Thursday, November 06, 2008

தீர்ந்தது இலங்கை பிரச்சினை !!!

இன்று வெளியாகியுள்ள துக்ளக் இதழில் இலங்கை பிரச்சினை தீர்ந்தது என்ற தலைப்பில் வெளியான ஒரு கட்டுரையைக் படித்ததில் சிரித்து சிரித்து வயிறு வலித்தது தான் மிச்சம். அதை உங்களுடனும் பகிர்ந்து கொள்கிறேன் இங்கே...

இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற முடியாவிட்டால் இந்த அரசு தேவையா என்று பொதுக்கூட்டத்தில் கேள்வியெழுப்பி, மத்திய அரசுக்கு தந்தி அனுப்பும்படி மக்களைக் கேட்டுக்கொண்டு, போர் நிறுத்தத்துக்கு வழி செய்யாவிட்டால், தமிழக எம்.பி.க்கள் ராஜினாமா செய்வார்கள் என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் அச்சுறுத்தி, மனிதச் சங்கிலி நடத்தி – எல்லாம் ஓய்ந்துவிட்டது. இப்போது, மத்திய அரசின் நடவடிக்கைகளால் முதல்வர் திருப்தியடைந்து ராஜினாமா முடிவை கைவிட்டு விட்டார். முதல்வர் எப்படி மனம் மாறினார்? பிரணாப் முகர்ஜி, முதல்வரிடம் அப்படி என்னதான் கூறியிருப்பார் – என்று முடியைப் பிய்த்துக் கொண்டோம்.




கருணாநிதி : வாங்க, வாங்க! இலங்கைத் தமிழர்களின் கண்ணீரைத் துடைக்கிறதுக்காக பதவியைத் தூக்கி எறிய முடிவு செஞ்சு, ராஜினாமா கடிதங்களை கையிலே கூட தூக்கிட்டோம். எறிய வேண்டியதுதான் பாக்கி. எப்படி எறியறதுன்னு யோசிச்சிட்டிருந்தப்போ, நல்ல வேளையா நீங்க வந்துட்டீங்க.

பிரணாப் முகர்ஜி : உடனே உங்களைப் பார்க்கச் சொல்லி சோனியா அனுப்பினாங்க. எப்படியாவது போர் நிறுத்தம் ஏற்பட்டேயாகணும்னு உறுதியா இருக்காங்க.

கருணாநிதி : அப்படியா? இலங்கையிலே போர் நிறுத்தம் ஏற்படணும்னா சோனியா சொன்னாங்க?

பிரணாப் : ஊஹூம். இலங்கைப் பிரச்சனை தொடர்பாக தமிழ்நாட்டிலே அரசியல் கட்சிகள் நடத்திக்கிட்டிருக்கிற போரை, உடனடியா நிறுத்தணும்னு சோனியா சொல்லி அனுப்பினாங்க. அதுக்காகத்தான் வந்தேன்.

கருணாநிதி : இலங்கையிலே அமைதி ஏற்படுத்த சோனியாவும், பிரதமரும் எடுக்கிற நடவடிக்கைகளுக்கு நன்றி தெரிவிச்சுக்கறேன். மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்திருக்குதுன்னு சொல்லுங்க. பாராட்டிடறேன்.

பிரணாப் : பிரதமர் ரொம்பக் கவலைப்பட்டாரு. சோனியாவும் கவலைப்பட்டாங்க. ராஜபக்ஷே ஆலோசகர் பாஸில் ராஜபக்ஷேவும் டெல்லிக்கு வந்து கவலைப்பட்டாரு.

கருணாநிதி : தாய் தமிழக மக்களின் கனவுகள், இப்படி ஒவ்வொண்ணா நிறைவேறிக்கிட்டிருக்கிறதை நினைக்கும்போது ரொம்ப மகிழ்ச்சியா இருக்குது.

பிரணாப் : அதுமட்டுமில்லை. தமிழக மீனவர்கள் மேலே துப்பாக்கிச் சூடு
நடத்தமாட்டோம்னு பிரதமர் கிட்டே பாஸில் ராஜபக்ஷே உறுதி அளிச்சிருக்காரு.

