Sunday, November 09, 2008

கலைஞர் பிக்சர்ஸின் - எம்.பிக்கள் ராஜினாமா

30 comments:

கோபி said...

நல்ல காட்டுன்

Anonymous said...

ஆதிக்க சக்திகளும்,பிற்போக்கு எண்னம் கொண்டோரும் கலைஞர் அவர்களை வஞ்சகம் செய்து வீழ்த்த துடிக்கும் எண்ணம் நிறைவேறாது கோபி அவ்ர்களே.

எப்படியாவது மதவாத சக்திகளை ஆட்சியில் அமரவைத்து அழகு பார்க்க வேண்டும் என்றஎண்ணம் இனி கடைத்தேறாது.

இனி ஒருமுறை தமிழ் இனம் ,இனத் துரோகிகளிடம் ஏமாறத் தயராயில்லை

ஒடுக்கபட்ட இனக் காவலனாம் கன்னித்தமிழ் புகழ் பாடும் தலைவர் கலைஞர் அவர் வாழ்க பல்லாண்டு பல நூற்றாண்டு.

ஒரு செய்தி: இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான அறிகுறி தெரிவதாக வரும்பத்திரிக்கை செய்திகளை படித்தீர்களா கோபி அவ்ர்களே!

இலங்கைப் பிரச்சனையை சுமுகமாய் முடிக்க இருக்கும் கலைஞரை குறைகூறி விமர்சனம் செய்வதை நிறுத்தினால் தமிழ் உங்களை வாழ்த்துமே!

Madhusudhanan Ramanujam said...

//இலங்கைப் பிரச்சனையை சுமுகமாய் முடிக்க இருக்கும் கலைஞரை குறைகூறி விமர்சனம் செய்வதை நிறுத்தினால் தமிழ் உங்களை வாழ்த்துமே!//

இவங்களை மாதிரி ஆளுங்களுக்கு ஒரு அளவே இல்லாம போச்சுப்பா. அதிலையும் குறிப்பா இந்த அனானி பல பதிவுகளிலும் பொய் கலைஞர் புகழ் பாடிக்கொண்டிருக்கிறார். கூட்டத்துக்கு ஆள் சேர்க்குற மாதிரி கழங்களில் இப்போ இதுக்கும் ஆள் சேக்கறாங்களோ?

Anonymous said...

//கலைஞர் தன் ஆட்சியை விட்டு விட விரும்பவில்லை என்று சொல்கிறார்கள். ஆம் கலைஞர் ஆட்சியை விட்டு விட விரும்பாமல் இருக்கலாம். தன் கடின உழைப்பினால் ஐந்து முறை ஆட்சி பொறுப்பேற்றும் அதை முழுவதுமாக நடத்தவிடாமல் கலைத்தவர்கள் ஆயிற்றே இவர்கள். இப்போதும் சும்மா இருப்பார்களா. அதனால் தான் அப்படியும் இப்படியும் மாற்றி மாற்றி கூப்பாடு போட்டு எப்படியாவது ஆட்சியை காவு வாங்க காத்துக் கொண்டு இருக்கிறார்கள். கலைஞர் ஆட்சி தொடர வேண்டும், இந்த முறையும் முழுமையாக நடைபெற வேண்டும்.

உணர்ச்சியை உசுப்பி விடும் சூழ்ச்சிகளுக்கு இரையாவதை விட பல்டி அடிப்பது ஒன்றும் தவறல்ல, ஆட்சியில் இருக்கும் வரை சூழ்ச்சியாளர்களுக்கு ஆப்புகள் தொடரும்//


ithaiyum padingka anna
ithuvum niyamthaane

Madhusudhanan Ramanujam said...

//ithaiyum padingka anna
ithuvum niyamthaane//

ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்டது தி.மு.க ஆட்சி. அதை கலைக்க வேண்டும் என்பது என் எண்ணமில்லை. ஆனால் நாங்கள் ஆட்சியை இழக்கத் தயார் என்று ஜம்பம் அடித்துவிட்டு, பின்பு அப்படியே பல்டி அடிப்பதைத் தான் விமர்சிக்கிறேன். அது தவிர ஆட்சி கலைக்க வேண்டிய அளவுக்கு தமிழகத்தில் அப்படி ஒன்றும் நடந்துவிட இல்லை. இலங்கை பிரச்சினைக்காக கருணாநிதியின் அரசு பதவி விலக வேண்டியதும் இல்லை. சு.சாமி, ஜெ ஆகியோர் எதற்கெடுத்தாலும் ஆட்சியைக் கலை, ராஜினாமா செய் என்று கூப்படு போடுவது அவர்களின் தரக்குறைவான அரசியல் புரிதலுக்கு நல்ல சான்று என்பது என் கருத்து. மேலும் ஒரு தேர்தல் நடத்துவதற்கு நாம் செலவு செய்யும் தொகையை சற்று யோசியுங்கள். இப்படி இருக்க தினம் ஒரு தேர்தல் என்றால் என்னாவது நாடு?

Anonymous said...

//ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப் பட்டது தி.மு.க ஆட்சி. அதை கலைக்க வேண்டும் என்பது என் எண்ணமில்லை. ஆனால் நாங்கள் ஆட்சியை இழக்கத் தயார் என்று ஜம்பம் அடித்துவிட்டு, பின்பு அப்படியே பல்டி அடிப்பதைத் தான் விமர்சிக்கிறேன். அது தவிர ஆட்சி கலைக்க வேண்டிய அளவுக்கு தமிழகத்தில் அப்படி ஒன்றும் நடந்துவிட இல்லை. இலங்கை பிரச்சினைக்காக கருணாநிதியின் அரசு பதவி விலக வேண்டியதும் இல்லை. சு.சாமி, ஜெ ஆகியோர் எதற்கெடுத்தாலும் ஆட்சியைக் கலை, ராஜினாமா செய் என்று கூப்படு போடுவது அவர்களின் தரக்குறைவான அரசியல் புரிதலுக்கு நல்ல சான்று என்பது என் கருத்து. மேலும் ஒரு தேர்தல் நடத்துவதற்கு நாம் செலவு செய்யும் தொகையை சற்று யோசியுங்கள். இப்படி இருக்க தினம் ஒரு தேர்தல் என்றால் என்னாவது நாடு//

thanks

இறக்குவானை நிர்ஷன் said...

////இலங்கைப் பிரச்சனையை சுமுகமாய் முடிக்க இருக்கும் கலைஞரை//

உண்மையாவா?

நல்லதொரு களம் கிடைத்தால் எந்தக் கலைஞரும் ஆடாமல் விடுவாரோ??

Anonymous said...

//இறக்குவானை நிர்ஷன் said...
////இலங்கைப் பிரச்சனையை சுமுகமாய் முடிக்க இருக்கும் கலைஞரை//

உண்மையாவா?//

பத்திரிக்கை படிக்கவும் நண்பரே.

விடுதலை புலிகளின் போர் நிறுத்த ஒப்பந்த அறிவிப்பை தொடர்ந்து இலங்கை அரசையும் போர் நிறுத்த ஒப்பந்த அறிவிப்புக்கு, செயல் வடிவம் தந்து ,அமைதி பேச்சு வார்த்தை மீண்டும் தொடங்கிட அரசியல் சாணக்கியர் என அரசியல் பார்வை யாளர்களால் பெரிதும் பாராட்டப்படும்
தலைவர் சீரிய முற்சிகளை தொடங்கிவிட்டார்.

தமிழ் மொழிப்பற்றும் , தமிழர் நலன் காக்கும் நற்குனமும் ஒருங்கே அமையப் பெற்ற அனைத்து தமிழ்ச் சகோதரர்களும் கொள்கை வேறுபாடுகளை மறந்து கலைஞ்ரின் ஒப்பற்ற தலமையில் அணிதிரள்வோம்

தமிழினத் தலவரின் அரும் பெரும் முயற்சியால் , நடுவண் அரசின் துணையோடு இலங்கை வாழ் தமிழர் நலம் நிச்சயம் காக்கப்படும் இது காலம் பார்க்கப் போகின்ற ஒரு வீர வரலாறு.

கலைஞரை நம்பினோர்
கைவிடப் படார்

Madhusudhanan Ramanujam said...

//பத்திரிக்கை படிக்கவும் நண்பரே.//

மத்தவங்களை படிக்கச் சொல்றதோட சரியா? நீங்கல்லாம் படிக்க மாட்டீங்களா? அதே பத்திரிக்கையில் தான் இலங்கை அரசு போர் நிறுத்தம் எனும் பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்துள்ளது.

Madhusudhanan Ramanujam said...

//கலைஞரை நம்பினோர்
கைவிடப் படார்//

நல்லா நம்புங்க சாமி. வெளங்கிடுவீங்க...

Anonymous said...

