரும்பிப் போகிறார்களே. இந்தியாவின் காஷ்மீரத்தில் இது நடக்கவில்லையா? போராளி என்று கூறிக்கொள்ளும் பலரில் சிலருக்கு பொருள் இலக்காகிறது, இன்னும் சிலர் வெறியால் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனர்.

//இராணுவம் என்பதும் போராளிகள் என்பதும் வேறு வேறு. இராணுவ சிப்பாய் மனது சாவதற்கு முன் யாரையாவது அனுபவித்து சாக துடிக்கிறது. அது நடந்தேயுள்ளது. போராளி சாகும் போது கூட தன் இனத்தை கரை சேர்க்க யாருக்காவது பாதுகாப்பு கொடுத்து உயிர் கொடுக்க நினைக்கிறது. விடுதலைப் புலி ஆதரவோடு பேசுவதாக யாராவது கருதினால் , ஏனைய போராளிகள் அனைவரும் தவறானவர்களே என்றாகிவிடும்.//

உங்கள் இலக்கணமே புரியவில்லை. நீங்கள் கூறுவது புலி ஆதரவு போல் தெரிகிறதோ இல்லையோ, இராணுவத்தை மட்டம் தட்டுவது போலுள்ளது நண்பரே.

//உங்கள் வீட்டில் புகுந்த திருடனுக்கு சாவிக் கொத்தைக் கொடுத்து அனைத்தையும் சுருட்ட இடமளித்து வீட்டிலுள்ளோரையும் கெடுத்துவிட்டு போக வழிவிடுபவராகவே கருத நேரிடும். என் குடும்பத்தை காக்க என நீ போராடுவது தவறில்லையோ? அதுபோலத்தான் இதுவும்....//

அப்படியானால் தமிழர்களையே கேடயமாக்குதல், அவர்களை பலிகடாவாக்குதல், அவர்களின் அடிப்படை வாழ்வுக்கான உரிமைகளை மறுத்தல், மற்ற தமிழ் இயக்கத்தலைவர்களை கொல்லுதல் இவையெல்லாம் நேரமையான போராளியின் லட்சணங்கள் என்று சொல்கிறீர்களா?

//தமிழர்கள் புலம்பெயர்ந்ததில் பல நன்மைகள் உண்டு. போராட்டத்தின் ஆதரவு புலம் பெயர்ந்தவர்களிடமிருந்தே வருகின்றன.//

ஆயுதங்களாகவும், ஆயுதங்கள் வாங்க பணமாகவும்! சபாஷ் சரியான வேலை. தொடர்ந்து செய்யுங்கள் நண்பரே.

//பல செய்திகள் உலகுக்கு அவர்கள் மூலமே பரவுகின்றன.//

பல தவறான செய்திகள் என்று கூறி இருந்தால் இன்னும் சரியாக இருக்கும்.

//சென்றிடுவீர் எட்டுத்திக்கும்.....எனும் பாரதியின் கருத்தாக்கம் ஈழத் தமிழர்களாலேயே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.//

பாரதியை ஏனையா வம்புக்கு இழுக்கிறீர்? அவர் என்று சொன்னார், எட்டுத் திக்கும் சென்று பொய் பரப்பு, ஆயுதம் குவி என்று?

//இந்திய தமிழர்கள் வெளிநாடு சென்றார்கள். உழைத்தார்கள். திரும்பினார்கள் என்பதே நிசம்.//

நிஜம்தான். இந்தியத் தமிழர்கள் உழைத்தார்கள், போதுமென்ற நிலை வந்தவுடன் வீடு திரும்பினார்கள். யாருக்கும் ஆயுதம் வாங்கவில்லை. பயங்கரவாதத்திற்கு ஆதரவு திரட்டவில்லை!

//ஈழத் தமிழர்களாலேயே உலகெங்கும் தமிழ் பரவியது.//

அப்படி போடுங்க அருவாளை. தமிழே உங்க பாட்டன் முப்பாட்டன் சொத்து என்கிறீர்கள். சரி சொல்லிவிட்டுப் போங்களேன்.

//இங்கே இலங்கை பிரச்சனையை பலரும் புரிந்து கொள்ளவேயில்லை.//

இதைத் தானே நானும் சொல்கிறேன். பலருக்குப் புரியவில்லை. சிலர் எல்லாம் தெரிதவரைப் போல் நடிக்கின்றனர். பலர் அதைக் காசாக்குகின்றனர். இன்னும் சிலர, இந்தப் பிரச்சினை பற்றி பொய் பிரச்சாரம் செய்கின்றனர்.

//மலேசியாவில் தமிழருக்கு உங்கள் கண்முன் நடப்பதென்ன? நாளை நடக்கப் போவது என்ன? இன்று அகிம்சையாளர்கள் சிறைப்பட்டுக் கிடக்கிறார்கள். அது நாளை வன்முறையாகாதென்பதற்கு என்ன உத்தரவாதம்? அவர்களது பூர்வீகம் இந்தியர் என்பதுதானே? அதற்காக என்ன செய்தீர்கள்?//

மலேசிய பிரச்சினையிலும் கூட இரு புறமும் தவறுகள் உண்டு. நாம் வாழும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நாம் வாழவேண்டும். உங்களுக்கு அந்தச் சட்ட திட்டங்களுடன் உடன்பாடு இல்லையெனில், மறுபடியும் இந்தியாவுக்கு வரவேண்டியது தானே? யார் வேண்டாம் என்றார்கள்? ஆனால் அவ்வாறு செய்யமாட்டார்கள். இந்தியாவில தான் பலர் இளித்தவாயன்கள், சிறுபான்மையின்ரைக் காக்கிறோம் பேர்வழி என்று அழிச்சாட்டிய அரசியல் செய்து ஊரை ஏமாற்ற முடியும். மற்ற நாடுகளில் அதே பருப்பு வேகாதையா.

76 comments:

Anonymous said...

நிஜம்தான். இந்தியத் தமிழர்கள் உழைத்தார்கள், போதுமென்ற நிலை வந்தவுடன் வீடு திரும்பினார்கள். யாருக்கும் ஆயுதம் வாங்கவில்லை. பயங்கரவாதத்திற்கு ஆதரவு திரட்டவில்லை!

can I put a smile(y) here?
you sounds like a baby in napkins repeating your mama says.

கொழுவி said...

இன்று புலிகளில் எத்தனை பேர் நன்கு படித்தவர்கள்//

நீங்கள் வீரப்பன் குழுபோலத்தான் புலிகளை ஒப்பிட்டிருக்கிறீர்கள் என்பதற்கு நல்ல சான்று. புலிகளில் சேர்ந்த உடன் ஏதோ காட்டுவாசிகள் போல் வேடமணிந்து கொண்டு போய் விடுவார்கள் என நினைக்கிறீர்கள்.

புலிகளின் அமைப்பில் எப்போதுமே ஒருவர் சண்டை பிடித்துக் கொண்டிருப்பதில்லை. இணையும் போதே சில பல தேர்வுகள் மூலம் அவரவரது தனித் திறமை அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப் படுகிறது. இராணுவவியலும் ஒரு துறைதான். கண்ணி வெடி தொழில் நுட்பம் வரை கணணித் தொழில் நுட்பம் வரை புலிகள் தமது தேவைகளை தாம்தான் நிறைவேற்றுகிறார்கள். வேறு யாரையும் வாடகைக்கு அமர்த்துவதில்லை.

போரில் காயமடைந்து களம் செல்ல முடியாதவர்கள் பலர் மிகச் சிறந்த தொழில் நுட்பவியலாளர்களாக இருக்கின்றார்கள். சிங்களம் ஆங்கிலம் தெரிந்தவர்களாக இருக்கின்றார்கள். ராணுவ நூல்களின் மொழிபெயர்ப்பாளர்களாக உள்ளார்கள். பாடகர்களாக.. விமானிகளாக (அதுவும் சும்மா கிடையாது. சொன்ன இடத்தில் தாக்குதல் நடாத்தும் திறனுள்ள) உள்ளார்கள்.

இவற்றையெல்லாம் பதிலாக்கிய பிறகுதான் எனக்கொரு கேள்வி வருகிறது. போராட்டம் முடிந்த பிறகு அவர்களால் டை கட்டி வேலைக்கு போக முடியுமா என கேட்ட உங்கள் அறிவு கொழுந்து விட்டு எரிகிறது. விரைவில் சாம்பராகி விடும்.

இந்தியா சுதந்திரம் அடைந்து விட்டதுதானே? எதற்காக இன்னமும் இராணுவம் உள்ளது. எதற்காக இராணுவ தலைவர்கள் உள்ளார்கள்.. எதற்கா இராணுவ விமானப் படை உள்ளது?

எல்லாவற்றையும் கலைத்துவிட்டு டை கட்டி வேலைக்கு போகலாமே சார் ?

உங்கள் கேள்வி உங்களுக்கே காமடியாக தெரியல்லையா :) :) :)

ஈழம் உருவான பிறகு - நீங்கள் சொன்ன படிக்காத போராளிகள்தான் இராணுவத் தலைவர்கள்.

அவர்களின் படைத்துறைப் பள்ளியில் 3 வருட இராணுவ கற்கை நெறி ஒன்று உள்ளது. தெரியுமா சார்..

அப்புறம் இவ்வாறான மொக்குத் தனமான கேள்விகளை கேட்கிறீங்களே.. நீங்க டை கட்டிதான் வேலைக்கு போறீங்களா..

சாரே.. நேர்மையாக - எனக்கு பிரபாகரனை பிடிக்காது - தமிழ்தேசியம் பிடிக்காது - அது என்னுடைய விருப்பம் - என்று சொல்லுங்க.. அதை விட்டுட்டு.. ஏதோ பெரிசா அறிவு சீவித்தனமா காரணங்களை கண்டு பிடித்து.. இதனாலதான் பிடிக்காது என்று சொல்லாதீங்க..

ஏன்னா அப்பிடி சொல்றது அப்பட்டமா தெரியுது.. யாரும் நம்பிறதுக்கில்லை.
வர்ட்டா :)

Madhusudhanan Ramanujam said...

//சாரே.. நேர்மையாக - எனக்கு பிரபாகரனை பிடிக்காது - தமிழ்தேசியம் பிடிக்காது - அது என்னுடைய விருப்பம் - என்று சொல்லுங்க.. அதை விட்டுட்டு.. ஏதோ பெரிசா அறிவு சீவித்தனமா காரணங்களை கண்டு பிடித்து.. இதனாலதான் பிடிக்காது என்று சொல்லாதீங்க..//

கொழுவி,
விடுதலைப் புலிகளை ஒரு நாட்டின் ராணுவத்திற்கு சமமாக நினைக்கும் உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை கொலைவெறி தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எனக்கு பிரபாகரன் என்ற தனி மனிதன் மீது எந்த ஒரு விருப்பு வெறுப்பும் இல்லை. ஆனால் அவரின் செயல்கள் நிச்சயம் கண்டிக்கத் தக்கதே.

//can I put a smile(y) here?
you sounds like a baby in napkins repeating your mama says.//

You've to try better than this buddy. யாருக்கைய்யா ஆயுதம் வாங்கினான் தமிழன்?

கொழுவி said...

சமாதானம் பேசும் வேலையை ஒழுங்காகச் செய்திருந்தால் இது ஐந்து வருடங்களில் முடிந்திருக்காதா?//

ஐயோ ஐயோ..
48 இல் இருந்து 83 வரை - சமாதானம்தான் பேசினார்கள். எத்தனை வருசம் என்று கூட்டி கழித்து பாருங்கள்.

சரி - 2002 இலிருந்து 2007 வரை அட.. உங்க கணக்குபடி சரியாக 5 வருசம்.. உங்க கணக்குப்படி முடிஞ்சிருக்கணுமே ..?

சார் - புலி சாகணும் - பிரபாகரன் ஒழியணும் - என எழுதுங்க - சாபம் போடுங்க - அல்லது இலங்கைத் தமிழினமே இல்லாது போகட்டும் என்று சொல்லுங்க - No problem...

ஆனா.. நீங்கள் சமாதானம் பேசலாம்தானே.. என கோமா நிலையிலிருந்து வந்து ஆலோசனைகள் சொல்லாதீங்க-

புலிகள் ஒழியணும் என்ற உங்க ஆசையை நேரடியா தெளிவா சொல்லிட்டு போங்க.. அதை விட்டுவிட்டு அப்பிடி இப்பிடி ஆயிரத்தெட்டு கதைகள் சொல்லி எதுக்கு சார் இதெல்லாம் ?

ஆமா நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்தியால நிறைய பேர் வாழ்க்கைத் தரமற்று பட்டினி பசியில இருக்கிறாங்கதான். இந்திய அரசு இலங்கைக்கு கொடுக்கிற ஆயுத தளபாடங்களை நிறுத்தி அந்த பணத்தை இந்திய மக்களுக்கு செலவழிக்கலாமே..

என்ன சொல்றீங்க.. ?

மோகன் கந்தசாமி said...

///can I put a smile(y) here?
you sound like a baby in napkins repeating what your mama says.///

நானும் ஒரு ஸ்மைலி போட்டுக்கறேன். விவாதத்திற்கான குறைந்த பட்ச விபரம் கூட தெரியாதவருடன் விவாதிப்பவன் முட்டாள். என்னையும் சேர்த்து பல முட்டாள்கள் வந்து சென்றுள்ளார்கள் போலிருக்கு!

(மதுசூதனன் சார், நான் உங்கள ஒன்னும் சொல்லல, தயவு செஞ்சு எனக்கு பதில் பின்னூட்டம் போட்றாதிங்க!)

கொழுவி said...