கருணாநிதி : அதை விட, மீனவர்களை விடுதலைப் புலிகள் சுட்டுடாமப் பாத்துக்கச் சொல்லுங்க. அதுதான் முக்கியம். அப்பதான் வேற யாராவது மீனவர்களைச் சுடும்போது, நான் துணிஞ்சுக் கண்டிக்க முடியும்.

பிரணாப் : இலங்கைப் பிரச்சனையிலே மத்திய அரசுக்கு நீங்க ஒத்துழைப்பு கொடுக்கணும்னு பிரதமர் கேட்டுகிட்டாரு.

கருணாநிதி : கவலைப்படாதீங்க. இலங்கைப் பிரச்சனையிலே மத்திய அரசோட
நாங்க ஒத்துப்போறது புதுசு இல்லை. அந்தக் காலத்திலிருந்தே மத்திய அரசின் கொள்கையை ஒட்டித்தான் கழகம் செயல்பட்டு வருது.

பிரணாப் : பின்னே, எம்.பி. பதவிகளை ராஜினாமா பண்ணிடுவோம்னு, மத்திய அரசுக்கு எதிரா தீர்மானம் போட்டிருக்கீங்களே....

கருணாநிதி : மத்திய அரசோடு நாங்க மோதறதும் புதுசு இல்லையே. அந்தக் காலத்திலேயே மோதியிருக்கோமே.

பிரணாப் : சரி விடுங்க.

கருணாநிதி : அப்படி வாங்க வழிக்கு. இலங்கைத் தமிழர்களைக் காப்பாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கா விட்டால், இலங்கைத் தமிழர்கள் மட்டுமல்ல,
இங்கேயிருக்கிற தமிழர்களும் சாவோம்னு பொதுக்கூட்டத்திலே நான் பேசினது மத்திய அரசு கவனத்துக்கு வந்ததா?

பிரணாப் : அதைக் கேட்டு பிரதமர் ரொம்ப வருத்தப்பட்டாருன்னு சொன்னேனே....

கருணாநிதி : அதுபோதும். அதுக்காகத்தான் அப்படிப் பேசினேன்.

பிரணாப் : சரி. பொதுக்கூட்டம் தான் போட்டீங்களே. அப்புறம் ஏன், மக்களை மத்திய அரசுக்கு தந்தி அனுப்பச் சொன்னீங்க? அதனாலே என்ன பிரயோஜனம்?

கருணாநிதி : இதே சந்தேகம்தான் எனக்கும் வந்தது. அதனாலேதான் தந்தி அனுப்பினது போதாதுன்னு, அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டி தீர்மானங்களை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினேன்.

பிரணாப் : சரி. தீர்மானங்களை அனுப்பின பிறகு, மனிதச் சங்கிலி எதுக்கு
நடத்தினீங்க?

கருணாநிதி : தீர்மானங்களை நீங்க படிச்சீங்களா இல்லையான்னு தெரியலை. அதுக்காகத்தான் மனிதச் சங்கிலி. அடுத்ததா ஒரு கோடி கையெழுத்து வாங்கி அனுப்பலாம்னு இருந்தோம். அதுக்குள்ளே நீங்களே வந்துட்டீங்க. இலங்கையிலே அமைதி ஏற்படுத்த என்ன செய்யணும்னு மத்திய அரசுக்குத் தெரியும். அதுக்காகத்தான் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பினேன்.

பிரணாப் : நாற்பதாண்டு கால போராட்டத்தை நாலு நாளிலே நிறுத்திட முடியாது.

கருணாநிதி : அது எனக்குத் தெரியாதா? அதனாலதான் மத்திய அரசுக்கு 14 நாட்கள் அவகாசம் கொடுத்தோம்.

பிரணாப் : தீர்மானங்களைப் படிச்சுப் பார்த்தோம். "ஈழத்தில் அமைதியும் சக வாழ்வும் திரும்ப, உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கணும்'னு முதல் தீர்மானம் சொல்லுது. அதுக்கு இலங்கை அரசுதான் நடவடிக்கை எடுக்க முடியும். எடுப்போம்னு ராஜபக்ஷே பிரதமர் கிட்டே உறுதியளிச்சிருக்காரு.