இலங்கைத் தமிழருக்கான ஒரு நிம்மதியான, நீடித்த தீர்வு பின்வரும் முறையில்தான் அமைய முடியும் என்பதை நீங்கள் முதலில் விளங்கிக் கொள்வது அவசியம். அதாவது, இலங்கையில் முயற்சிக்கப்பட்ட எல்லாத் தீர்வு முயற்சிகளுக்கும் தடையாகவும், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கைக்கு ஒரு அச்சுறுத்தலாகவும், விளங்குகின்ற புலிகளிடமிருந்து தமிழ்மக்கள் முதலில் விடுவிக்கப்பட வேண்டும். அந்த விடுதலையை இன்றுள்ள நிலையில் மாற்றுத்தமிழ் இயக்கங்களோ, இலங்கையிலுள்ள இடதுசாரிகளோ பெற்றுத்தரக்கூடிய நிலையில் இல்லை. இலங்கை அரசாங்கத்தால், அதாவது இலங்கை அரச படையால் மட்டுமே, புலிகளிடமிருந்து தமிழ்மக்களை விடுவித்தல் என்பது சாத்தியமாகும். இதனைத்தான் கிழக்கு மாகாணத்தில் இலங்கை அரசாங்கம் செய்தது. (இலங்கை அரசாங்கம் எப்பொழுதும் தமிழ்மக்களுக்கு எதிராகவே செயல்படுகிறது என்று நீங்கள் கருதினால், கிழக்குமாகாணத்தில் இராணுவ நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டபோது, கிழக்கு மாகாண தமிழ்மக்களுக்காக குரலெழுப்பாமல் நீங்கள் எல்லாம் எங்கு ஒழிந்து கொண்டீர்களோ தெரியவில்லை. அதனால்தான் தறபோதைய உங்கள் ஈழத்தமிழர் ஆதரவுக்கு பின்னால், தமிழ் அல்லது மனிதாபிமான உணர்வைவிட, புலிகளின் பணப்பட்டுவாடா விடயம்முக்கிய பங்கு வகிக்கிறதோ என்ற நியாயமான சந்தேகம் எமக்கெல்லாம் ஏற்படுகிறது!) அதைத்தான் இப்போது வடக்கிலும் இலங்கை அரசாங்கம் இப்பொழுது செய்கிறது. கிழக்கு மாகாணத்தில் புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையின்போது புலிகளின் பிடியிலுள்ள தமிழ்மக்கள் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டை நோக்கியே ஓடிவந்தார்கள். வடக்கு மாகாணத்திலும் (மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி) புலிகளின் பிடியிலுள்ள தமிழ்மக்கள் இலங்கை இராணுவக் கட்டுப்பாட்டை நோக்கியே ஓடிவருகின்றார்கள் என்பதை நீங்கள் கவனிக்க வேண்டும். புலிகளை அப்புறப்படுத்திய பின்னர், இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வு காணவேண்டியது இலங்கை அரசின் தட்டிக்கழிக்க முடியாத கடமையாகும். புலிகளை அழித்த பின்னர், இலங்கைத்தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வினை இலங்கை அரசு முன்மொழியுமென யாராலும் அறுதியிட்டும் கூறமுடியாது. எனவே புலிகளைத் தோற்கடித்துவிட்டு, இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக்காணும்படி இலங்கை அரசைக் கோருவதையே, தமிழக இடதுசாரி சக்திகள் செய்ய வேண்டும். அதுவே சர்வதேச இடதுசாரிகளின் சரியான நிலைப்பாடாக இருக்கமுடியும். அதைவிடுத்து, ஒவ்வொரு முறையும் புலிகள் அழிவை நெருங்கும்போது, ஏதாவதொருவெளிநாட்டு சக்தி புலிகளை பாதுகாத்து விடுவிப்பதின் மூலம், ஈழத்தமிழர்களின்; பிரச்சினைக்கு ஒரு முடிவு ஏற்படாமல் இழுபட்டுச் செல்வதற்கு உதவுவதாகவே முடியும். இதை நீங்கள் தெளிவாக புரிந்து கொள்வது அவசியம்.

http://www.thenee.com/html/111008-4.html

Anonymous said...

//Madhusudhanan Ramanujam said...
//பத்திரிக்கை படிக்கவும் நண்பரே.//

மத்தவங்களை படிக்கச் சொல்றதோட சரியா? நீங்கல்லாம் படிக்க மாட்டீங்களா? அதே பத்திரிக்கையில் தான் இலங்கை அரசு போர் நிறுத்தம் எனும் பேச்சுக்கே இடமில்லை என்று அறிவித்துள்ளது.

November 11, 2008 10:41 AM


Madhusudhanan Ramanujam said...
//கலைஞரை நம்பினோர்
கைவிடப் படார்//

நல்லா நம்புங்க சாமி. வெளங்கிடுவீங்க...//


பிற அரசியல் தலைவர்களால் முடியாதை செய்து காட்டும் பேறாற்றல் பெற்றவர் நமது தலைவர் கலைஞர் என்பதற்கு பல சரித்திரச் சான்றுகள் உள்ளன மதுசூதனாரே.

1.எதிர்கட்சிகள் போன தேர்தலில் கழகத்தின் தேர்தல் அறிக்கையின் சொல்லும் இலவசங்கள் கொடுப்பதற்கு போதிய நிதி ஆதாரம் கிடையாது என்ற வாதத்தை முறி அடித்து இன்று அதனை எல்லாம் நடத்திக் காட்டி வெற்றித் தலைவனாய் பெருமிதத்துடன்
தனது பொற்கால ஆடசியை தொடர்கிறார்

அ.1.5 கோடி இல்லங்களில் வண்ணத் தொலைகாட்சி.
ஆ.இலவச காஸ் இனைப்பு ஏழை எளியோருக்கு( தொடர்கிறது)
இ.உழவருக்கு இலவச நிலங்கள் (பகிர்தல் தொடர்கிறது)
ஈ.இலவச வீட்டு மனை பட்டாக்கள்( சொன்ன இலக்கையும் தாண்டி)

உ.ஒரு கிலோ அரிசி ருபாய் இரண்டுக்கே முடியாது என்ற ந்திக் கட்சிகளின் முடக்கு வாதத்தை முனையிலே முறியடித்து அதையும் குறைத்து ருபாய் ஒன்றுக்கு ஒரு கிலோஅரிசி தாராளாமாய்
ஏழை எளியோரின் வயிரும் வாயும் வாழ்த்தி மகிழ்கிறது.