விடுதலைப் புலிகளை ஒரு நாட்டின் ராணுவத்திற்கு சமமாக நினைக்கும் உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை //

அப்பிடி நினைப்பதற்கான சகல காரணங்களும் உண்டு.
இந்தியா பாகிஸ்தான் நாடுகள் சண்டை பிடிக்கின்றன - ஒருவாரமோ இரண்டு வாரங்களிலேயோ சண்டை முடிகிறது. யாரோ ஒருவர் வெற்றி பெறுகிறார்கள்.

30 ஆண்டு காலத்தில் இன்னமும் தோற்றுப் போகாமல் புலிகள் இருக்கிறார்களே.. (இந்திய இராணுவத்திடமும் சேர்த்துதான்) இலங்கை ராணுவத்தால் வெல்ல முடியாமல் இருக்கிறதே - 30 வருசமா இலங்கையும் தொடர்ந்து சண்டையிட்டுக் கொண்டுதானே இருக்கிறது -

ஒரு நாட்டின் இராணுவத்தை எதையெல்லாம் கொண்டு அளவிட்டு அது ஒரு ராணுவம் என்கிறீர்களோ - அதே காரணங்களால் அவர்களும் இராணுவம்தான்.

புலிகளை எந்தக் காரணங்களால் பயங்கரவாதிகள் என்கிறீர்களோ அதே காரணங்களால் இலங்கை இந்தியா அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளும் பயங்கர வாத நாடுகள்தான். பயங்கர வாதிகள்தான்.

கொழுவி said...

என்னையும் சேர்த்து பல முட்டாள்கள் வந்து சென்றுள்ளார்கள் போலிருக்கு!//

என்ன இருந்தாலும் என்னை இப்பிடி சொல்லியிருக்க கூடாது மோகன் :) :)

கொழுவி said...

ஆனால் அவரின் செயல்கள் நிச்சயம் கண்டிக்கத் தக்கதே.//

கண்டியுங்க - ஆனா அதே இதய சுத்தியோடு - இந்திய மத்திய அரசையும் நீங்க கண்டிக்கிறேன் எனச் சொன்னால் நான் பாராட்டுகிறேன்.

மோகன் கந்தசாமி said...

நண்பர் கொழுவி,

///என்ன இருந்தாலும் என்னை இப்பிடி சொல்லியிருக்க கூடாது மோகன் :) :) //

சொல்லிஇருக்க கூடாது தான்.

"எக்சூச்மி சார், இந்த அட்ரஸ் சொல்லமுடியுமா?" என ஒருவர் வழி கேட்க, நாமும் மிக பொறுப்பாக பதில் சொல்ல, உடனே வழி கேட்டவர் திரும்பி நின்று முதுகு புறம் கிழிந்த சட்டையை காட்டினால் எப்படியிருக்கும்? (இது ஒரு வடிவேல் காமெடிதான்!).

சரி அதை விடுங்கள் கொழுவி!, நீங்கள் நலமா?

கொழுவி said...

நலம்தான்..
என்ன அவ்வப்போது அட்வைஸ் கேட்டு B.P ஏறுது. இவங்ககிட்ட அட்வைஸ் கேட்கிறதுக்கு சிங்கள ஆமி கையில துப்பாக்கி கொடுத்து சுடுடா என்னையென்று செத்து போலாம்.

இவிங்க கதையை பார்க்கும் போது ஏதோ முந்தா நேத்து நாங்க எங்கள் உரிமைகளை கேட்டு போன போது அவன் பார்க்கலாம்னு சொன்னது போலவும் - என்னது பார்க்கலாமா இந்தா பார் என பின்னாடி வைச்சிருந்த துப்பாக்கியை எடுத்து அவங்களையெல்லாம் படபடவென்று சுட்டுத் தள்ளிட்டு வந்தது போலவும் நெனச்சுக்கிட்டு -

நீங்கள் அமைதியா அகிம்சையா சொல்வழி கேட்டு நடக்கணும் - துப்பாக்கியை தூக்க கூடாது சரியா என்று சொல்றாங்க...

58 இல் உரிமை கேட்ட தமிழ்தலைவர்களை சிங்களம் அடித்து உதைத்து கொன்றொழித்த போது--

பிரபாகரனுக்கு வயது 4.

இதுக்கு மேல நான் என்னத்த சொல்றது

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

அஜீவன் முன்பு வேறொரு இயக்கத்தில் இருந்தவர். அந்த இயக்கத்தை புலிகள் தடை செய்து அழித்த பிறகு தற்போது புலிகளுக்காக வாதாடுகிறார். நாளை புலிகள் இல்லாத காலத்தில் யாருடன் போய் சேருவாரோ தெரியாது. இப்படியான கட்சிமாறிகளை சீரியஸாக எடுக்க வேண்டாம்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Madhusudhanan Ramanujam said...

//30 ஆண்டு காலத்தில் இன்னமும் தோற்றுப் போகாமல் புலிகள் இருக்கிறார்களே.. (இந்திய இராணுவத்திடமும் சேர்த்துதான்) //

இந்திய ராணுவம் வெறிறி பெறாததன் காரணம் அரசியல். உங்களுக்கு தெரியாது இருக்காது கொழுவி அவர்களே. புலிகளை உருவாக்கியதில் பெரும் பங்கு இந்தியாவுக்கும் உண்டு என்று. அந்த அரசியல் காரணமாகத்தான் புலிகள் அன்று வீழவில்லை. இந்தியாவின் மத்திய அரசை நான் நிச்சயம் வன்மையாகக் கண்டிக்கிறேன், தன் சுய லாபத்திற்காக புலிகளை வளர்த்தமைக்காக. இன்னொரு புறம், ஐ.பி.கே.எஃ எனும் பெயரில் படைகளை அனுப்பி நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் என்று நாடகம் நடத்தியதற்காக.

என் தந்தை ராணுவத்தில் பணியாற்றியவர். அவருடைய நண்பர்கள் சிலரை இலங்கைப் போரில் அவர் இழந்தவர். இன்னும் சிலர் அப்போரில் ஊனமுற்றனர். அவர்கள் இன்று எங்கள் கண் முன்னால் வலியுடன் வாழ்ந்து வருகிறனர். போரின் வலி எமக்கும் தெரியும்.

//48 இல் இருந்து 83 வரை - சமாதானம்தான் பேசினார்கள். எத்தனை வருசம் என்று கூட்டி கழித்து பாருங்கள்.

சரி - 2002 இலிருந்து 2007 வரை அட.. உங்க கணக்குபடி சரியாக 5 வருசம்.. உங்க கணக்குப்படி முடிஞ்சிருக்கணுமே ..?//

இதில் எந்தக் கட்டத்திலும் சமாதானம் உண்மையில் பேசப்படவில்லை. சமாதானம் எனும் பெயரில் இரு தரப்பினரும் தங்களை வலுப்படித்திக் கொள்ள நேரமாகவே இந்த போர் நிறுத்த சமயங்கள் இருந்து வந்துள்ளன.

இன்னொரு புறம் மிகவும் சர்ச்சைக்குரிய ஒரு விஷயம் இந்தியா இலங்கைக்கு அளித்து வரும் உதவிகள். இதற்கு சர்வதேச சூழ்நிலையும் ஒரு காரணம். இலங்கையுடன் பாக் அல்லது சீனா நட்பு பாராட்டுவது இந்தியாவுக்கு நல்லதல்ல நண்பரே. மேற்கொண்டு சொல்ல வேண்டியதில்லை. உங்களுக்கே புரியும் என்று நினைக்கிறேன்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...
This comment has been removed by a blog administrator.
கொழுவி said...

இதில் எந்தக் கட்டத்திலும் சமாதானம் உண்மையில் பேசப்படவில்லை. //

ஓ பிரபாகரன் பிறப்பதற்கு முன்னாலும் - சமாதான பேச்சுகளின் போது இரு தரப்பும் தங்களை பலப்படுத்திதான் வந்தார்களா.. ? அதுயாருங்க.. 48 இல் ஆயுதம் ஏந்தி போராடிய தமிழர் அமைப்பு?


இலங்கையுடன் பாக் அல்லது சீனா நட்பு பாராட்டுவது இந்தியாவுக்கு நல்லதல்ல நண்பரே. மேற்கொண்டு சொல்ல வேண்டியதில்லை. உங்களுக்கே புரியும் என்று நினைக்கிறேன்.//

தனது பிராந்திய நலனுக்காக பிறருக்கு ஏற்படும் - அசௌகரியங்களை கருத்திலெடுக்காது செயற்பட இந்தியாவினால் முடியுமானால் ..

புலிகள் / ஈழத்தமிழர்கள் / ஈழம் - தனது தேச நலனுக்காக சில நகர்வுகளை மேற்கொள்ளும் போது - வேறு சிலருக்கு அசௌகரியங்கள் ஏற்பட்டால் நீங்கள் புரிந்து கொண்டு அமைதி காக்க வேண்டும்.

அதெல்லாம் கெடயாது. நாம பெரிய நாடு. பிராந்தி நாடு வல்லரசு - நாங்க செய்யிறதெல்லாம் நீங்க செய்ய முடியாது என்று சொல்லி மேலும் மேலும் உங்களைத் தோலுரித்துக் கொள்ளாதீர்கள்.

இந்திய ராணுவம் வெறிறி பெறாததன் காரணம் அரசியல். உங்களுக்கு தெரியாது இருக்காது கொழுவி அவர்களே. //

மீசையில் மண் ஒட்டியிருக்கிறது.
மணலாற்றுக் காட்டினை சுற்றி வளைத்து - பிரபாகரனை கொல்லும் திட்டத்தோடு முன்னேறிய எத்தனை இந்திய இராணுவத்தினர் தங்கள் கால்களை இழந்து விழுந்தனர் என்பதை தந்தையிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். இதோ பிரபாகரனை நெருங்கி விட்டோம் - இன்று மாலை கொன்று விடுவோம் .. என எத்தனை அறிவிப்புக்கள்

2 தடவைகள் செய்திகளில் கொலை செய்தும் இருக்கிறார்கள். நினைவிருக்கிறதா?

சாரம் கட்டிய பொடியங்களை சுருட்டு பற்றி முடிப்பதற்குள் அழித்து விடுவோம் என்ற கர்ச்சனைகள்..

எத்தனை எத்தனை..

இப்போ அரசியலாம் :)
ஒரே நகைச்சுவையாக உள்ளது போங்கள்.

Madhusudhanan Ramanujam said...

பதிவர்களுக்கும் படிப்பவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். யாரையும் சாட வேண்டாம் என்று கூற மாட்டேன். சாடுவது உங்கள் உரிமை, ஆனால் அதில் ஒரு நாகரீகத்தை கடைப்பிடிக்குமாறு வேண்டிக்கொள்கிறேன். படிப்பவர்கள் நாகரீகத்துடன் பின்னூட்டமிடுவீர்கள் எனும் நம்பிக்கையில் தான் பின்னூட்ட வாசலை மட்டறுத்தலின்றி திறந்து வைத்துள்ளேன். அதை தயவு செய்து தவறாய் பயன் படுத்த வேண்டாம்.

Madhusudhanan Ramanujam said...

//ஒரே நகைச்சுவையாக உள்ளது போங்கள்.//

தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குபவன் போல் பாசாங்கு செய்பவனை எழுப்ப இயலாது. உங்கள் கதையும் அதே தான் கொழுவி. உங்களுக்கு புலிகள் மாவீரர்கள். அப்படியே இருங்கள். சரித்திரம் உங்களை மிகவும் போற்றும். நமக்கு ஒரு விஷய்ம் தெரியாது என்பதற்காக அப்படி எந்த ஒரு விஷயமும் இல்லை என்பவன் முட்டாள்.

மீண்டும் சொலிகிறேன். இந்திய ராணுவம் நினைத்தால் உங்கள் புலிகள் ஒரு அடி நிலத்தைக் கூட பிடிக்க முடியாது உங்கள் இலங்கையில். அப்படி உங்களுடைய புலிகள் நிஜத்தில் புலிகள் என்றால் தற்காத்துக் கொள்ளுங்களேன். ஏன் இந்தியா ராணுவ உதவி புரிகிறது என்று கூப்பாடு போடுகிறீர்கள்? வெறும் தொழில்நுட்பத்தை தந்ததற்கே இத்தனை கூச்சல்!

Anonymous said...

பூனைகுட்டி வெளிகிட்டு விட்டது அபோது நீங்க இந்திய ராணுவ உதவிகளை ஆதரிகிறீர்கள், அதை ஒரு வரியில் சொல்லி விட்டு போகலாமே.

கொழுவி said...

தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குபவன் போல் பாசாங்கு செய்பவனை எழுப்ப இயலாது. //

இந்த கருத்துடன் 100 சதவீதம் ஒத்துப் போகிறேன் :)

இந்திய ராணுவம் நினைத்தால் உங்கள் புலிகள் ஒரு அடி நிலத்தைக் கூட பிடிக்க முடியாது உங்கள் இலங்கையில். //

இத இத இந்த பிராந்திய மேலாதிக்க பெரியண்ணன் மனநிலையைத் தான் உங்களிடமிருந்து எதிர்பார்த்தேன்.

வெறும் தொழில்நுட்பத்தை தந்ததற்கே இத்தனை கூச்சல்!//

hahaha நீங்க ராடரை சொல்லியிருந்தால்..

வெறும் வேலை செய்யாத தொழில் நுட்பத்தை தந்ததற்கே என என்று வந்திருக்க வேண்டும்.