கருணாநிதி : அது போதுமே. இனிமே இலங்கையிலே குண்டு வெடிக்காதே. பொதுவா, சிங்கள வெறியர்கள் பேச்சை நாங்க நம்பற வழக்கம் இல்லை. ஆனா, நீங்க சோனியா தூதுவரா வந்து சொல்றதாலே நம்பறேன். இலங்கை ராணுவத்துக்கு மத்திய அரசு ஆயுத உதவி செய்யக்கூடாதுன்னு தீர்மானம் போட்டிருந்தோமே!

பிரணாப் : அந்த விஷயத்தையும் மத்திய அரசு உரிய முறையில் பரிசீலிக்கும்னு பிரதமர் சொல்லியிருக்காரு.

கருணாநிதி : ரொம்ப நன்றி. இதன் விளைவாக, இனி இலங்கையிலே அழுகுரல் கேட்காது, தமிழர்கள் பட்ட பாடு வீண் போகலைன்னு நினைக்கும்போது ரொம்பப் பெருமையா இருக்குது. உணவு, மருந்துப் பொருள்களை செஞ்சிலுவைச் சங்கம் மூலமாகத்தான் கொடுக்கணும்னு தீர்மானம் போட்டிருக்கோம். மத்திய அரசு என்ன முடிவெடுத்திருக்குதுன்னு தெரிஞ்சா அதை வரவேற்கத் தயாரா இருக்கேன்.

பிரணாப் : உணவு, மருந்துப் பொருட்களை இலங்கை அரசிடம்தான் இந்திய அரசு ஒப்படைக்க முடியும். அதை எப்படி விநியோகிக்கணும்னு முடிவெடுக்கிற பொறுப்பு இலங்கை அரசுக்கு இருக்குது.

கருணாநிதி : அதாவது ராஜபக்ஷே பொறுப்போட நடந்துக்கணும்னு
மன்மோகன் சிங் தொலைபேசியிலே சொல்லிடுவாருன்னு சொல்லவர்றீங்க. அதானே? இந்த நடவடிக்கையைத்தான் நாங்க எதிர்பார்த்தோம். தமிழ் இனம் அழியாதபடி
தடுத்துட்டீங்க.

பிரணாப் : மத்திய அரசு எடுக்கிற நடவடிக்கைகள் நிஜமாவே உங்களுக்கு திருப்தி அளிக்குதா?

கருணாநிதி : திருப்தி அடைஞ்சாத்தானே வெற்றியா கொண்டாட முடியும்? அந்தக் கோணத்திலே பார்க்கும்போது திருப்திதான். விலைவாசி உயர்வு, மின்வெட்டு, அமைச்சர்கள் மீதான புகார்கள் எல்லாத்தையும் சமாளிக்க – இந்த வெற்றியைப் பயன்படுத்திக்க முடியுமே.

பிரணாப் : இலங்கைத் தமிழர்கள் பலியாகறதை நிறுத்தறது கஷ்டம். அதை யாரும் பிரச்சனையாக்காம நீங்கதான் பாத்துக்கணும்.

கருணாநிதி : அப்போ, "இலங்கைத் தமிழர் பிரச்சனையில் சில கட்சிகள் நம்மோடு ஓரணியில் திரளாமல் குறுக்குசால் ஓட்டியதன் விளைவை, இலங்கைத் தமிழர்கள் அனுபவிக்கிறார்கள்'னு அறிக்கை விட்டு சமாளிக்க வேண்டியதுதான்.

பிரணாப் : மறுபடியும் மீனவர்கள் கொல்லப்பட்டா, மத்திய அரசுக்கு எதிரா எதுவும் செய்யமாட்டீங்களே...

கருணாநிதி : பாராளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் அஞ்சாறு மாசம்தானே இருக்குது? அதுவரைக்கும் வீரமாவும், சோகமாவும் மாத்தி மாத்தி கவிதை எழுதி காலத்தைக் கடத்திடறேன்.

பிரணாப் : இலங்கையிலே போர் தொடர்ந்துகிட்டுத்தான் இருக்கும். ஆட்சிக்கு ஆபத்து ஏற்படற மாதிரி நடவடிக்கை எடுக்க மாட்டீங்களே?