ஊ. 50 ரூபாய்க்கு மலிவு விலையில் மளிகை சாமான்( இதனுடைய பெரும் வெற்றியை பார்த்து கேரள அரசு மலிவு விலை காய்கறித் திட்டம் தொடங்குகிறது- இன்றய பத்திரிக்கை செய்தி)

முந்தய ஆட்சியாளாரால் முடியாத நான்கு சீர்மிகு செயல்களை செம்மையாய் நடத்தி காட்டிய தலைவரின் ஆற்றல்மிகு திறமைகள்

1.பொறியியல்/மருத்துவ கல்விகளில் நுழைவுத் தேர்வை மிகத் திறமையாக எந்த ஒரு சட்ட சிக்கலும் இன்றி நடுவன் அரசின் கல்வித் துறையின் மேலான ஒப்புதலுடன் ரத்து செய்தது.


2.அரசுத் தொலைக் காட்சியை வெற்றிகரமாய் நடத்திக் கொண்டிருப்பதற்கு( தனியாரின் ஏகபோக உரிமையை தக்க வைத்துக்கொள்ள அவர்கள் எற்படுத்தும் சட்ட சிக்கல்கலையும் திறமையாக சமாளித்து)

3.வருமான இழப்பில் இருந்த போக்குவரத்துத் துறையை வளம் கொழிக்கும் துறையாய் மாற்றியுள்ள செயல்

4.இயற்கையின் சதியால் ஏற்பட்டிருந்த
10 மணி நேர மின் தடையை 2 மணி நேரமாய் மாற்றிய செயலாற்றல்

50 ஆண்டு கால பொதுவாழ்வில் அவர் பெற்ற அனுபவம் இந்த இலங்கை பிரச்சனையின்லும் 100 % வெற்றியை பெறுவதற்கு உதவி செய்யும்.

காலம் பதில் சொல்லும் மதுசூதானாரே

Anonymous said...

//இலங்கைப் பிரச்சனையை சுமுகமாய் முடிக்க இருக்கும் கலைஞரை//

உண்மையாவா?//

நல்லது நினத்தால் நல்லது நடக்கிறது.
அதுக்கு மேலும் நடக்கிறது.

கடைசி செய்தி:(please see sun news- tv channel)

தமிழக சட்டமன்றத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஒருமனதாக இலங்கை போர் நிறுத்ததற்கு தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்கள்.

7 கோடிதமிழ் மக்களின் ஒரே தலைவர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று நடுவண் அரசின் முயற்சிகளால், இலங்கையில் போர் நிறுத்தம் செய்வதற்கும் அமைதிப் பேச்சு வார்த்தை தொடங்குவதற்கும் அதன்பின் நடக்க்ப் போகும் நன்மைகளுக்கும் நமது பாராட்டை தலைவருக்கு நன்றியாய் தெரிவிப்பது ஒவ்வொரு தமிழனின் கடமையன்றோ மதுசூதனாரே!


எண்ணங்கள், செயல்களாக உருமாற்றப்பட்டு, செயல்கள் அவற்றை நிறைவேற்றுவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வரைமுறைகளுக்கு உட்பட்டு முடிவுகளை அடையும் முயற்சியே திட்ட செயல்பாடு ஆகும்.

இதனை இவன் முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்

Madhusudhanan Ramanujam said...

//பிற அரசியல் தலைவர்களால் முடியாதை......இதனை இவன் முடிப்பான் என்றாய்ந்து
அதனை அவன் கண் விடல்//

ஐயா அனானி, இப்படி ஜல்லியடிக்கிறீர். எவ்வளவு சில்லரை தேறியது? அறிவாலயத்துல உள்ளவங்க கூட இவ்வளவு வக்காலத்து வாங்க மாட்டாங்கப்போய்.

Anonymous said...

//Madhusudhanan Ramanujam said...
//கலைஞரை நம்பினோர்
கைவிடப் படார்//

நல்லா நம்புங்க சாமி. வெளங்கிடுவீங்க...//இந்தியாவுக்கு வந்துள்ள இலங்கை அதிபருடன் நடுவண் அரசு தொடங்கியிருக்கும் நல்லெண்ண சமாதான முயற்சி வெற்றி பெறும் நிலையில் உள்ளதாக செய்திகள் வரத் தொடங்கியுள்ளது.

( கேட்டீங்க்காளா! கேட்டீங்களா!)

மீண்டும் கலைஞரின் அரசியல் சாணக்கியம் வென்று சரித்திரம் படைப்பதை பார்த்தீர்களா மதுசூதானாரே!

அவரை நீங்களும் பாராட்டி( இலங்கை பிரச்சனையை தீர்த்துவைக்க நடந்த அவரது அறிவுபூர்வமான, நியாயமான, மனித நேய அணுகு முறைகளின் அடிப்படையில்) பதிவு போடும் நாளும் வரும்.

Madhusudhanan Ramanujam said...

//அவரை நீங்களும் பாராட்டி( இலங்கை பிரச்சனையை தீர்த்துவைக்க நடந்த அவரது அறிவுபூர்வமான, நியாயமான, மனித நேய அணுகு முறைகளின் அடிப்படையில்) பதிவு போடும் நாளும் வரும்.//

ஒரு முடிவோடத்தான்யா இருக்காய்ங்க... அப்படி ஒரு நாள் வரும்போது பார்க்கலாம். ஒண்ணு மட்டும் உறுதியா தெரியுது. இலங்கை பிரச்சனை தீர்ப்பதில் அக்கறை இருக்கோ இல்லையோ, அதனால் மு.க வுக்கு எப்படி லாபம் தேடலாம்னு யோசிக்க உங்களைப் போல நிறைய பேர் இருக்கீங்க.