எதுவாயினும் - புலிகள் வென்று விட்டால் - வெற்றி ஒருவருக்கு! தோல்வி இருவருக்கு :)

இந்தியா நினைத்தால் புலிகளை அழித்தொழிக்கலாம். உண்மைதான். ஆனால் 87 இல் 3 வருடம் தண்ணி காட்டியவர்களுக்கு 2008 இல் 10 வருடங்களுக்கு மேலேயே தண்ணி காட்ட முடியும். காஸ்மீர் குளிருக்கு பழக்கப் பட்டவர்களுக்கு வன்னிக் காடுகளின் வெப்பம் ஒருபோதும் பழக்கமாயிருந்ததில்லை. ஆமாம் அதே வன்னிக் காடுகள் அப்படியே இருக்கின்றன. :)

கொழுவி said...

தவறு தானைய்யா. இல்லையென்று சொல்லவில்லை. தாக்கியது நம்மூர் வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் தானே? அத்தகைய மக்களின் நோக்கம் கலகம் விளைவிப்பது தானே.
//

என்னாது - வட்டாள் நாகராஜ் பொலிஸ் படையில் இருந்தாரா - சொல்லவேயில்லையே :)

அல்லது இந்தியாவில் கண்ணீர் புகை குண்டுகளையும் லத்தி அடிகளையும் துப்பாக்கி சூடுகளையும் வட்டாள் நாகராஜ் போன்றவர்கள்தான் செய்கிறார்களா? ஐய்யயோ அந்த அளவிற்கு சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதா :) அட கடவுளே

கொழுவி said...

இந்திய ராணுவம் நினைத்தால் உங்கள் புலிகள் ஒரு அடி நிலத்தைக் கூட பிடிக்க முடியாது உங்கள் இலங்கையில். //

ஆனால் இந்தியா நினைத்தால் சிரிலங்கன் ஆர்மி பல அடி நிலத்தை பிடிக்கும் நமது இலங்கையில்.. அப்படித்தானே சார் ? :)

Madhusudhanan Ramanujam said...

//ஆனால் இந்தியா நினைத்தால் சிரிலங்கன் ஆர்மி பல அடி நிலத்தை பிடிக்கும் நமது இலங்கையில்.. அப்படித்தானே சார் ? :)//

உங்களையும் ஆதரிக்கின்றனரே சிலர். அவர்களைச் சொல்ல வேண்டும் கொழுவி. எல்லாரையும் கொன்னுட்டு, சுடுகாட்டை கட்டி ஆளுங்கள். உங்களுக்கு அதில் தான் மகிழ்ச்சி போல. இப்படியே இருங்க. வெளங்கிடும் உங்க இலங்கை.

இந்த பின்னூட்டங்களை படிக்கும் இந்தியர்கள், இலங்கை வாழ் தமிழர்கள் சிலரின் இந்தியா குறித்த எண்ணத்தை புரிந்து கொள்ளவேண்டும்.

Madhusudhanan Ramanujam said...

//என்னாது - வட்டாள் நாகராஜ் பொலிஸ் படையில் இருந்தாரா - சொல்லவேயில்லையே :)//

போலீஸால் என்று சுதந்திரமாக செயல்பட முடிந்தது? ஆட்சியாளர்களின் பகடைக் காய்கள் தானே அவர்கள். இதையும் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் என்ன சொல்ல?

கொழுவி said...

போலீஸால் என்று சுதந்திரமாக செயல்பட முடிந்தது? ஆட்சியாளர்களின் பகடைக் காய்கள் தானே அவர்கள். இதையும் உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால் என்ன சொல்ல? //

hahahaha

அப்படி வாங்க வழிக்கு .. இந்த இடத்தில நீங்க முன்னாடி சொன்னதிலிருந்து முரண்படுவது புரிகிறதா.. புரியலையா... சரி நான் விளங்கப்படுத்துறேனே :)

//.எனக்குத் தெரிந்து 1958 : 1977 : 1983 என 1950களிலிருந்தே இந்தப் பிரச்சனையில் ஈழத்தமிழர்கள் மட்டுமல்ல இலங்கையில் தமிழ் பேசும் அனைவரும் பாதிக்கப்பட்டனர். உண்ணாவிரதமிருந்தோர் தாக்கப்பட்டார்களே?//

இப்படி அஜீவன் சொன்னது ஆட்சியாளர்கள் எங்களைத் தாக்கினார்கள் என்று புரிய வைக்கத்தான். ஆனால் நீங்கள் அதை சைக்கிள் கப்பில் மறைத்து -

அது ஆட்சியாளர்கள் இல்லை. வட்டாள் நாகராஜ் போன்ற சில சமூக கலகம் விளைவிக்கும் நபர்கள்தான் என்றீர்கள்.

//தாக்கியது நம்மூர் வாட்டாள் நாகராஜ் போன்றவர்கள் தானே? அத்தகைய மக்களின் நோக்கம் கலகம் விளைவிப்பது தானே//

அதற்கு நான் இல்லை. பொலீசார்தான் தாக்கினார்கள் என்றேன்.

இப்போ நீங்கள் பொலீசார் என்ன செய்வார்கள். ஆட்சியாளர்களின் பகடைக் காய்கள் என்கிறீர்கள்.

அப்போ ஆட்சியாளர்கள்தான் - அமைதி வழியில் போராடியவர்களை தாக்கினார்கள் என்பதை ஒப்புக் கொள்கின்றீர்கள் தானே ?

இதை முதலே சொல்லியிருக்கலாம் தானே ?

கொழுவி said...

இந்திய ராணுவம் நினைத்தால் உங்கள் புலிகள் ஒரு அடி நிலத்தைக் கூட பிடிக்க முடியாது உங்கள் இலங்கையில். அப்படி உங்களுடைய புலிகள் நிஜத்தில் புலிகள் என்றால் தற்காத்துக் கொள்ளுங்களேன். ஏன் இந்தியா ராணுவ உதவி புரிகிறது என்று கூப்பாடு போடுகிறீர்கள்? வெறும் தொழில்நுட்பத்தை தந்ததற்கே இத்தனை கூச்சல்!//

இந்த பின்னூட்டங்களை படிக்கும் இந்தியர்கள், ஒன்றோ இரண்டு தமிழ்பேசும் இந்தியர்களின் ஈழம் குறித்த எண்ணத்தை புரிந்து கொள்ளவேண்டும்.

Madhusudhanan Ramanujam said...

//அப்போ ஆட்சியாளர்கள்தான் - அமைதி வழியில் போராடியவர்களை தாக்கினார்கள் என்பதை ஒப்புக் கொள்கின்றீர்கள் தானே ?//

இதை நான் என்றும் மறுக்கவில்லை. ஈழத்துக்கு ஆதரவாய் ரத்தம் சிந்துவோம் என்று வெட்டிக் கூச்சல் போடும் அரசியல்வாதிகள் இருக்கத்தானே செய்கின்றனர். எங்களின் தலை எழுத்து, இவர்களை ஆட்சியாளர்களாக்கிவிட்டு அழுது கொண்டிருக்கிறோம்.

கொழுவி said...

எல்லாரையும் கொன்னுட்டு, சுடுகாட்டை கட்டி ஆளுங்கள். உங்களுக்கு அதில் தான் மகிழ்ச்சி போல. இப்படியே இருங்க. வெளங்கிடும் உங்க இலங்கை.//

சீனா பாகிஸ்தான் கொடுக்கக் கூடாதென்று இந்தியா கொடுத்தாலும் - இலங்கை எல்லாரையும் கொன்னுட்டு சுடுகாட்டைதான் கட்டி ஆளும். இந்தியாவிற்கும் அதில்தானா மகிழ்ச்சி -

ஓ.. அப்போ நீங்கதான் வௌங்கவிடாமல் செய்திட்டு இருக்கிறீகளா ?

என்ன நியாயமுங்க இது - இந்தியா செய்தால் - அது பிராந்திய நலன் என்கிறீங்க..

நாங்க ஏதாச்சும் செய்தால் - சுட்டுக்கிட்டு சா என்கிறீங்க.

முடிவா சொல்லுங்க ?

இந்தியாவிற்கு இலங்கையில் உள்ள தமிழர்களின் உயிர் முக்கியமா ? அல்லது தனது பிராந்திய நலன் முக்கியமா? ஒத்தை வார்த்தையில் பதில் சொன்னால்.. நாங்க பொத்திட்டு போவமில்ல...

Madhusudhanan Ramanujam said...

//இந்தியாவிற்கு இலங்கையில் உள்ள தமிழர்களின் உயிர் முக்கியமா ? அல்லது தனது பிராந்திய நலன் முக்கியமா? ஒத்தை வார்த்தையில் பதில் சொன்னால்.. நாங்க பொத்திட்டு போவமில்ல...//

நிச்சயம் சுயநலம் உண்டு. இந்தியாவிற்கு முதலில் முக்கியம் இந்தியாவின் நலன். இன்னொருவரை கெடுத்துத் தான் பிழைக்கவேண்டும் என்றில்லை. ஆனால் எங்களை தற்காத்துக் கொள்ளுதல் என்பது எங்களுக்கு நிச்சயம் முக்கியமே. தனக்கு மிஞ்சித்தான் தானமும் தர்மமும்!

கொழுவி said...

நிச்சயம் சுயநலம் உண்டு. இந்தியாவிற்கு முதலில் முக்கியம் இந்தியாவின் நலன். //

என்னங்க நீங்க.. இப்பிடி சொல்ற நீங்கதான் முன்னாடி இதே பதிவில் என்ன சொல்லியிருக்கிறீங்க தெரியுமா?

//இந்தியாவின் மத்திய அரசை நான் நிச்சயம் வன்மையாகக் கண்டிக்கிறேன், தன் சுய லாபத்திற்காக புலிகளை வளர்த்தமைக்காக. //

புலிகளை வளர்த்ததும் இந்தியா தன்னுடைய சுய லாபத்திற்காக என்றால் - இந்தியாவிற்கு முதலில் தன்னுடைய லாபம்தானே முக்கியம். தனது நலனுக்காக அது புலிகளை வளர்த்தது. அப்போ அது சரிதானே ? எதற்கு கண்டிக்கணும். ?

அல்லது இன்னொரு இருபது வருடத்துக்கு பிறகு தன் சுயலாபத்திற்கா இந்தியா இலங்கைக்கு ஆயுதம் கொடுத்ததை நான் கண்டிக்கிறேன்னு சொல்வீங்களோ தெரியாது. சொல்வீங்களா?

//இன்னொரு புறம், ஐ.பி.கே.எஃ எனும் பெயரில் படைகளை அனுப்பி நாங்கள் தீவிரவாதத்திற்கு எதிரானவர்கள் என்று நாடகம் நடத்தியதற்காக.//

ஓ.. தீவிரவாத புலிகளை ஒழிக்கத்தான் ஐபிகேஎப் அங்கு வந்ததா? ஏமாத்திப்புட்டாங்க சார்.. ஏதோ போர் நிறுத்தம் ஏதோ அமைதி ஏதோ அமைதியை கண்காணிக்கும் படையாகத்தான் ஐபிகேஎப் வந்தது என்று சொல்லி ஏமாத்திப்புட்டாக..

இவ்ளோ நாளும் அமைதி காக்க வந்தவங்களை புலிகள் எதற்கு தாக்கினார்கள் என குழம்பிட்டு இருந்தேன். இப்பதான் புரியும்.. அவங்க புலிகளை அழிக்க வந்தவங்கதான் என்று

அப்பச் சரி.. சரியாத்தான் எல்லாம் நடந்திருக்கு

Madhusudhanan Ramanujam said...

//அப்பச் சரி.. சரியாத்தான் எல்லாம் நடந்திருக்கு//

இப்படி பேசிக்கொண்டே போகலாம். முடிவு என்ன? அதைப்பற்றித் தான் ஒருவரும் பேசுவதில்லை. என்ன நடந்தது என்பதில் காட்டும் அக்கறை என்ன நடக்கவேண்டும் என்பதில் யாருக்கும் இல்லை.

கொழுவி said...

என்ன நடக்க வேண்டும்?
மிகத் தெளிவாகத்தான் இருக்கிறோம்.
தமிழீழம் என்னும் தனிநாடு போராட்டத்திற்கான நோக்கம். அதிகபட்ச தீர்வு.
ஆனால் அதுவே முடிந்த முடிவல்ல! இலங்கையென்னும் ஒற்றை நாட்டில் தமிழர்விரும்பும் சம உரிமைத் தீர்வுக்கு தமிழர்கள் எப்போதும் தயார்.
ஆனால் அது சிறிலங்கா அரசின் சட்டத்தோடு தொடர்புடையது. அவர்களாக முன்வந்து சட்டங்களை மாற்றி தமிழர்விரும்பும் சுயாட்சி சமஉரிமையைத் தரமுடியும்.

அல்லது சிறிலங்காவை யாரேனும் மிரட்டி அவ்வாறு செய்ய முடியும்.

அல்லது புலிகளின் ஆயுத பலம் சிறிலங்காவின் இராணுவ பொருளாதாரத்தை சிதைத்து - சுயாட்சி வழங்கும் தீர்வொன்றிற்கு சிறிலங்கா அரசை பணிய வைக்கும். புலிகளின் ஆயுதம் தனியே தனிநாட்டுக்கு மட்டுமானதல்ல. இலங்கையென்னும் ஒற்றை நாட்டிற்குள் தமிழருக்கு சுயாட்சி தீர்வு தர சிறிலங்கன் அரசை வழிக்கு கொண்டு வருவதும்தான்.

ஆயுதமற்ற நிலையில் அவ்வாறான ஒரு நிலைக்கு சிறிலங்கன் வரப்போவதில்லையென்பதனால் - ஆயுதமே பலம்.