கருணாநிதி : சேச்சே! "அம்மையார் ஆட்சிக் காலத்திலும் இலங்கையில் போர்
நடந்துள்ளது. அப்போது வாய் மூடிக் கிடந்தவர்கள் இப்போது பிரச்சனை செய்கிறார்கள் என்றால் – புராணிகர்கள் மொழியில் கூறுவதானால் – என் ஜாதகம்தான் காரணம்'னு சொல்லிடறேன்.

பிரணாப் : அப்ப நான் புறப்படறேன். உங்க ஆட்சியிலே இருக்கிற குறைகளை விமர்சிக்காம நாங்க ஆதரிக்கிறோம். அதே மாதிரி மத்திய அரசு குறைகளை நீங்க பெரிசுபடுத்தக் கூடாது.

கருணாநிதி : அந்தக் கூட்டாட்சித் தத்துவப்படிதான் நடக்கிறேன்! இருந்தாலும், தமிழ் உணர்வு திடீர் திடீர்னு உறுத்துது. இலங்கைப் பிரச்சனை சம்பந்தமா, ஏதாவது உறுதி மொழி குடுத்துட்டுப் போங்களேன்.

பிரணாப் : நம்ம கூட்டணி தொடரும். உங்க ஆட்சியிலே பங்கு கேட்கமாட்டோம்.
உங்க விருப்பப்படிதான் மத்திய ஆட்சி நடக்கும்னு சோனியா உறுதி
அளிச்சிருக்காங்க.

21 comments:

நசரேயன் said...

:(:):).

Madhusudhanan Ramanujam said...

//:(:):).//

இதென்ன ஸ்மைலிங்க ?

Anonymous said...

மீனவர்களை விடுதலைப் புலிகள் சுட்டுடாமப் பாத்துக்கச் சொல்லுங்//

விடுதலை புலிகள் சுடுவது இருக்கட்டும்.
அவங்க சுட்டாலாவது இந்தியா கண்டிக்குமா?

எருமைத் தோலை எப்போ இந்தியா போர்த்துக் கொண்டது?
இந்திராவுக்கு பிறகா..

Anonymous said...

விடுதலை புலிகள் சுடுவது இருக்கட்டும்.
அவங்க சுட்டாலாவது இந்தியா கண்டிக்குமா//

இந்த மாதிரி உணர்ச்சிய தூண்டி கொல்றாங்களே கொல்றாங்களே சொல்லியே தமிழ்நாட்டை மொட்டை போடுங்க.
அதான் ரிப்போர்ட்டருல தெளிவாய் எழுதீயிருந்தாங்களே. இந்திய மீனவருன்ன இலங்கை படை சுடாது. தெரியாம புலிகள்ன்னு நினைச்சு சுட்டா பயந்து ஓடிவிடும்ன்னு மீனவரே பேட்டி கொடுத்திருக்கார். அது போக நம்ம மீனவருங்க அதிக மீனுக்கு ஆசைப்பட்டு ஆபத்துன்னு தெரிஞ்சும் அங்க போறாங்க.

Anonymous said...

GPS வைச்சுகிட்டு தெரிஞ்சே ஒரு குருப் சில நாட்களுக்கு முன்னாடி அவனுக எல்லைக்குள் போய் ஆப்பு வாங்கினாங்க.

நசரேயன் said...

/*
//:(:):).//

இதென்ன ஸ்மைலிங்க ?


*/
நல்லா சிரிச்சேன்னு சொல்ல வந்தேன் :)

dondu(#11168674346665545885) said...

கிண்டலாக எழுதியிருந்தாலும் அது கிட்டத்தட்ட அப்படியேதான் நடந்திருக்கும் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

வாக்காளன் said...

இதை எழுதி முடிச்சு உடனே சோ உடனடியாக அம்மவிற்கு போன் போடுகிறார்..


அம்மா - யார்டா அவன்..

சோ -அம்மா, நான் தான் சோ பேசிறேன் மா.. ஆத்துல எல்லாரும் நல்லா இருக்காளா?

அம்மா- நீயாடா.. சொல்லுடா. என்ன விஷயம்.