Anonymous said...

//ஒரு முடிவோடத்தான்யா இருக்காய்ங்க... அப்படி ஒரு நாள் வரும்போது பார்க்கலாம். ஒண்ணு மட்டும் உறுதியா தெரியுது. இலங்கை பிரச்சனை தீர்ப்பதில் அக்கறை இருக்கோ இல்லையோ, அதனால் மு.க வுக்கு எப்படி லாபம் தேடலாம்னு யோசிக்க உங்களைப் போல நிறைய பேர் இருக்கீங்க//

பரந்தி விரிந்த இந்த பூமிப்பந்தில் அனைத்துகண்டங்களிலும் வழும் தமிழ் சமுதாயம் வளமாய் வாழ வேண்டும் ,அவ்ர்தம் வாழ்வில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் நிம்மதியும் வழர்ந்து சிறக்கேண்டும் ஒறெ கொள்கையுடன் நாளும் 20 மணி நேரத்திற்கும் மேல் பண்யாற்றும் அந்த ஒப்பற்ற தலவனுக்கு ஒரு பேர் என்றால் ,பெருமை என்றால் ,ஒரு பாராட்டு என்றால் தமிழ்த் தாயின் தலைமகனுக்கு கிடைத்தாய் கொண்டாடுவது தானே நாம் அன்னைத் தமிழுக்குச் செய்யும் தொண்டு மதுசூதனாரே

Madhusudhanan Ramanujam said...

//பரந்தி விரிந்த இந்த பூமிப்பந்தில் அனைத்துகண்டங்களிலும்.........//

முடியல்ல..........

Anonymous said...

//Madhusudhanan Ramanujam said...
//பரந்தி விரிந்த இந்த பூமிப்பந்தில் அனைத்துகண்டங்களிலும்.........//

முடியல்ல..........//

இதை அழகாய் -கழகக் கொள்கைகளையும் .கழகத் தலைவரின் சாதனைகளையும்,கழக கொள்கைகளுக்கு எதிராய் செயல் படும்
ஆதிக்க,பிற்போக்கு,மதவத சக்திகளின்( பொய் பிரச்சாரங்களை எதிர்த்து வலிமையான எழுத்துத் திறமையால் முறியடித்துவரும் நட்சத்திரப் பதிவாளர் நண்பர் லக்கிலுக் அவர்களுக்கு கலைஞரின் பாராட்டு ( கற்பனைதான் என்றாலும்)சொல்லியுள்ளது.

அதிலிருந்து உங்கள் மேலான பார்வைக்கு சில வரிகள் ராமனுஜரே

//மந்த மதியினர் மந்தைகளை போல நம்மிடத்திலே மேடைகளில் மோதியது ஒருகாலம். ஊத்தை மொழி கொண்டு ஊடகங்களில் நம்மை ஏசியது ஒருகாலம். இன்று உலகை உள்ளங்கையில் சுருக்கும் இணையங்களிலே நம்மை இழிமொழிகளால் ஏசிவருகிறார்கள். உள்ளங்கை நெல்லிக்கனி போன்ற உண்மை நாறுகின்ற மட நம்பிக்கைக் குட்டையில் ஊறுகின்ற மட்டையாகி, சூத்திரனாய் பிறந்தவன் நாடாண்டால் நாடு நாசம் ஆகும் என்பது சனாதானம் பேசும் வருணமகரிஷிகளின் எண்ணம். அவர்கள் தருமத்தை அவர்கள் பேணுகிறார்கள். நம் கடமையை கண்ணியத்தோடு நாம் செய்வோம்.

சனாதான சாதிவெறி வர்க்கம் புரிகின்ற தந்திரங்களைத் தோலுரித்து அறியாமை நீக்கி ஆர்த்தெழுவீர் அடலேறே! மயங்கி உறங்க இதுகாலமல்ல. அடக்குமுறைகளுக்கு எதிராக அடங்கமறுத்து எழு. ஏகலைவன் வித்தை கற்க எந்த சாத்திரமும் அனுமதிக்கவில்லை. அவனாய் கற்றான். பாரில்வாழும் மாந்தர்களின் உள்ளத்தை வென்றான். ஆயின், கட்டை விரலையோ, தலையையோ, காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் அவன் பட்டையை உரித்துவிடு.

முதலுக்கே மோசம் வந்தால் முயலாக, ஆமையாக கிடத்தல் நன்றல்ல. ஆயிரம் அடி பள்ளத்தில் வீழ்ந்தவனை கைதூக்கி கரையேற்றும் இந்நேரத்தில், இணையத்திலே கனமான பாறை கொண்டு உன் தலையை சுக்குநூறாக்க எத்தனிக்கும் சூழ்ச்சியாளர்களை கண்டால் உதை. ஓட ஓட விரட்டு. ஆறிலும் சாவு. நூறிலும் சாவு. ஆனது ஆகட்டும்.

Anonymous said...