அல்லது சர்வதேச சூழ்நிலைகள் மாறினால்.. தமிழீழம் அமைவது இந்திய நலனுக்கு உகந்தது என வழமை போலவே இந்தியா தனது நலன் சார்ந்து முடிவுகள் எடுத்தால் - (அத நீங்களும் ஆதரிக்கணும். ஏன்னா இந்திய நலன்தானே முக்கியம் ) இலங்கை இரண்டாகும் நிலையும் உருவாகலாம்.

பாகிஸ்தான் தோன்றிய போது வங்கதேசம் உருவாகும் என யார் கண்டார் ?

இராம.கி said...

கொழுவி,

கல்லில் நார் உரிக்க முடியுமா? விளங்காதவரோடு பேசி உங்கள் நேரத்தை வீணடித்துக் கொள்கிறீர்களே?
இதை விடுத்து, வேறு உருப்படியான வேலையைப் பாருங்கள்.

தமிழீழம் மலர வேண்டும். அது ஒன்றுதான் தீர்வு.

அன்புடன்,
இராம.கி.

Anonymous said...

//இராம.கி said...
கொழுவி,

கல்லில் நார் உரிக்க முடியுமா? விளங்காதவரோடு பேசி உங்கள் நேரத்தை வீணடித்துக் கொள்கிறீர்களே?
இதை விடுத்து, வேறு உருப்படியான வேலையைப் பாருங்கள்.

தமிழீழம் மலர வேண்டும். அது ஒன்றுதான் தீர்வு.

அன்புடன்,
இராம.கி.//

ஜயா தெய்வம் போல வந்து எங்களை காப்பாற்றியதுக்கு நன்றி இனி எனக்கு நித்திரைவரும்.

Madhusudhanan Ramanujam said...

//ஜயா தெய்வம் போல வந்து எங்களை காப்பாற்றியதுக்கு நன்றி இனி எனக்கு நித்திரைவரும்.//

விருப்பமில்லை என்றால் வரவேண்டாமே. என்னவோ நான் உங்களை கூப்பிட்டு இதைப் படி ஈழப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று சொன்னது போல் பில்டப் பண்ணுகிறீர்களே. எல்லாருமே ஒரு டைப்பா தான்யா அலையுறீங்க! போங்க போய் நிம்மதியா தூங்குங்க.

Anonymous said...

இராம.கி. எல்லாம் ஒரு மனுஷன்னு அவன் பின்னூட்டத்தையெல்லாம் ஏம்ப்பா அனுமதிக்கிறீங்க? நாலு வாரம் முன்னாடி அவன் தெருவிலே ஒரு குழாயடிச் சண்டை. வீட்டு கதவை மூடி வெச்சிட்டு ஜன்னல் கதவு வழியா அதை ரசிச்சு பார்த்த பெரிய மனுஷ நாதாறி அவன். இல்லன்னு மனசாட்சின்னு ஒண்ணு இருந்தா தொட்டு சொல்லச் சொல்லுங்க. "நமக்கு ஏன் சார் வம்பு"ன்னு கேட்டான். வீட்டுக்குள்ள உட்கார்ந்து கம்ப்யூட்டரிலே தட்டுறாதுன்னா ஒலக விஷயத்தை பே(த்து)சுவான்.

Anonymous said...

ஆமாம் ராம.கீ. தீர்வு சொல்லிட்டாம்பா. தமிழீழம் ஒன்று தான் தீர்வு. ராஜபக்ஷே கேட்கலைன்னா பிரபாகரன் விட்டுட மாட்டாரு. அப்படியே பிரபாகரன் ஒத்துக்கலைன்னா அப்புறம் தான் இருக்குது மேட்டரே. நம்ம இராம.கீ. நேரடியா போராட்டத்திலே இறங்கி தமிழீழத்த புடிச்சுக் கொடுத்திட்டு தான் மறு வேலை பார்ப்பாரு. கூடவே சோசப்பு பால்ராசு மாதிரியான அல்லூலுயா கும்பலையும் சேத்துக்குவாரு.24 மணி நேரத்திலே நம்மாளு தமிழீழத்தை புடிச்சு கொடுத்துடுவாரு பாருங்க. அதனால தான் அது மட்டும் தான் ஒரே தீர்வுன்னு தெகிரியமா சொல்லிருக்காரு.

stanjoe said...

//30 ஆண்டு காலத்தில் இன்னமும் தோற்றுப் போகாமல் புலிகள் இருக்கிறார்களே.. (இந்திய இராணுவத்திடமும் சேர்த்துதான்) //

I could not resist my laugh seeing the above comments.

Then why did you joing Premadasa and fought againt IPKF..

Remember IPKF made you forget the word "EElam"...

Koluvi Sir,

When is the first time LTTE fought IPKF face to face..?

They will throw bomb at the back of Army and then run and hide in the hospital..and civilian are , civilian housed..

Dont you know that Between October and December 1987, the IPKF drove the LTTE out of Jaffna and bottled it up in the Vanni jungles.

Actually the LTTE could have been militarily eliminated had the IPKF had a clear political will behind it.

Read more on the book written by Anton Balsingam's wife on how they (Prabaharan, Anton balasingam and his wife) lived thier life on those days

Madhusudhanan Ramanujam said...

//Read more on the book written by Anton Balsingam's wife on how they (Prabaharan, Anton balasingam and his wife) lived thier life on those days//

அட ஏங்க நீங்க வேற, பாலசிங்கம் புல்லுருவி, வந்தேரி புழலேரின்னு அங்கையும் கதைய அவுத்து வுட்ருவானுங்க.

-L-L-D-a-s-u said...

I like both the jokes .

//எக்சூச்மி சார், இந்த அட்ரஸ் சொல்லமுடியுமா?" என ஒருவர் வழி கேட்க, நாமும் மிக பொறுப்பாக பதில் சொல்ல, உடனே வழி கேட்டவர் திரும்பி நின்று முதுகு புறம் கிழிந்த சட்டையை காட்டினால் எப்படியிருக்கும்? (இது ஒரு வடிவேல் காமெடிதான்!).
//
.

// இந்திய ராணுவம் நினைத்தால் உங்கள் புலிகள் ஒரு அடி நிலத்தைக் கூட பிடிக்க முடியாது உங்கள் இலங்கையில்.//

Anonymous said...

சொன்னேன்ல. இதோ வந்தாச்சு எல்.எல்.தாசு அல்லூலயா? மத்த அல்லூலயா கும்பல் எல்லாம் எங்கப்பா?

ஜோ / Joe said...

கொழுவி,
நீங்க இவ்வளவு நல்லவரா?

ஒரு வடிகட்டின மடையன் கிட்ட போய் இவ்வளவு நேரம் விவாதமா ?

இவன் ஒரு லூசு-ங்குறது உலகம் தெரிஞ்ச விசயமாச்சே .

Anonymous said...

தம்மால் தமது மக்களுக்கு உணவு கொடுக்க முடியுமானால் புலிகள் எதற்காக அரசாங்கம் உணவு கொடுக்கவில்லை என்று குற்றம் சாட்ட வேண்டும்? தமிழ் ஈழம் கிடைத்த பின்னரும் இனவெறி பிடித்த இலங்கை அரசாங்கம் தான் தமிழீழ மக்களுக்கு உணவு கொடுக்க வேண்டுமா? வன்னியில் இப்போதும் சிங்கள இனவெறி அரசாங்கத்திற்கு சேவை செய்து சம்பளம் வாங்கும் அரசாங்க உத்தியோகத்தர்கள் இருக்கிறார்கள். தமிழீழம் கிடைத்த பின்னர் இவர்கள் நிலை என்ன? தமிழீழத்திற்கு என்று தனியான பொருளாதாரம் இல்லை. இலங்கை அரசாங்கம் பொருளாதார தடை விதித்து பட்டினி போட்டு அடிபணிய வைக்கக் கூடிய நிலையில் இருக்கின்றது. சர்வதேச கவனத்தால் தான் அது நடப்பதில்லை. பயங்கரவாத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று சர்வதேச நாடுகள் சொல்லியும் கேட்காததால் தான், புலிகளை தடை செய்தார்கள் என்ற உண்மை புலி ஆதரவாளருக்கு தெரியுமா? மாற்று அரசியல்வாதிகளை கொலை செய்தல், பொது மக்களுக்கு குண்டு வைத்தல், பத்திரிக்கை சுதந்திரத்தை மறுத்தல், இவ தான் பயங்கரவாத செயல் என்று சர்வதேச நாடுகள் கூறியிருப்பதும், அவற்றை தொடர்ந்ததால் தான் தடை வந்தது என்ற உண்மை புலி ஆதரவாளருக்கு தெரியுமா? இவற்றை அவர்களது ஊடகங்கள் சொல்லாது மறைக்கின்ற விடயம் தெரியுமா?

Anonymous said...

வன்னிக் காடுகளுக்கிடையில் பிரபாகரனைப் பிடிக்கப் போன இந்திய ராணுவத்திற்கு என்ன நடந்தது என்பதையும் திருநெல்வேலியில் பிரபாகரரைனப் பிடிக்கப் போன பரசூட்டிலிருந்து குதித்த இராணுவத்தினர் நிலத்திற்கு எப்படி வந்து சேர்ந்தார்கள் என்பதையும் படிக்கலையா.. பரவாயில்ல கீழுள்ள படத்தையாவது பாருங்க

http://www.lankalibrary.com/images/IPKF2.jpg

Anonymous said...

இலங்கை யுத்த நெருக்கடியை விலக்கி தமிழர்களை தனியே விட்டால் தம் பொருளாதாரத்தை தமிழர்கள் தாமே பார்த்து கொள்வார்கள்.

இலங்கையென்பது ஒரு தேசம்தான் என அரசாங்கம் சொல்லும் வரை அவர்கள்தான் உணவு அனுப்ப வேண்டும். என்றைக்கு உணவு அனுப்புவதை நிறுத்துகிறார்ளோ அன்றைக்கு அது அவர்களின் மண் இல்லையென்பதை ஏற்றுக்கொண்டதாகி விடும். ஒருகாலத்தில் அனுப்பாமல் விடத்தானே போகிறார்கள்.

ஈழத்தமிழரின் பொருளாதாரம் வெளிநாட்டு வாழ் தமிழரின் உதவியோடு முன்னணியில் திகளும். குறைந்த சனத்தொகை - ஊழல் அற்ற நிர்வாகம்.. சுதந்திரத்தின் மேலான பிடிப்பு

ஒருநாட்டை வளப்படுத்த இவை போதும்.

Anonymous said...

இந்திய ராணுவம் - ஒரு 4வது வல்லரசு - சாரம் கட்டிய பொடியங்களோடு 3 வருடமாக போர் புரிந்தும் இலக்கு என்ற பிரபாகரனை நெருங்க முடியவில்லை என்பது - இந்திய இராணுவத்தின் தோல்விதான்.

AJeevan said...

என் கருத்துகள் காரணமாக ஒரு கருத்தாடல் தொடர்வதை இப்போதுதான் பார்க்க முடிந்தது.

சில தவறான கருத்தை பதிவாளர் உள்வாங்கியுள்ளார்.என்பதை தாழ்மையுடன் தெரிவிக்க விரும்புகிறேன்.

முதலில் நான் இந்திய எதிர்ப்பாளருமில்லை. விடுதலைப் புலி ஆதரவாளருமில்லை என்பதை தெரிவிக்கவிரும்புகிறேன்.

அதற்கு காரணம் நான் இலங்கையில் பிறந்தவன். தந்தை இலங்கை தமிழர். தாயார் இந்திய தமிழர். படித்தது சிங்கள மொழியில்... வளர்ந்தது சிங்கப்பூரில்.... இந்தியாவிலும் இருந்திருக்கிறேன்.

எனவே சரித்திர ரீதியாக இல்லாவிட்டாலும் , என் கண் முன் நடந்தவை எனக்குத் தெரியும்.

//இந்தியாவின் மத்திய அரசை நான் நிச்சயம் வன்மையாகக் கண்டிக்கிறேன், தன் சுய லாபத்திற்காக புலிகளை வளர்த்தமைக்காக. //

அது ஏன் என்று நீங்கள் கேட்கவில்லையே. விடுதலைப் புலிகளை மட்டுமல்ல. அனைத்து ஈழ போராளி இயக்கங்களை வளர்த்து , அவர்களுக்குள் பிரிவினைகளை உருவாக்கியதும் இந்தியாதான். இதை தெரிந்தவர்களுக்கு புரியும். அதை எழுத இது போதாது?

//பாகிஸ்தான் தோன்றிய போது வங்கதேசம் உருவாகும் என யார் கண்டார் ?//

இல்லை. இந்தியாவின் நலனுக்காக வங்க தேசம் உருவாக்கப்பட்டது. அதுபோல வளம் கொழித்த இலங்கை மேலும் வளர்ந்துவிடாமல் சின்னாபின்னமாக்கப்பட்டது.

இல்லாவிட்டால் இலங்கையில் பிரச்சனை உருவான போது நீங்கள் சொல்லும்
//மலேசிய பிரச்சினையிலும் கூட இரு புறமும் தவறுகள் உண்டு. நாம் வாழும் நாட்டின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நாம் வாழவேண்டும். உங்களுக்கு அந்தச் சட்ட திட்டங்களுடன் உடன்பாடு இல்லையெனில், மறுபடியும் இந்தியாவுக்கு வரவேண்டியது தானே? //
என்றால் இலங்கை தமிழரை இந்தியா அழைத்திருக்க வேண்டுமே? இல்லை மலேசியாவில் வாழும் தமிழரை அழைத்திருக்க வேண்டுமே....? அப்படி ஏதும் நடக்கல்லயே?

அங்கெல்லாம் என்ன நடக்கிறது?
உங்களுக்கு முழுமையாக தெரியாது.
இதுவே உண்மை.