சோ - அவாள நக்கல் பன்னி நன்னா எழுதிட்டேன்மா.. இந்த வாரம் துக்ளக் வாங்கி பாருங்கோ..

அம்மா - டேய் எழுதிட்டல, அவ்ளோ தான். அதுக்காக அந்த கன்றாவி பத்திரிக்கைய என் கையில எல்லாம் தொட சொல்லாதே.. தோட்டத்து நாயி வயத்தால போன அத வச்சு துடைக்க மட்டும் ஒரு 50 பன்டல் அனுப்பிடு.

சோ - சரிம்மா , சரிம்மா .. அந்த பாக்கியமே போதும்.. அந்த நாய் நம்மளவா நாய் தானே...

அம்மா - டேய் சொட்ட, தேவையில்லாத கேள்வி, பேசின மாதிரி வந்து பனத்தை வாங்கிட்டு ஓடு.

சோ - சரிம்மா, சரிம்மா, வெச்சுடரேன்.. காபி வித் அனு ப்ரோக்ராம் போகனும், அங்கே போய் உதார் உடனும்.. உத்தரவு வாங்கிக்குறேன் மா..

அம்மா - சரி சரி போ போ.. (மனதுக்குள்) இவன் கூட சேர்ந்து கருனாநிதிய ஒழிக்கனும்.. அடுத்ததா ஆட்சி வந்ததும் இவன் மொதல்ல தூக்கி உள்ள போடனும்...மவவே என் ஆட்சில இவன் வாயே தொறக்ககூடாதா. இந்த பாப்பாத்தியா , கொக்கா...

இறக்குவானை நிர்ஷன் said...

பதிவு நன்றாயிருக்கிறது.
உண்மையில் இப்படித்தான் நடந்ததோ????

Anonymous said...

saavarathu kichami iyero avaar sonthamo illai.. adaan nanna pesa mudiyarathu, kindal panna mudiyarathu.. yaro kuzhentheel thane.. namakku enna vandadu

Anonymous said...

hahaha

Madhusudhanan Ramanujam said...

அப்புறம்... அதெப்படி எல்லாத்துலயும் உம்மால ஜாதி பேச முடியுது? உண்மையில்... உங்களைப் போன்றவர்கள் தான் ஜாதி வெறியர்கள்.

//அடுத்ததா ஆட்சி வந்ததும் இவன் மொதல்ல தூக்கி உள்ள போடனும்...மவவே என் ஆட்சில இவன் வாயே தொறக்ககூடாதா.//

சோ ராமசாமியை உள்ளே வைக்க இனிமேல் தான் ஒருத்தன் பிறந்து வரணும் மக்கா. கருணாநிதியும் சரி, அம்மாவும் சரி... சோவை உள்ள வைக்கிறதா கனவு கூடக் காணமுடியாது.

வாக்காளன் said...

மதுசூதன் அண்ணே, இங்கே சாதி எங்கே கண்டுபுடிச்சீங்க..
ஜெயலலிதா எப்படி பேசியிருக்கு பார்த்தீங்களா? சாதி நு வந்தா அதுக்கும் அப்படி தானே போடனும்...

சோ விக்கு மட்டும் போட்டதுக்கு காரணம் இருக்கு நைனா..

பாப்பாத்தி நு ஜெயா சொன்னதுதான் சட்டசபைல..

//சோ ராமசாமியை உள்ளே வைக்க இனிமேல் தான் ஒருத்தன் பிறந்து வரணும் மக்கா. கருணாநிதியும் //

சொட்டை மட்டும கருணாநிதி கூட உட்கார்ந்து பார்த்து எழுதினானா? கலந்து அடிச்சுவிட்டான் துக்ளக்ல, அதே மாதிரி அடிச்சு விட்டது தான் இது..

Sanjeev said...

வாக்காளன் நையாண்டி சூப்பர்..சோவிற்கு ரொம்ப தான் கொழுப்பு

muthu said...

/அம்மா - டேய் சொட்ட, தேவையில்லாத கேள்வி, பேசின மாதிரி வந்து பனத்தை வாங்கிட்டு ஓடு.
//

நச், நச், நச்

ஜோசப் பால்ராஜ் said...