///முதலுக்கே மோசம் வந்தால் முயலாக, ஆமையாக கிடத்தல் நன்றல்ல. ஆயிரம் அடி பள்ளத்தில் வீழ்ந்தவனை கைதூக்கி கரையேற்றும் இந்நேரத்தில், இணையத்திலே கனமான பாறை கொண்டு உன் தலையை சுக்குநூறாக்க எத்தனிக்கும் சூழ்ச்சியாளர்களை கண்டால் உதை. ஓட ஓட விரட்டு. ஆறிலும் சாவு. நூறிலும் சாவு. ஆனது ஆகட்டும்///

யோவ் உடன் பிறப்பு

இதைப் படிச்சுட்டு கருணாரிதி தொங்கிடப் போராறு. பாத்து

Anonymous said...

தமிழகத்தில் நடக்கும் எல்லா அட்டூழியங்களுக்கும் பார்ப்பனர், பார்ப்பனீயம்தான் காரணம் என கருணாநிதியும் திராவிட கும்பலும் கதை கட்டிவிட்டு,கவிதை எழுதி மக்களை ஏமாற்றி தொடர்ந்து ஜாதி அரசியல் செய்து பணம் சேர்க்கும் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாமல் அறிவிலிகளாய் வாழும் ஆட்டு மந்தை உடன்பிறப்பின் கூட்டத்திற்கு இது போல கருணாநிதி அடிக்கடி "செருப்படி" ஆயிரம் கொடுப்பார்.அது கூட புரியாமல் அதையும் சாதனை என்று பிதற்றித் திரியும் இவர்களைப் பாவம் என்று சொல்வதைத்தவிர வேறென்ன சொல்ல?

இதில் தங்களது கையாலாகத தனத்திற்கு பார்ப்பனரைத் திட்டித் தீர்த்து "தங்கள் குறிகளை தங்களே நக்கிக் கொள்ளும் கழுதைப் புலிகளைப் போன்ற" இணைய நாதாரிகள் நிலை இன்னும் பரிதாபம்.

Anonymous said...

சில சொற்றொடர் விடு பட்டுவிட்டதால் மீண்டும் இடுகிறேன்.

"""இதில் தங்களது கையாலாகத தனத்திற்கு பார்ப்பனரைத் திட்டித் தீர்த்து " சிங்கங்களை தனியாய் எதிர்க்கத் துணிவில்லாமல் ஊளையிட்டுத் தங்கள் குறிகளை தங்களே நக்கிக் கொள்ளும் கழுதைப் புலிகளைப் போன்ற" இணைய நாதாரிகள் நிலை இன்னும் பரிதாபம்.""

Anonymous said...

//Anonymous said...
தமிழகத்தில் நடக்கும் எல்லா அட்டூழியங்களுக்கும் பார்ப்பனர், பார்ப்பனீயம்தான் காரணம் என கருணாநிதியும் திராவிட கும்பலும் கதை கட்டிவிட்டு,கவிதை எழுதி மக்களை ஏமாற்றி தொடர்ந்து ஜாதி அரசியல் செய்து பணம் சேர்க்கும் சூழ்ச்சியை புரிந்து கொள்ளாமல்//


.)))))

Anonymous said...

இறுதி வெற்றி கலைஞருக்கே.
அவரது சட்டமன்ற பேச்சினை படிக்கவும்
மகிந்த ராஜபக்சவின் உறுதி மொழிகளை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமருக்கு எச்சரித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்த விவாதத்தின் போதே அவர் இதனைத் தெரிவி்த்தார். அவர் அங்கு பதிலளிக்கும் போது:-

தமிழர்கள் மீதான வான் தாக்குதலை நிறுத்த வேண்டும். தமிழர்களின் குடிமனைகள், ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்த மகிந்த ராஜபக்ச தயாரில்லை. இந்த நிலையில் தமிழ் மக்களைக் காக்கும் பொறுப்பை நான் தட்டிக்காக்க மாட்டேன் என மகிந்த ராஜபக்ச சுவைபடத் தெரிவித்திருப்பது, தமிழர்களை ஏமாற்ற முடியும் என்ற எண்ணத்திலேயே அவர் கூறியிருக்கிறார். எனவேதான், மகிந்த ராஜபக்சவின் கூற்றை இந்திய மத்திய அரசு சரிவரப் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படமாட்டாது என கூறிக்கொண்டு, மறுபுறத்தில் விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தத்தை நடத்தி இலங்கை இனப் பிரச்சினையை இரு வேறு பிரிவாக மகிந்த ராஜபக்ச பார்க்கிறார். விடுதலைப் புலிகள் மீது குண்டு வீசினாலும், தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசினாலும் அது விடுதலைப் புலிகள் மீது நிட்சயமாக குண்டு வீழும். எனவே யுத்த்தின் மூலம் இரு பிரிவினரையும் அழிக்க மகிந்த ராஜபக்ச யுத்தத்தை மேற்கொள்கின்றார்.

மகிந்த ராஜபக்சவினால் விடுக்கப்பட்ட காலக்கெடு தன்மை விளங்குகின்றது. இவற்றையெல்லாம் நம்பி பிரதமர் மன்மோகன் சிங் ஏமாந்து விடக்கூடாது எனத் தெரிவித்தார்.பதவிகளை தோளில் போடும் துண்டாய் பாவிக்கும் தானைத் தலைவனின், தன்னலமற்ற தமிழர் நலம் காக்கும் சிறப்பை புரிந்து கொள்ள மறுக்கும் நண்பரே
காலம் பதில் சொல்லும்.