அமெரிக்க அதிபராக கென்ய நாட்டு பூர்வகத்தைக் கொண்ட ஒபாமா போட்டியிட முடியுமானால் ? அதிபராக (வருவார்)முடியுமானால்? அட மலேசியா நாட்டின் முழுகெலும்பாக உழைத்த அந்த இந்திய (தமிழர் - இந்தி - மலையாள - தெலுங்கு மற்றும் ஏனைய இன...) மக்கள் ஏன் சார் அவனது நியாயமான கோரிக்கையை முன்வைத்து அரசியல் செய்யக்கூடாது?

அந்த இந்திய மக்களையே வேலைக்கு போனியா? உழைச்சியா? வந்தியா? அதுதானே உங்க கருத்து?

கண்முன்னே மலேசிய இந்தியனுக்கு என்ன நடக்குதுண்ணு தெரியாத உங்களுக்கு? நிச்சயம்
ஈழப்பிரச்சனை தெரிய முடியாது.

இலங்கையிலிருந்து சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தில் இந்தியா வந்த (இலங்கையில் வாழ்ந்த) மலையக இந்திய தமிழர்கள் தமிழகத்தில் பிச்சைக்காரர்கள் போல் வாழ்கிறார்கள்.
அப்படி வந்தவர்கள் இருக்கும் இடங்களைப் போய் பாருங்கள் சார். உண்மை புரியும்? எங்கே இருக்கிறார்கள்? எப்படி இருக்கிறார்கள் என்று எவருக்காவது சொல்ல முடியுமா?

இதே நிலைதான் மலேசிய தமிழருக்கு மட்டுமல்ல யார் வந்தாலும் அங்கு நடக்கும். பணம் உள்ளவன் வாழ்வான். அடிப்படை பிரச்சனையானவன் நாதியற்று போவான். அதைதானே நடக்குது. தமிழக அகதி முகாம்களுக்கு போங்க. அவங்களை ஒரு போட்டோ கூட எடுக்க முடியாது. அவங்க எல்லாம் உயிரை காப்பாத்திக்க ஓடிவந்தவங்கதான். ஆனா தன்மானம் இழந்து திறந்த வெளி சிறைகளுக்குள்ள அடைபட்டு கிடக்கிறானே?

மலேசியாவிலோ அல்லது சிங்கப்பூரிலோ உள்ள தமிழன் வீசா வாங்காம இந்தியாவுக்கள்ள வர முடியுமா? அது அவன் தாயம் என்று என்ன பேச்சு வேண்டி கிடக்கு?

ரங்கூனிலிருந்து வந்த தமிழனுக்கு நடந்த கதையை கலைஞரே எழுதி நடிகர் சிகரம் நடித்து பாராசக்தி என வந்ததே? பார்க்காவிட்டால் இன்னொரு முறை பாருங்கள்?

அங்கே அடிப்படை பிரச்சனை பார்ப்பனியத்துக்கு எதிராக திசை திருப்பப்பட்டது என்பது இன்னொரு சாராரை பழி வாங்கவோ அரசியலாகவோ என்பது தெரியாது. அதற்கும் பார்ப்பனியத்துக்கும் என்ன பிரச்சனை? வந்த இந்தியனை காப்பது அரசின் கடமையல்லவா? அதை மழுங்கவைத்து திசை மாற்றி விட்டதே அந்தப்படம்?

இலங்கையில் பிரச்சனை என்பது நான் பிறப்பதற்கு முன்னமே தேன்றிவிட்டது.

என் பெற்றோர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் கொழும்பில் வாழ்ந்தவர்கள். 1950களிலேயே உடமைகள் சூறையாடப்பட்டு பிரச்சனைக்குள்ளாகி வேறு பகுதிகளுக்கு சென்று வாழ்ந்தவர்களான என் பெற்றோர் எனக்கு புரிய ஆரம்பித்த போது கதை கதையாக சொன்னார்கள்.

எனக்கு அப்படி பிரச்சனை வரக் கூடாது என எனக்கு சிங்களம் படிக்க வைத்தார்கள். அங்குதான் பிரச்சனை?

என்ன பிரச்சனை என்று கேட்கிறீர்களா?

ஒரு மொழி புரியாமல் பிரச்சனைக்குள் இருப்பவனை விட மொழி புரிந்தவன் அந்தப் பிரச்சனையோடு வாழும் போது ஏற்படும் புரிதல் : வேதனை அதிகம்.அவனுக்குள் ஏற்படும் பிரைச்சனையும் அதிகம். அது எனக்கு கிடைத்தது.

தென் இந்தியாவிலிருந்து போனவனை (தமிழகம் -கன்னடா - ஆந்திரா - கேரளா)பம்பாயிலுள்ளவன் மதறாசி என்றால் வலிக்காது. அங்கு உள்ள இந்தி தெரிஞ்ச தென் இந்தியனுக்கு மதராசி என்றால் வலிக்கும் சார்?

எனக்கு தமிழ் நண்பர்களை விட சிங்கள நண்பர்கள் அதிகம். நான் விடுதலைப் புலிகளுக்கு வக்காலத்து வாங்கவில்லை. நான் அவர்களோடும் இல்லை. உண்மைக்காக மட்டுமே பேசுகிறேன்.

ஈழத்து இயக்கங்களை வளர்த்தது - பயிற்சி அளித்தது மட்டுமல்ல , அவர்களிடையே பிரிவினைகளை உருவாக்கியதும் இந்தியாதான். அதைவிட இலங்கையில் தாக்குதல் நடத்த உதவிகள் செய்ததும் இந்தியாதான்.

தஞ்சாவூர் - திருச்சி - தேனி - டில்லி போன்ற பகுதிகளில் ஆயுதப்பயிற்சியும் கொடுத்து , பண உதவிகளும் யார் செய்தது?

மேலதிக தகவல்களுக்காக ஒரு பேட்டி:
http://www.tamilcinema.com/general/interview/Nedumaran.asp

குழந்தைகள் கையில் ஆயுதங்களை விளையாட்டுப் பொருளாகக் கொடுத்துவிட்டு உன்னை யார் கொலை செய்யச் சொன்னது என்று ஆயுதத்தைக் கொடுத்த பெரியவர்களே கேட்டால் அதுக்கு என்ன சார் அர்த்தம்?
யார் சார் பொறுப்பு?
அந்தக் குழந்தைகளா? பெரியவங்களா?

சின்னப்பசங்க அவங்களுக்குத்தான் புத்தியில்ல? பெரியவங்க, உங்களுக்கு எங்க சார் போச்சு புத்தி?
கேட்க தோணுமா? தோணாதா?

இலங்கை அரசு பேச்சு வார்த்தைக்கு வரணுமுண்ணா, சிங்களப்பகுதியில தாக்குதல் நடத்துங்கண்ணு அனைத்து தமிழ் இயக்கங்களையும் அழைத்து ஆயுதம் கொடுத்து கட்டளை இட்டது யார் சார்?

அதற்கு எதிராக சிலர் பொது மக்களை கொல்லக்கூடாது என அங்கே வாதிட்டவர்களை நான் அறிவேன். அதையெல்லாம் பார்க்காதீங்க என்ற நிலையில் வற்புறுத்தி பெளத்த நகரான அனுராதபுரத்தில் ஒரு தாக்குதல் நடந்தது. அதற்கு பின்னரே திம்பு பேச்சு வார்த்தைக்கு இலங்கை அரசு வந்தது. இதை நீங்க சொன்னீங்களா என ரொமேஸ் பண்டாரியிடம் கேளுங்க? பதில் வரும்.

இந்திய டில்லி அரசு என்பதும் தமிழக தமிழர் என்பதும் வேறு வேறு சார்.

தமிழக தமிழர் ஆதரவு என்பது தனது இனத்துக்கான குரல் சார்.

இந்திய ஆதரவு அல்லது எதிர்ப்பு என்பது தனது பிராந்திய நலனிலுள்ள அக்கறையின் காய் நகர்த்தல்.

இதனால்தான் தொடர் கொலை கலாச்சாரம் ஒன்று உருவானது என்றால் யாருக்குத்தான் கோபம் வராது?

பாகிஸ்தான் வங்கதேசம் எல்லாம் பிரிஞ்சாச்சே எதுக்கு சார் அங்க இன்னும் மோதல் நடக்குது? அங்க ஏன் சார் சாகிறாங்க?

ஆசை சார் . ஆசை . மண்ணாசை.
உலகத்தில பலருக்கு மண்ணாசை.
அடுத்தவனை விட நான் மட்டும் நல்லாயிருக்கணுமுங்கிற ஆசை.

அவனும் வாழனும் நானும் வாழனும் எனும் நிலை வேணும் சார்.

நான் பிரிவினை வாதியில்ல சார். குடும்பத்துக்குள்ள பிரச்சனையின்னா பிரிஞ்சு வாழுறதில தப்பேயில்ல. அங்க அடிபட்டு சாகிறதை விட அவங்க பிரஞ்சு ரெண்டு பேரும் உயிர் வாழுறது : வாழ விடுறதுதான் சட்டத்தின் கடமை.

ஒருத்தனை சாகடிக்க வைத்துவிட்டு, நடந்த கொலைக்காக அடுத்தவனையும் தூக்கில போட்டு, ரெண்டு பேரையும் சாகடிக்கிறதில என்ன சார் சட்டம் சாதிக்கும்?

தான் வாழ்ந்த மண்ணில் வந்தவனை வாழ வச்சுட்டு சாகிறான் பாருங்க சார். அது கொடுமையிலும் கொடுமை சார்.

இதோ இந்த பதிவில அது குறித்து இருக்கு சார். அதை பாருங்க. இது யாரோ எழுதினது சார். கண்ணில பட்டுது. இணைச்சிருக்கேன்.

http://inioru.com/?p=1180

ஈழத்தமிழர்கள் இந்தியாவுக்கு எதிரானவர்கள் இல்ல. அதை மட்டும் புரிஞ்சுக்கிட்டீங்கண்ணா போதும்.

செத்துக்கிட்டிருக்கிற உன் இனத்தை சாகவிடு என்கிற மாதிரி இந்தமாதிரி பதிவுகள் எழுதப்படுமானால் , அதை எழுதாம இருக்கிறதே மேல்.

அரசோடு இருக்கும் கட்சிகளில் இருப்பவர்கள் கூட அவர்கள் செய்வது தவறென பேசுறாங்க.
உ+ம்: http://www.ajeevan.ch/content/view/6839/1/

அப்படியல்லாதோர் தம்மை காக்கவே அரசோடு இருக்கிறார்கள். அதை அன்றைக்கும் சில தமிழ் தலைவர்கள் செய்தார்கள்.அது இப்போதும் நடக்குது. காலம்தான் பதில் சொல்லும்.

இவை எதுவுமே இந்தியாவுக்கு எதிரான கருத்துகளோ அல்லது அல்லது இந்திய மக்களுக்கு எதரிான கருத்துகளோ அல்ல.

உங்கள் புரிந்துணர்வுக்காக இணைக்கப்படுகிறது.

நன்றி
www.ajeevan.com

Anonymous said...

இலங்கையென்பது ஒரு தேசம்தான் என அரசாங்கம் சொல்லும் வரை அவர்கள்தான் உணவு அனுப்ப வேண்டும்.

இப்படி எழுதியவர் இலங்கை என்பது ஒரு தேசம் என்பதையும் இலங்கை அரசாங்கம் தமிழ் மக்களுக்கும் பொறுப்பு என்பதை ஒத்துக் கொள்கிறார். சிங்கள இனவெறி அரசின் தலைமையை இப்படி பகிரங்கமாக ஏற்றுக் கொண்டதற்கு பாராட்ட வேண்டும்.

Anonymous said...

இலங்கை அரசு எதோ கட்டாயப்படுத்தி உணவை தமிழ் மக்களின் தொண்டைக் குழிக்குள் தள்ளுகின்றதா? உங்கள் உடம்பில் தமிழ் ரத்தம் ஓடுகின்றதேன்றால், மானம் ரோஷம் இருந்தால், சிங்கள இனவெறி அரசு கொடுக்கும் உணவை வேண்டாம் என்று சொல்ல வேண்டியது தானே? சிங்கள இனவெறி அரசாங்க உத்தியோகம் பார்த்து கைகட்டி சம்பளம் வாங்க உங்களுக்கு வெட்கமில்லையா? நீங்களாகவே வன்னி, யாழ்ப்பாணம் என்று தமிழீழத்தில் உணவு பயிருட்டு சாப்பிடுவதற்கு யார் தடைவிதித்தார்கள்? நீங்கள் சுயதொழில் செய்ய வேண்டாம் என்று யார் தடுத்தார்கள்? சிறிலங்கா அரசாங்கம் உங்களை அப்படி தடுத்திருந்தால் எடுத்துக் காட்டுங்கள். உங்களுக்கு தமிழ் இன உணர்வு இருந்தால், இன அழிப்பு செய்யும் அரசாங்கத்திடம் வாங்கிச் சாப்பிடாதீர்கள். தமிழனின் இரத்தம் உள்ள ரூபாயை சம்பளமாக எடுக்காதீர்கள்.

பின்னூட்டம் பெரியசாமி.. said...

//இந்த பின்னூட்டங்களை படிக்கும் இந்தியர்கள், இலங்கை வாழ் தமிழர்கள் சிலரின் இந்தியா குறித்த எண்ணத்தை புரிந்து கொள்ளவேண்டும்.//
ரொம்ப நல்லாவே புரிஞ்சு வச்சிருக்கோம்.