அது எப்டீங்க, தமிழர்களுக்கு எதிரா கருத்து சொல்றாதா இருந்தாலும் சரி, புலிகளுக்கு எதிரா கருத்து சொல்றதா இருந்தாலும் சரி சொல்லிவைச்ச மாதிரி பெயரில்லாம அணாணியாவே வர்றாய்ங்க? பெயர சொல்லிக்கிட்டு வந்தா கொண்டை வெளில தெரிஞ்சுடும்னு பயமா?

ஜோசப் பால்ராஜ் said...

சோ, இந்து ராம் மாதிரி புத்திசாலிங்க இருக்கதாலத்தான் இன்னும் இப்டியெல்லாம் தமிழனுக்கு விடிவுகாலம் பொறக்காம இருக்கு.
இதுல சோவ தூக்கி உள்ளறப் போட ஒருத்தன் பொறந்து வேற வரணுமா?
அப்டியெல்லாம் வேற அவர கதாநாயகராக்கணுமா?
வடிவேலு வீட்ல கல்லு விட்டு அடிச்சதுக்கு அவரு என்னா சவுண்டு விட்டாரு, ஒரு பய கண்டுகிட்டானா. அதான் சாமி காமெடியனுக்கு உள்ள மரியாதை. வடிவேலுக்காவது கொஞ்சம் நஞ்சம் மரியாதை இருந்துச்சு. சோ வுக்கு எல்லாம் அது கூட கிடையாது. அவரு காமெடிய எல்லாம் படிச்சுட்டு சிரிச்சுகிட்டு போவனும்.

//dondu(#11168674346665545885) said...
கிண்டலாக எழுதியிருந்தாலும் அது கிட்டத்தட்ட அப்படியேதான் நடந்திருக்கும் என நினைக்கிறேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்//

உங்கத் தலைவர் சோ சொல்லியிருந்தா சரியாத்தான் சார் இருக்கும்.

muthu said...

சோ மாரி எதுவேனா கற்பனையா எழுதுவான், கார்ட்டூன் போடுவான், அத இவிங்க எடுத்து கட் அன்ட் பேஸ்ட் பதிவு போடுவனுங்க, அத ஒருத்தர் வந்து (மூத்தவர் வேற இந்த லட்சணத்துல) காமெடி தான் இருந்தாலும் இப்படி நடந்திருக்கலாம்னு எழுதுவாராம்..

மத்தவங்க அத பத்தி பேசினா மட்டும் வந்துடும் இவுங்களுக்கு.. அடங்குங்கப்பா
பனியன் உள்ளே தூக்கி போடுங்க.. வெளிய தொங்க வேண்டாம் அது

Madhusudhanan Ramanujam said...

//மத்தவங்க அத பத்தி பேசினா மட்டும் வந்துடும் இவுங்களுக்கு.. அடங்குங்கப்பா
பனியன் உள்ளே தூக்கி போடுங்க.. வெளிய தொங்க வேண்டாம் அது//

நல்லா பேசுங்கையா.. அதுக்கு தான பதிவு போடுறது. ஆனா நீங்க சோ சொல்றது தப்பு அப்படின்னு நாகரீகமா சொன்ன பரவாயில்லையே. சோவுக்கு எங்க முடி இருக்கு, எதுக்கு விக் வெச்சார். இப்படித் தான பேசறீங்க. அடுத்தது பூணூல். அது யாருக்கு எங்க தொங்கினா உங்களுக்கு என்ன வந்தது? ஏன் ஒரு இஸ்லாமியன் கிட்ட போய் போதும்.. தொப்பி தெரியுது எடுத்து உள்ள வைன்னு சொல்லிப் பாருங்களேன். அப்பத்தான உங்க வீரமெல்லாம் வெளிச்சத்துக்கு வரும். யார் திருப்பி அடிக்க மாட்டார்களோ, அவர்களை அடிப்பது தானே உங்ங்களைப் போன்றவர்களின் வீரம்.

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

யார் திருப்பி அடிக்க மாட்டார்களோ, அவர்களை அடிப்பது தானே உங்ங்களைப் போன்றவர்களின் வீரம். //

அம்பி பாவம்
விட்டுடுங்கோ