ஒரு அன்பு வேண்டுகோள்

யாகாவாராயினும் நா காக்கா காவாக்கால்
சோகாப்பர் சொல்லிலுக்க பட்டு

Madhusudhanan said...

//மகிந்த ராஜபக்சவின் உறுதி மொழிகளை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என தமிழக முதல்வர் கருணாநிதி இந்தியப் பிரதமருக்கு எச்சரித்துள்ளார்.......//

ஆஹா.. இவர் இந்த மாதிரி இப்பத்தான அனைத்து கட்சி கூட்டத்துல டகல் உட்டாரு? அதுக்குள்ள மறந்து போச்சா? அதுக்குத் தான இந்த கார்ட்டூன் எல்லாம்.

//பதவிகளை தோளில் போடும் துண்டாய் பாவிக்கும் தானைத் தலைவனின்//

தப்பா சொல்றீங்களே... உங்க தலைவருக்கு பதவி தோளில் போடும் துண்டு இல்லை. இடுப்பில் கட்டும் கோவணம் போல. அதை வேண்டாம்னு சொல்லி விட முடியாது.

//
யாகாவாராயினும் நா காக்கா காவாக்கால்
சோகாப்பர் சொல்லிலுக்க பட்டு//

இந்த திருக்குறளை ரூபாய்க்கு மூணுன்னு எங்க கிட்ட விக்கிறது இருக்கட்டும். முதல்ல உங்க தலைவருக்கு சபை நாகரீகம்னா என்னான்னு கத்துக் குடுங்கப்பு. கொஞ்சம் சாம்பிள் தரட்டுமா...?

தினகரன் பத்திரிக்கை அலுவலகம் எரிக்கப்பட்டு 3 பேர் இறந்த விஷத்தில் முதல்வரிடம் ஒரு நிருபர், “அழகிரி தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறதே, அவர் தான் குற்றவாளி என்று நினைக்கிறீற்களா” என்ற கேள்விக்கு... “நீ தான்டா கொலைகாரன்” என்று மறுப்புரையை வெகுவான நாகரீகத்துடன் பேசியவர் தான் உங்கள் தலைவர்.

பிராமணர்களை சதா தூற்றுவதையே தொழிலாய் கொண்ட அவர், பல அப்பாவி பிராமணர்கள் மனம் துன்புறும் வகையில் எவ்வளவு பேசி இருக்கிறார் என்ப்தற்கு காலம் தான் சாட்சி. உங்களைப் போல காலம் பதில் சொல்லும் அப்படின்னெல்லாம் சொல்லலை. நீங்கல்லாம் இது தான் நடக்கும் அப்படின்னு சொல்றீங்க. ஆனால் இது வரை நடந்ததை வைத்துப் பார்க்கும்போது, கலைஞருக்கு இலங்கை பிரச்சனை மற்ற பிரச்சனைகளில் இருந்து மக்களை திசை திருப்ப உதவும் ஒரு ஆயுதம் அவ்வளவே.

எழுதித் தருகிறேன் சாமி... கலைஞர் நிச்சயம் மத்தியில் பதவியை விடமாட்டார். ஏனென்றால் மாநிலத்தில் ஆட்சியை இழப்பதற்கு சமம் அது. ஆனால் ஒரு வேளை இப்படி நடக்கலாம். தனக்கு மக்களிடம் இன்னும் அதிக செல்வாக்கு உள்ளது என்று நினைத்து, இன்று இல்லாத ஒன்றை நிரூபித்துக் காட்ட நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்ட மன்ற தேர்தலை நடத்த நினைக்கலாம்.

அதுவும் இல்லையேல் இப்போதைக்கு பதவி விலகப் போவதில்லை. இப்போது பதவி விலகினால் ”ஆட்சி முடியும் தருவாயில் தான் காலை வாருவார் கலைஞர் என்ற இழிப் பெயரைச் சூட்டி விடுவார்கள் இனத் துரோகிகள்” அப்படின்னு ஒரு பிட்டை போட்டு கோவணத்தை காப்பாத்திப்பார்.

Anonymous said...

//எழுதித் தருகிறேன் சாமி... கலைஞர் நிச்சயம் மத்தியில் பதவியை விடமாட்டார். ஏனென்றால் மாநிலத்தில் ஆட்சியை இழப்பதற்கு சமம் அது. ஆனால் ஒரு வேளை இப்படி நடக்கலாம். தனக்கு மக்களிடம் இன்னும் அதிக செல்வாக்கு உள்ளது என்று நினைத்து, இன்று இல்லாத ஒன்றை நிரூபித்துக் காட்ட நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து சட்ட மன்ற தேர்தலை நடத்த நினைக்கலாம். //


கேரளா பிரபலஜோதிடர்கள்( நீங்கள் நம்பும்)அடுத்த ஆட்சியும் காங்கிரசுக்குத்தன் என சொல்லியுள்ளதாய்
செய்தி.