//இந்த பின்னூட்டங்களை படிக்கும் இந்தியர்கள், ஒன்றோ இரண்டு தமிழ்பேசும் இந்தியர்களின் ஈழம் குறித்த எண்ணத்தை புரிந்து கொள்ளவேண்டும்.//
இவங்களையும் நல்லாவே தெரியும்.

கொழுவி அவர்களே நீங்க இவர்கூட இப்பிடி ஒரு விவாதம் நடத்தலையின்னா இவரு கடைக்கு ஈ கூட வந்திருக்காது..
இவர்கடையிலே ஈயாடலைங்கிறத வச்சே நீங்க புரிஞ்சுருக்க வேண்டாமா? இந்த கடையில இருக்கும் பலகாரத்தில விஷம் கலந்திருக்கு. நீங்க சாப்பிட்டுருந்தா வாந்தி எடுத்திருங்க.. இல்லன்னா ஒவ்வாமை வந்துவிடும். உடம்பைப் பாத்துக்கோங்க.. உடம்பு ரொம்ப முக்கியம்

உமையணன் said...

கொழுவி,

இது இலைக்காரன் மாதிரியான பதிவு என்று நினைக்கிறேன். பார்த்து ரொம்பவும் ஏமாந்து விடாதீர்கள்.

Anonymous said...

நீங்களாகவே வன்னி, யாழ்ப்பாணம் என்று தமிழீழத்தில் உணவு பயிருட்டு சாப்பிடுவதற்கு யார் தடைவிதித்தார்கள்?//

லூசாய்யா நீயி..
வன்னியில பயிரிடும் அரிசி முழு இலங்கைக்கும் போதும்னு ஒனக்கு தெரியாதா?
மண்ணாங்கட்டி - உன்கிட்ட வாங்கின ஆயுதத்த வச்சு - அவன் வயல் காடு மேடு எல்லாம் உழுது கண்ணிவெடியை வெதச்சு வைச்சிருக்கான். வன்னியில சிரிலங்கன் கைப்பற்றி ஜனங்களே இல்லாமல் இருக்கிற நிலப்பரப்பு எவ்ளோன்னு உனக்கு தெரியுமாய்யா.? அதில வேளான் பூமி எவ்ளோன்னு தெரியுமாய்யா?

அரை லூசுப்பய புள்ள.. அங்கே என்னா நடக்குதுன்னே தெரியாமல் வந்துட்டாரு வாத்யாரு.. நீங்கெல்லாம் உழுது பயிருடுங்கன்னு வள்ளுவர் கணக்கா..

ங்கொய்யால சிரிலங்கன் ஆர்மிய ஒருநாள் இல்லைன்னா ஒருநாள் கோவணம் கலைய கலைய அடிச்சுத் தொரத்திட்டு உழுது பயிரிடத்தானே போறோம். பாத்துக்கோ அப்போ

இப்போ இந்தியா கொடுக்கிற ஆயுதமெல்லாம் புலியுக்குத்தான் கண்ணா

Madhusudhanan Ramanujam said...

//இது இலைக்காரன் மாதிரியான பதிவு என்று நினைக்கிறேன். பார்த்து ரொம்பவும் ஏமாந்து விடாதீர்கள்.//

நீங்கள் கூறுவது மிகவும் அபத்தமாய் இருக்கிறது. அதென்ன இலைக்காரன் மாதிரியான பதிவு. எந்த ஒரு சந்தர்பத்திலும், ஒரு குறிப்பிட்ட ஆட்சியாளரை மட்டும் ஆதரித்து எழுதியதில்லை. இன்று நம்மூரில் அப்படி ஒருவர் இல்லை என்பதே நிஜம்.

//கொழுவி அவர்களே நீங்க இவர்கூட இப்பிடி ஒரு விவாதம் நடத்தலையின்னா இவரு கடைக்கு ஈ கூட வந்திருக்காது..//

உங்களுக்கு என்னோட கருத்தில் உடன்பாடு இல்லைன்னா. இல்லைன்னு சொல்லிட்டு போய்ட்டே இருக்க வேண்டியது தான. என்னமோ நீங்க வரணும்னு வேண்டி நாங்க யாகம் வளர்த்த மாதிரி பேசறீங்க.

AJeevan said...

The main opposition in Sri Lanka says that the government has spent over forty million rupees to kill one member of the LTTE since 2004.

more:
http://www.bbc.co.uk/sinhala/news/story/2008/11/081104_unp_war.shtml

Thanks: BBC sinhala service

Anonymous said...

பயங்கரவாத செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று சர்வதேச நாடுகள் சொல்லியும் கேட்காததால் தான், புலிகளை தடை செய்தார்கள் என்ற உண்மை புலி ஆதரவாளருக்கு தெரியுமா? மாற்று அரசியல்வாதிகளை கொலை செய்தல், பொது மக்களுக்கு குண்டு வைத்தல், பத்திரிக்கை சுதந்திரத்தை மறுத்தல், இவ தான் பயங்கரவாத செயல் என்று சர்வதேச நாடுகள் கூறியிருப்பதும், அவற்றை தொடர்ந்ததால் தான் தடை வந்தது என்ற உண்மை புலி ஆதரவாளருக்கு தெரியுமா? இவற்றை அவர்களது ஊடகங்கள் சொல்லாது மறைக்கின்ற விடயம் தெரியுமா?

I think even LTTE supporters agree with this fact but they are afraid to advise the leaders of that movement.

Our Indian government and Norway tried it's best but failed to change LTTE.

They don't want to come to a settlement. They will continue to fight for Tamil Eelam which is a dream.

Anonymous said...

மாற்று அரசியல்வாதிகளை கொலை செய்தல், பொது மக்களுக்கு குண்டு வைத்தல், பத்திரிக்கை சுதந்திரத்தை மறுத்தல், இவ தான் பயங்கரவாத செயல் என்று சர்வதேச நாடுகள் கூறியிருப்பதும், அவற்றை தொடர்ந்ததால் தான் தடை வந்தது என்ற உண்மை புலி ஆதரவாளருக்கு தெரியுமா?//

அப்போ இதே காரணங்களுக்காக சிரிலங்காவை எதுக்காக இன்னும் தடை செய்யலை ? உலகம் நேர்மையானதாக இருந்தால் சிரிலங்காவையும் இதே காரணங்களால் தடை செய்ஞ்சிருக்கணுமே ?

Anonymous said...

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு இலங்கையில் தடை செய்யப்பட மாட்டாதென அரசாங்கம் தெரிவித்துள்ளது.

சர்வதேச ரீதியில் சில நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பையும், அதன் ஆதரவு அமைப்புக்களையும் தடை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

சிவிலியன்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தப்பட்டால் இலங்கையில் விடுதலைப் புலிகளை தடை செய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்க நேரிடும் என அரசாங்கம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது.

இலங்கை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக விடுதலைப் புலிகளுடன் யுத்தத்தில் ஈடுபடவில்லை எனவும், இதனால் புலிகளைத் தடை செய்வது குறித்து கவனம் செலுத்தப்படவில்லை எனவும் அரசியல் சாசன அமைச்சர் டியூ குணசேகர தெரிவித்துள்ளார்.

யுத்தத்தில் ஈடுபடாத நிலையில் விடுதலைப் புலிகளை தடை செய்வதன் மூலம் என்ன பயன் கிட்டப் போகிறதென அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விடுதலைப் புலிகள் சிவிலியன் மீதான தாக்குதல்கள், சிவிலியன்களை மனித கேடயமாக பயன்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த காரணிகளைத் தவிர விடுதலைப் புலிகளை பயங்கரவாத அமைப்பாக அறிவிப்பதற்கு போதிய சான்றுகள் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா, கனடா, சில ஐரேப்பிய நாடுகள், இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் விடுதலைப் புலிகள் தடைசெய்யப்பட்ட இயக்கமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் அமைப்பு ஓர் பயங்கரவாத அமைப்பு என்பதனை நிரூபிக்க வேண்டிய தேவை இலங்கை அரசாங்கத்திற்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயுதங்கள் களையப்படும் வரையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட மாட்டாதென அரசாங்கம் அறிவித்துள்ளது.

விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் ஓர் பின்னணியிலேயே, புலிகளை தடை செய்வதில்லை என இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும், அவுஸ்திரேலிய உள்விவகார சட்டங்களுக்கு அமைவாக புலிகள் தடை செய்யப்படுவார்களா என்பது குறித்து அரசாங்கம் உன்னிப்பாக அவதானித்து வருகின்றது.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகளை உலகப் பயங்கரவாத அமைப்புக்கள் பட்டியலில் இணைக்குமாறு வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம ஐக்கிய நாடுகள் அமைப்பில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சர்வதேச ரீதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் தடை செய்யப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கும் இலங்கை, உள்நாட்டில் பின்பற்றும் நடவடிக்கை சற்று குழப்பமாக உள்ளது.

http://www.globaltamilnews.com/tamil_news.php?nid=1815&cat=1

Anonymous said...

//விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் ஓர் பின்னணியிலேயே, புலிகளை தடை செய்வதில்லை என இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.//

இந்தியாவை கேணயனாக்கிட்டு சிங்கள அரசு ரொம்ப உசாரா இருக்குப்பா?

Madhusudhanan Ramanujam said...

//விடுதலைப் புலி ஆதரவாளர்களுக்கு எதிராக இந்தியா கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் ஓர் பின்னணியிலேயே, புலிகளை தடை செய்வதில்லை என இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.//

இதென்ன கணக்குன்னு எனக்கும் தெரியலை! இந்தியா புலி ஆதரவாளர்களுக்கு எதிராய் கடுமையான நடவடிக்கை எடுப்பதால் இலங்கை அரசு புலிகளை தடை செய்யவில்லையாம்! என்ன காமெடிங்க இது?

Anonymous said...

//இதென்ன கணக்குன்னு எனக்கும் தெரியலை! இந்தியா புலி ஆதரவாளர்களுக்கு எதிராய் கடுமையான நடவடிக்கை எடுப்பதால் இலங்கை அரசு புலிகளை தடை செய்யவில்லையாம்! என்ன காமெடிங்க இது?//

இதையே நீங்க காமடிண்ணு எழுதினா, தமிழீழத்துக்கு எதிராக இங்கே எழுதியது அனைத்தும் காமடிதானுங்க. அதாவது இலங்கை சிங்கள அரசு எப்படி ஒரே ரத்தத்தை குத்திவிட்டு கூத்துபாத்துண்ணு யாருக்கும் புரியல்லேங்கிறேன்?

Madhusudhanan Ramanujam said...

//இதையே நீங்க காமடிண்ணு எழுதினா, தமிழீழத்துக்கு எதிராக இங்கே எழுதியது அனைத்தும் காமடிதானுங்க.//

உங்களுக்குத் தான் சரியா புரியலைன்னு நினைக்கிறேன். இன்னும் பல பேர், தான் மட்டும் தான் அறிவாளி மற்றவன் எல்லாம் அறிவிலி என்று நினைத்துக் கொண்டு போட்டி போட்டுக் கொண்டு புலிகளுக்கு ஆதரவாக என்னென்னவோ எழுதினார்கள். அவர்களுக்கும் சொல்லும் விஷயம் புரியவில்லை.

தனி ஈழம் வேண்டும், வேண்டாம் என்பது பிரச்சினை அல்ல. அது வேண்டி நடக்கும் போராட்ட முறை தான் பிரச்சினை.

Anonymous said...

அது வேண்டி நடக்கும் போராட்ட முறை தான் பிரச்சினை. //

சரி. உங்க ஆலோசனையும் கேட்போமே..
ஈழத்தில தமிழரின் உரிமைக்காக இதுவரை அங்கே தமிழர் செய்திருக்காத புதுமையான புதிய முறையொன்றைச் சொல்லுங்கள்.

அதாவது இதுவரை அவர்கள் மேற்கொண்டு தோல்வியைத் தழுவியிராத..

முடியலையா.. அதுவும் வேணாம்.
இப்போ அவர்கள் என்ன செய்ய வேண்டும்?


உங்களுடைய ஆலோசனைகள் தனியே தமிழருக்கு மட்டும்தானா

சிங்களவருக்குமா? சிங்களவருக்கெனில் என்ன ஆலோசனைகளை சொல்ல ஆசைப்படுகிறீர்கள்?

பதில் சொல்லவும். இல்லாவிட்டால் பொத்திட்டு படுக்கவும்.

Madhusudhanan Ramanujam said...

//பதில் சொல்லவும். இல்லாவிட்டால் பொத்திட்டு படுக்கவும்.//

உங்களுக்கு ஏனைய்யா இவ்வளவு கோபம்?

AJeevan said...

//அஜீவன் முன்பு வேறொரு இயக்கத்தில் இருந்தவர். அந்த இயக்கத்தை புலிகள் தடை செய்து அழித்த பிறகு தற்போது புலிகளுக்காக வாதாடுகிறார். நாளை புலிகள் இல்லாத காலத்தில் யாருடன் போய் சேருவாரோ தெரியாது. இப்படியான கட்சிமாறிகளை சீரியஸாக எடுக்க வேண்டாம்.//

மன்னிக்கவும். நான் வேறொரு இயக்கத்தில் அல்ல. புளொட் எனும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தில் ஒருகாலத்தில் இணைந்திருந்தேன்.

என்னைப்போல் பல இளைஞர்கள் இணைந்து இருந்தார்கள். வெளியே இருந்து பேசுவதைவிட உள்ளே இருப்பவனுக்கு உண்மைகள் புரிய வாய்ப்புகள் அதிகம். அதுபோல நான் மட்டுமல்ல என்னைப்போன்ற பல இளைஞர்கள் எதிர்பார்த்தவை அங்கே இருக்கவில்லை. அதை விரிவாக்க எனக்கு விருப்பமுமில்லை. எனவே அந்த இயக்க தலைமையிடம் தெரிவித்துவிட்டு வெளியேறினேன்.

1984ல் நான் சிங்கப்பூரை விட்டு அந்த இயக்கத்தில் இணைந்தேன். அப்போது தமிழருக்கான ஒரு தேசம் வேண்டும் , ஈழத்தமிழருக்கு ஒரு விடிவு வேண்டுமென்று நினைத்தேனோ அதில் என்றும் என்னில் மாற்றமில்லை.

விடுதலைப்புலிகளோடு மட்டுமல்ல அனைத்து இயக்க நண்பர்களோடும் , ஏன் சிங்கள் நண்பர்களோடும் கூட நட்புறவு உண்டு.

உங்க பாட்டன் வளர்த்ததை நீ அனுபவிக்கிறாய் என்பார்கள். அதுபோல நாங்கள் எதை வேண்டுமென இயக்கங்களில் இணைந்தோமோ அதை செய்யும் விடுதலைப்புலிகளை ஆதரப்பதிலோ அல்லது ஆதரித்து கருத்துகளை முன்வைப்பதிலோ தவறில்லை.

தனது சுயநலனுக்காக உள்ளோர் சிறீலங்கா அரசின் உதவிகளை பெற அவர்களோடு இணைவது அல்லது தமது உயிரை காப்பாற்றிக்கொள்ள ஒட்டுமொத்த எதிர்கால ஈழத்தமிழ் சந்தியினரை அடிமைகளாக்க உதவுவதை நான் வெறுக்கிறேன்.

நமக்கு முடியாத ஒன்றை இன்னொருவர் செய்வதாக இருந்தால் அதற்கு ஆதரவு கொடுப்பது அல்லது ஒதுங்கி இருப்தே மேலான காரியமாகும்.

உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருப்பதே மேல். அதுவே எனது நிலைப்பாடு.

//தனி ஈழம் வேண்டும், வேண்டாம் என்பது பிரச்சினை அல்ல. அது வேண்டி நடக்கும் போராட்ட முறை தான் பிரச்சினை.//
என்று Madhusudhanan Ramanujam எழுதியதற்கு

Anonymous ஒருவர்
//ஈழத்தில தமிழரின் உரிமைக்காக இதுவரை அங்கே தமிழர் செய்திருக்காத புதுமையான புதிய முறையொன்றைச் சொல்லுங்கள்.//

என்று எழுதியிருப்பதற்கு Madhusudhanan பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள்?

ஒன்றை விமர்சிப்பது இலகுவானது. அதற்கு மாற்று நடைமுறையை அவர்கள் முன்வைக்க வேண்டும்.

பிரதமர் சேர் ஜோன் கொத்தலாவலைக்கு வரலாறு காணா வரவேற்பை 1954 இல் யாழ்ப்பாணத் தமிழர் அளித்து, இலங்கையின் மன்னர் என நெடுந்தீவில் மகுடமும் சூட்டினர். மகிழ்ச்சியில் திளைத்த பிரதமர், கொக்குவில் இந்துக் கல்லூரியில் பேசுகையில்

சிங்களமும் தமிழும் இலங்கையின் சம அந்தஸ்து உள்ள ஆட்சி மொழிகளாகும் என அறிவித்தார். பின்னர், அவரது கட்சிக்குள்ளே அக்கொள்கைக்கு எதிர்ப்பு கிளம்பியது. 1956 களனி மா நாட்டில் அவர் தலைமையில் கூடிய ஐக்கிய தேசியக் கட்சி, சிங்களம் மட்டுமே ஆட்சி மொழி என அறிவிக்க, அவருடன் எச்ச சொச்சமாக இருந்த சாவகச்சேரி வி.குமாரசாமி போன்ற தமிழர் சிலரும் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு நீங்கினர்.

1957 இல் பிரதேச சபைகளை உருவாக்கி, தமிழருக்கு சுயாட்சி வழங்க பண்டாரநாயக்கா-செல்வநாயகம் உடன்பாடு ஏற்பட்டது. சிங்கள பௌத்த தீவிரவாதிகள் இந்த உடன்பாட்டை எதிர்த்தனர். 1958 இல் ஒரு தலைப்பட்சமாக அந்த உடன்பாட்டை முறித்தார் பண்டாரநாயக்கா.

1965 இல் டட்லி சேனநாயக்க - செல்வநாயகம் உடன்பாடு ஏற்பட்டது. அதற்கேற்ப தம் மாவட்டங்களில் தமிழரே தம்மை ஆட்சி செய்யும் மாவட்டச்சபைத் திட்டத்தை எழுதினர். சிங்கள தீவிரவாதிகள் இதை எதிர்த்தனர். எதிர்த்த புத்த பிக்கு ஒருவரைக் காவலர் சுட்டுக் கொன்றனர். அதன் பின்னர் 1968 இல் மாவட்ட சபைத் திட்டத்தை டட்லி சேனநாயக்க கைவிட்டார்.

பிரிட்டிஷார் விட்டுச் சென்ற ஒற்றையாட்சி சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான்மையினரான தமிழருக்கு இருந்த பாதுகாப்பைத் தூக்கி எறியும் வகையில் 1972 இல் புதிய ஒற்றையாட்சி அரசியலமைப்பைப் பிரதமர் சிறிமாவோ கொண்டுவந்தார். சிங்களமே ஆட்சி மொழி, புத்தமே அரச மதம் எனத் தொடங்கிய அந்த அரசியலமைப்பை ஈழத் தமிழர் ஏற்கவில்லை. தமிழ்த் தலைவர்களான செல்வநாயகம், பொன்னம்பலம், தொண்டமான் ஆகிய மூவர் தலைமையில் 1976 இல் யாழ்ப்பாணத்து வட்டுக்கோட்டையில் மாநாடு நடந்தது. தமிழீழத் தீர்மானம் அம்மாநாட்டில் நிறைவேறியது. 1977 இல் நடந்த தேர்தலில் அத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்துமாறு அமிர்தலிங்கம் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு ஈழத் தமிழ் மக்கள் ஏகோபித்து ஆணையிட்டனர்.

சிங்களவருக்கு ஒரு மாநிலம், தமிழருக்கு ஒரு மாநிலம், இரு மாநிலங்களும் இணைந்த கூட்டாட்சி அரசாக நடுவண் அரசு; ஆகக் குறைந் ஏற்பாடு இது தான். இந்த ஏற்பாட்டுக்கு சிங்களவர் வர மறுத்ததால், இலங்கைத் தீவில் இரு நாடுகளாக சிங்கள நாடும் தமிழீழ நாடும் அமைவதைத் தவிர, வேறு வழியில்லை என 1949 இல் தமிழரசுக் கட்சியின் தொடக்க நாளன்று தன் தலைமை உரையில் கூறியவர் செல்வநாயகம், பல்வேறு பேச்சுவார்த்தைகள், போராட்டங்கள் மூலமாகச் சிங்களவருடன் அமைதித் தீர்வுக்கு முயன்று தோல்விகண்ட செல்வநாயகம். வில்லங்கமான காரியம் எனினும், தமிழீழ அரசை அமைப்பதைத் தவிர, தமிழருக்கு வேறு அரசியல் எதிர்காலம் கிடையாது என்ற தீர்மானத்தை 1976 இல் நிறைவேற்றினார்.

பிரிட்டிஷார் 1948 இல் விட்டுச் சென்ற ஒற்றையாட்சி சோல்பரி அரசியலமைப்பு, பாராளுமன்றத்தில் பெரும்பான்மை எண்ணிக்கையையும் குவிந்த அதிகாரங்கள் கொண்ட ஆட்சியையும் சிங்களவர்களிடம் கொடுத்ததால் தமிழர் இரண்டாம் தர குடிமக்கள் ஆனதால், ஒற்றையாட்சி முறை வேண்டாம், ஐம்பதுக்கு ஐம்பது பிரதிநிதித்துவம் வேண்டும் எனத் தமிழர் கோரினர். கிடைக்காமல் போகவே கூட்டாட்சி அரசியலமைப்பைக் கோரினர். அதற்கும் குறைந்த ஏற்பாடுகளான பிரதேச சபை, மாவட்ட சபை போன்றவற்றையாவது ஏற்கலாம் என்றனர். எதற்கும் சிங்களவர் உடன்படாததால், தமிழீழ அரசு அமைக்கும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.


1972 ஆம் ஆண்டு இலங்கை சோஷலிச குடிரயசு யாப்பினை ஆட்சேபித்தும் நிராகரித்தும் தந்தை செல்வா நிர்ப்பந்தித்து இருந்த காங்கேசன்துறைக்கான பாராளுமன்ற இடைத் தேர்தலில் தந்தை செல்வாவுக்கு எதிராக நிறுத்தப்பட்ட சிறிமாவோ பண்டார நாயக்கவின் முக்கூட்டரசு வேட்பாளர் தோழர் வ. பொன்னம்பலம் 16,000 அதிகப்படி பெரும்பான்மை வாக்குகளால் தாம் தோற்றகடிக்கப்பட்டதுமே மக்கள் தீர்ப்பை மகேஸ்வரன் தீர்ப்பாக ஏற்றுக்கொண்ட தோழர் பொன்னம்பலம் தாம் சார்ந்த இலங்கைப் பொதுவுடைமைக் கட்சியில் இருந்து தமது சகாக்களுடன் விலகியவராக செந்தமிழர் இயக்கத்தை ஆரம்பித்து தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியில் ஓர் இணைந்த அமைப்பாக அதனையும் இணைத்துக் கொண்டிருந்தார்.

ஆகவே, தந்தை செல்வாவின் மறைவுக்குப் பின் 1977 ஆம் ஆண்டு ஜூலைத் திங்களில் எதிர்வரவிருந்த பாராளுமன்றப் பொதுத் தேர்தலை தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியானது போர்த்துகேயரிடம் போரில் இழக்கப்பட்ட தமிழீழ அரசினை மீள் வித்துப் புதுப்பிப்பதற்கு தமிழீழ வாக்காளரிடம் ஆணை கோரும் ஒரு சர்வஜன வாக்கெடுப்பாக எதிர்கொள்ள முடிவு செய்தது.

எனவே, அந்த ஒரே கோரிக்கையை மட்டுமே பிரஸ்தாபிப்பதாக அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தைத் தயாரிப்பதில் தோழர் வ.பொன்னம்பலமும் உரிய பங்களிப்பை நல்கியிருந்தார். சம்பந்தப்பட்ட தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபன வாசகம் உரைத்தவாறு கோரப்பட்ட ஆணையைத் தமிழ் மக்கள் வழங்குமிடத்து தெரிவு செய்யப்படும். பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தேசிய நிர்ணய சபையாக அமர்ந்து ஒரு சுதந்திர, இறைமையுள்ள, சோஷலிச, ஜனநாயக தமிழீழ அரசை நிறுவும் யாப்பை நிறுவி அதனை எய்த முயலும் சமகாலத்தில் இலங்கையின் பாராளுமன்றத்தையும் மேற்படி இலக்கை எய்துவதற்கான ஒரு மேடையாக உபயோகிப்பார்கள் என்றே உறுதியளித்திருந்தது.

1977 ஆம் ஆண்டு ஜூலைப் பொதுத் தேர்தலின் போது வடகிழக்கு வாழ் வாக்காளர் பதினெட்டு பாராளுமன்ற உறுப்பினர்களை மேற்படி கோரிக்கைக்கு ஆதரவாகத் தெரிவு செய்ததன் மூலம் தம்மிடம் கோரப்பட்ட ஆணையை அபரிமிதமாகவே வழங்கியிருந்தனர்.

ஆயினும், தமிழ் வாக்காளரிடம் கோரிப்பெறப்பட்டிருந்த மேற்படி ஆணையை உதாசீனம் செய்தவர்களாக தமிழீழ பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு தேசிய நிர்ணய சபையாக அமர்ந்து சுதந்திர இறைமையுள்ள சோஷலிச ஜனநாயக தமிழீழ அரசிற்கான யாப்பைத் தயாரிக்கும் பணியைத் தவிர்த்து விலக்கியவர்களாக இலங்கை பாராளுமன்றத்தை வெறும் மேடையாகவே மட்டும் உபயோகிக்க தலைப்பட்டதுடன் நில்லாது இலங்கைப் பாராளுமன்றத்தில் அதன் யாப்பிற்கு விசுவாசமுள்ள ஓர் எதிர்க் கட்சியாகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருந்தனர்.

மேலும், சுதந்திர முறைமையுள்ள சோஷலிச ஜனநாயக தமிழீழ அரசை நிர்மாணிப்பதற்கு தங்களை அர்ப்பணித்திருக்க வேண்டிய தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியின் தமிழ் மக்களின் அபிலாசைகளைப் புறக்கணித்து பிரதமர் ஜே.ஆர். ஜெயவதனவின் சூழ்ச்சிக்கு இணங்கி மாவட்ட அபிவிருத்திச் சபைகளை இருகரம் நீட்டி ஏற்றுக் கொண்டும் இருந்தனர்.

(- சா.ஆ.தருமரத்தினம் )

இங்கேதான் ஈழத்தமிழரிடையே அரசியல் ரீதியான நம்பிக்கையின்மைகள் ஏற்பட்டன எனலாம்.

அண்மைக் காலத்தில் ஈழப்பிரச்சனையை நோக்குவோருக்கு தமிழீழம் என்பது விடுதலைப்புலிகளால் ஆரம்பிக்கப்பட்டதென்ற கருத்தே உள்ளது.