அத்வானி அவர்களுக்கு கிரக நிலை சரியில்லையாம்.
அம்மாவுக்கும் சாதகமான நிலை இல்லையாம்
அப்போ அய்யாவுக்குதானே ஜெயம்

( மக்களின் பேரதரவும் இதை உறுதி செய்து மகிழ்கிறது)

தமிழ் நாட்டின் நிலையை பார்க்கவும்.

நிச்சயம்
காங்கிரஸ்+தி,முக.+பா.ம.க.++ஒரு சில உதிரிக் கட்சிகள்+ஏதாவது ஒரு பொது உடைமைக்கட்சியும் பா.ம.க வழியில் ---- மீண்டும் முற்போக்கு கூட்டணி உருவாவது தெளிவாய்த் தெரியுது.


ஆனால் உங்கள் பக்கம்( நீங்கள் இதை மறுக்கலாம்)ஜெ அம்மையார் குழப்பத்தில்

சட்ட மன்ற மாணவர் மோதல் தலித் வாக்கு வங்கியை ( mgr ன் முழுக் கட்டுப் பாட்டில் இருந்தாய் சொல்லப்படும் அதிமுகாவின் வாக்கு வங்கி)திமுக+காங்கிரஸ் கூட்டணிபக்கம் திருப்பும் என்பதும் அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு.

விஜய் காந்த்,சரத் குமர்,ஏன் ரஜினி( அரசியலுக்கு வந்தால்)
இவர்கள் பிரிக்கப் போவது கலிஞரின் ஆட்சி எதிர்ப்பு வாக்கு வங்கியைத்தான் எனபது யாவரும் அறிந்த ஒன்றுதானே மதுசுதனாரே

அப்போ கலைஞரின் அரசியல் வாரிசு இளைய தளபதி ,ராஜேந்திர சோழனாய், ராஜ ராஜ சோழன் ஆட்சியை தொடர்வார்.

இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள்
நண்பரே

தமிழ்ர் இனம் என்றும் செய் நன்றி கொன்றதாய் வரலாறு இல்லை.

Madhusudhanan Ramanujam said...

//ஆனால் உங்கள் பக்கம்( நீங்கள் இதை மறுக்கலாம்)ஜெ அம்மையார் குழப்பத்தில்//

அதென்ன எங்கள் ஜெ? ஜெவும் ஒன்றும் சிறந்த நேர்மையாளர் இல்லையே. அது தான் சொத்துக் குவிப்பு வழக்குகள் ஊர் சிரிக்கிறதே. மு.க வை எதிர்ப்பவர்கள் இலைக்காரர்கள் தான் என்னும் உங்கள் அபத்தமான வாதத்தை மூட்டை கட்டி வையும் ஐயா.

//அப்போ கலைஞரின் அரசியல் வாரிசு இளைய தளபதி ,ராஜேந்திர சோழனாய், ராஜ ராஜ சோழன் ஆட்சியை தொடர்வார்.//

நீங்க என்னவோ இப்படி சொல்றீங்க. ஆனா உங்க தலைவருக்கே என்ன பண்றதுன்னு தெரியலை.

//தமிழ்ர் இனம் என்றும் செய் நன்றி கொன்றதாய் வரலாறு இல்லை.//

நீங்க என்ன சொல்லறீங்கன்னு புரியலையே. இப்ப யாரு எந்த நன்றிய மறந்துட்டாங்க?

Anonymous said...

//அதென்ன எங்கள் ஜெ? ஜெவும் ஒன்றும் சிறந்த நேர்மையாளர் இல்லையே. அது தான் சொத்துக் குவிப்பு வழக்குகள் ஊர் சிரிக்கிறதே. மு.க வை எதிர்ப்பவர்கள் இலைக்காரர்கள் தான் என்னும் உங்கள் அபத்தமான வாதத்தை மூட்டை கட்டி வையும் ஐயா.//


thamil nattil pothuvaay bramins jeyalailthaavai aatharippathu vaadikkai.nitahrsanm.kankudu
kanji periyavr kaithukku piraku ithil konjsam sunakkam.

anaal marupadiyum ani cho mursiyaal thirlvathaal
unkali ponrorairaum appadi yennun seyal thodarkirathu.

ithu kandikkathakkathu

Anonymous said...

//அதென்ன எங்கள் ஜெ? ஜெவும் ஒன்றும் சிறந்த நேர்மையாளர் இல்லையே. அது தான் சொத்துக் குவிப்பு வழக்குகள் ஊர் சிரிக்கிறதே. மு.க வை எதிர்ப்பவர்கள் இலைக்காரர்கள் தான் என்னும் உங்கள் அபத்தமான வாதத்தை மூட்டை கட்டி வையும் ஐயா.//

உங்கள் பின்னூட்டங்களை பார்த்து அருப்புகோட்டை பாஸ்கர்,நல்ல தந்தி,பிளிச்சிங் பெளடர்,இட்லி வடை போன்ற அம்மையாரின் விசுவாசியோடு தங்களும் ஒருவர் என எண்ணிவிட்டேன் .மதுசூதனாரே.

Anonymous said...

Sorry for my bad english. Thank you so much for your good post. Your post helped me in my college assignment, If you can provide me more details please email me.