இல்லை. இலங்கையில் உள்ள தமிழ் பேசும் மக்கள் 1977ன் போது தேர்தலின் போது கொடுத்த வாக்குகள் அவர்களது அங்கிகாரமாக எடுத்துக் கொள்ளப்பட்டன.

ஈழத்தின் காந்தி என வர்ணிக்கப்பட்ட தந்தை செல்வா அவர்களே இதன் ஆரம்ப அத்தியாயத்தை ஆரம்பித்து வைத்தவராவார்.

எனவே
//ஈழத்தில தமிழரின் உரிமைக்காக இதுவரை அங்கே தமிழர் செய்திருக்காத புதுமையான புதிய முறையொன்றைச் சொல்லுங்கள்.//

என்று எழுதியிருப்பதற்கு Madhusudhanan அவர்கள் இப்போது பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள்?

Madhusudhanan Ramanujam said...

//என்று எழுதியிருப்பதற்கு Madhusudhanan அவர்கள் இப்போது பதில் சொல்லக் கடமைப்பட்டுள்ளீர்கள்?//

நிச்சயம் கடமைப் பட்டுள்ளேன். அதை மறுப்பதற்கில்லை. நான் கூறிய விஷயத்திலிருந்து மாறுபடப் போவதும் இல்லை. உண்மையில் இன்று புலிகளால் எத்தனை தமிழர்கள் உயிரிழந்துள்ளனர் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள். இவர்களால் மட்டுமின்றி, இவர்களை எதிர்க்கிறோம் பேர்வழி என்று சிங்கள ராணுவத்தினரும் சேர்ந்து தமிழரை துன்புறுத்தி வருகின்றனர். உரலுக்கு ஒரு பக்கம் தான் இடி, மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் இடி என்பார்கள். அது போலத்தான் இன்று இலங்கை வாழ் தமிழர்களும் உள்ளனர். புலிகள் உண்மையிலேயே தமிழரை காக்கின்றனரா என்று சற்று யோசியுங்கள் தோழரே. அவர்களை காத்துக் கொள்ளவே அவர்களால் முடியவில்லை. அவர்கள் எங்கிருந்து அப்பாவித் தமிழர்களை காப்பார்கள்? இதன் விளைவு என்ன என்பதை சற்று சிந்தியுங்கள். இதற்கு மேல் இந்த விஷயத்தில் என்ன கருத்து கூற முடியும் என்று எனக்குத் தெரியவில்லை.

அரசியல்வாதிகளும், திரைத் துறையினரும் உங்கள் துயரத்தையும் எங்கள் ஊரில் விளம்பரம் தேட மட்டுமே உபயோகிக்கின்றனர். உண்மையைச் சொல்லப் போனால், தமிழ் நாட்டைச் சேர்ந்த சாதாரணர்கள் இலங்கை தமிழர்களுக்காக அனுதாபப் பட முடியும், நிவாரணப் பொருட்க்கள் வழங்க முடியும். நிதியுதவி செய்ய முடியும். அது போக வேறெதுவும் நடக்கும் என்று தோன்றவில்லை. இலங்கைக்காக கடையடைப்பு செய்வதைவிட, அந்த ஒரு நாள் வரவை தானமாய்த் தரலாம். முடிவாகச் சொல்லவேண்டுமெனில், தனி ஈழமோ அல்லது கூட்டாட்சியோ, ஏதோ ஒரு வழியில் இலங்கைத் தமிழர்கள் நிம்மதியாய் வாழ்ந்தால் எனக்குப் போதும்.

வெத்து வேட்டு said...

1948-1983(before July) செத்த தமிழர்களின் எண்ணிக்கை எவ்வளவு? இப்போ ஒவ்வொரு நாளும் செத்துகொண்டிருக்கும் தமிழர்களின் எண்ணிக்கை எவ்வளவு? புலிகளால் அதை மாற்ற முடியுமா? புலிகளால் இயலாது என்றால் அவர்கள் ஒதுங்க வேண்டியது தானே?

Anonymous said...

புலிகளால் சாகவில்லை. அரச படைகளால் சாகிறார்கள். இருந்தாலும் யாரும் பபட்டினியால் சாகவில்லை.

கோழையாக சாவதைவிட
வீரனை சாவது எவ்வளவோ மேல்.

அம்பேத்காரே சொல்லியிருக்கிறார் " ஆடுகளைத்தான் கோயில்களில் வேட்டுவார்களே தவிர வேங்கைகளையல்ல. ஆடுகளாயிராதீர்கள் வேங்கைகளளாய் இருங்கள் " என்று.

நேர்மை ஒருநாள் வெல்லும்.

ஈழம் தமிழன் said...

//இன்று புலிகளில் எத்தனை பேர் நன்கு படித்தவர்கள்? //
[/color=red]விடுதலை போரட்டதுகு படிப்பு தேவை இல்லை.. படித்தவர்கள் மட்டும் தான் விடுதலை போர் செய்யலாம்... என்றால் இன்று இந்தியாவே இல்லை ..[/color]

//நிஜம்தான். இந்தியத் தமிழர்கள் உழைத்தார்கள், போதுமென்ற நிலை வந்தவுடன் வீடு திரும்பினார்கள். யாருக்கும் ஆயுதம் வாங்கவில்லை. பயங்கரவாதத்திற்கு ஆதரவு திரட்டவில்லை!//

[color=red]தமிழக மீனவர்கள் சுட்டு வீழ்த்த பட்ட போது உங்களால் என்ன புடுங்க முடிந்தது?
அல்லது உங்க மத்திய அரசால் என்ன புடுங்க முடிந்தது?? இன்றை வரை தமிழக மீனவர்கள் சுட படுகிறனர் ..
மக்களை பாதுகாப்பது பயங்கரவாதம் என்று எண்ணி தான் உங்க மத்திய அரசு தமிழக மீனவர்களை பாதுகாக்க வில்லையா?[/color]

//விடுதலைப் புலிகளை ஒரு நாட்டின் ராணுவத்திற்கு சமமாக நினைக்கும் உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை கொலைவெறி தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எனக்கு பிரபாகரன் என்ற தனி மனிதன் மீது எந்த ஒரு விருப்பு வெறுப்பும் இல்லை. ஆனால் அவரின் செயல்கள் நிச்சயம் கண்டிக்கத் தக்கதே//

[color=red]இது கண்டனம் மாதிரி தெரியல சார்.......[/color]

//மீண்டும் சொலிகிறேன். இந்திய ராணுவம் நினைத்தால் உங்கள் புலிகள் ஒரு அடி நிலத்தைக் கூட பிடிக்க முடியாது உங்கள் இலங்கையில்.//

[color=red]இப்ப மட்டும் என்ன நினைகிறதாம்????[/color]

இனத் துரோகிகளுடன் பேசி என்ன பயன் !!!

ஈழம் தமிழன் said...

//இன்று புலிகளில் எத்தனை பேர் நன்கு படித்தவர்கள்? //
விடுதலை போரட்டதுகு படிப்பு தேவை இல்லை.. படித்தவர்கள் மட்டும் தான் விடுதலை போர் செய்யலாம்... என்றால் இன்று இந்தியாவே இல்லை ..

//நிஜம்தான். இந்தியத் தமிழர்கள் உழைத்தார்கள், போதுமென்ற நிலை வந்தவுடன் வீடு திரும்பினார்கள். யாருக்கும் ஆயுதம் வாங்கவில்லை. பயங்கரவாதத்திற்கு ஆதரவு திரட்டவில்லை!//

தமிழக மீனவர்கள் சுட்டு வீழ்த்த பட்ட போது உங்களால் என்ன புடுங்க முடிந்தது?
அல்லது உங்க மத்திய அரசால் என்ன புடுங்க முடிந்தது?? இன்றை வரை தமிழக மீனவர்கள் சுட படுகிறனர் ..
மக்களை பாதுகாப்பது பயங்கரவாதம் என்று எண்ணி தான் உங்க மத்திய அரசு தமிழக மீனவர்களை பாதுகாக்க வில்லையா?

//விடுதலைப் புலிகளை ஒரு நாட்டின் ராணுவத்திற்கு சமமாக நினைக்கும் உங்களைப் போன்றவர்கள் இருக்கும் வரை கொலைவெறி தாக்குதல்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும். எனக்கு பிரபாகரன் என்ற தனி மனிதன் மீது எந்த ஒரு விருப்பு வெறுப்பும் இல்லை. ஆனால் அவரின் செயல்கள் நிச்சயம் கண்டிக்கத் தக்கதே//

இது கண்டனம் மாதிரி தெரியல சார்.......

//மீண்டும் சொலிகிறேன். இந்திய ராணுவம் நினைத்தால் உங்கள் புலிகள் ஒரு அடி நிலத்தைக் கூட பிடிக்க முடியாது உங்கள் இலங்கையில்.//

இப்ப மட்டும் என்ன நினைகிறதாம்????

இனத் துரோகிகளுடன் பேசி என்ன பயன் !!!

Anonymous said...

//மீண்டும் சொலிகிறேன். இந்திய ராணுவம் நினைத்தால் உங்கள் புலிகள் ஒரு அடி நிலத்தைக் கூட பிடிக்க முடியாது உங்கள் இலங்கையில்.//

ஐயா , இந்தக் கருத்து எதைச் சொல்கிறது தெரியுமா?

இந்தியப்படை அமைதிப்படையாக இலங்கைக்கு போகவில்லை. ஆக்கரமிப்பு படையாகத்தான் போனது என்பதையல்லவா?

வாசகன் said...

ஐயா ராமானுஜம் அவர்களே! புலிகளை வெறும் சண்டை பிடிக்கும் குழுவாக பார்க்கிறீர்கள் என்னும்போது (வீரப்பன் குழுவுடன் ஒப்பிடும்போது) நீங்கள் தெரிந்துகொண்டது அவ்வளவுதான் என்று ஊகிக்க முடிகிறது. நீங்கள் ஈழத்தைப் பற்றி முழுவதுமாக தெரிந்துகொண்டு அல்லது விடுதலைப் போராட்டம் என்றால் என்னவென்று புரிந்து கொண்டு விமர்சனங்களை எழுத தொடங்குவது நல்லது. புலிகள் ஒரு ஆயுதம் தாங்கிய வெறும் குழு என்று எண்ணுவதைத் தவிருங்கள். அது ஒரு நாட்டின், ஈழத்தின் விடுதலை அமைப்பு. காலம் காலமாக ஒடுக்கப்பட்டு வந்த ஈழ தமிழ் மக்களின் எழுச்சியே இந்த விடுதலை அமைப்பு. அதை கொச்சைப் படுத்தாதீர்கள். உலகில் எத்தனையோ விடுதலை அமைப்புகள் உருவாகி இருக்கின்றன. அவற்றில் பல அடக்குமுறைக்கு எதிராகப் போராடி வெற்றி பெற்றும் இருக்கின்றன.
விடுதலைப் புலிகளிடம் ஈழத்தில் ஒரு நிழல் அரசாங்கமே இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா? பொருளாதரக் கட்டமைப்புடன் கூடிய நிதித்துறை, நீதித்துறை (தமிழீழ நீதிமன்றங்கள் பல உண்டு), தமிழீழ காவல்துறை(பொலிஸ்), கல்வித்துறை (வெளிநாடுகளில்கூட தமிழீழ கல்வித்திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த மாணவர் தாய்மொழிக் கல்வி பயில்கிறார்கள்) இதுபோன்ற தனிநாட்டுக்குத் தேவையான பல கட்டமைப்புக்களுடன் கூடிய ஒரு தமிழீழ அரசாங்கமே ஈழத்தில் ஏற்கனவே நடைமுறையில் உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதைவிட தரைப்படை கடற்படை விமானப்படை ஆகிய முப்படைகளும் கொண்ட ஒரு தனி நாட்டுக்குரிய அனைத்துக் கட்டுமானங்களுடனும் ஒரு குறிப்பிட்டளவு ஈழப் பிரதேசத்தை விடுதலைப்புலிகள் தமது கட்டுப்பாட்டின் கீழ் நிர்வகித்து வருகிறார்கள். அங்கு தமிழீழ வைப்பகங்கள் என்ற பேரில் வங்கிகள் உண்டு.
மகாத்மா காந்தி கூறியது போல் ஒரு பெண் நடு இரவில் நகைகள் அணிந்து கொண்டு தனியாக வெளியே சென்று ஆபத்தில்லாமல் திரும்பிவர தமிழீழத்தில் முடியும் என்று அங்கு சென்று பார்த்து வந்தவர்கள் கூறுவதைக் கேட்டிருப்பீர்கள்.

நீங்களும் உங்கள் இந்திய அரசாங்கமும் நினைப்பதுபோல் புலிகள் துப்பாக்கி மட்டும் தூக்கத் தெரிந்தவர்கள் அல்ல. அது ஒரு சிறு குழுவுமல்ல. ஒரு ஆற்றலும் வீரமும் மிக்க தலைவரின் கீழ் ஒன்று திரண்ட மக்கள் படை. ஒரு தமிழீழ அரசை நிர்வகித்துக் காட்டிய பின்னும் இப்போதும் வீரப்பனுடன் ஒப்பிட்டு பேசும் போதே உங்கள் அறியாமை புரிகிறது.

நீங்கள் என்னதான் புலிகளைப் பற்றி மட்டமாக விமர்சித்தாலும் எத்தனை ஆயுதங்களைக் கொட்டிக் கொடுத்தாலும் உங்களால் (இந்தியாவால்) புலிகளை அழிக்க முடியாது என்னும் உண்மை வெகு விரைவில் புரியும். உலக அங்கீகாரத்துடன் தமிழீழம் மலரும் நாள் வெகு தூரத்தில் இல்லை.