Sunday, November 16, 2008

ஒரே குழப்பமைய்யா!

வி.புலிகளை ஆதரித்து பேசினால் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது என்னும் அடிப்படையில் சிலர் கைது செய்யப் பட்டனர். இன்னொரு புறம் நம் தமிழினத் தலைவர் என்னவென்றால் தமிழர்கள்மீது குண்டு வீசுவதும் வி.புலிகள் மீது குண்டு வீசுவதும் ஒன்றே என்கிறார். அப்படி வி. புலிகள் தாம் தமிழர்கள் எனில் அவர்களை ஆதரித்துப் பேசியாதாகக் கூறி சிலர் கைது செய்யப் பட்டது எதற்காக?

வி. புலிகள் இந்தியாவிலும், இன்ன பிற உலக நாடுகளிலும் தடை செய்யப் பட்ட ஒரு இயக்கம். அப்படி இருக்க அவர்களுக்கு பரிந்து பேசுவது சட்டப்படி குற்றம் என்று கூறித்தானே தமிழக அரசு அமீர், சீமான், வை.கோ ஆகியோரை கைது செய்தது. அப்படி இருக்கும்போது இலங்கை அரசின் போர் நிறுத்தம் கிடையாது என்னும் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் பேசிய தமிழக முதல்வர் மு.க “தமிழர்கள் மீது குண்டு வீசுவதும், வி. புலிகள் மீது குண்டு வீசுவதும் ஒன்றுதான்” என்று பதில் அளித்துள்ளார். அப்படியானால் மேற்கூறியவர்கள் எதற்காக கைது செய்யப் பட்டனர். காங்கிரஸை சிறிய அளவில் திருப்திபடுத்த மு.க அரசு ஆடிய நாடகமன்றி வேறென்னவாக இருக்க முடியும்?

உள்ளூரில் தமிழன் சோற்றுக்கு வழியின்றி தவிக்கிறானே என்று கேள்வி எழுப்பியபோது ஒரு அறிவு ஜீவிப் பதிவர் ”நம்மூரில குண்டடி பட்டு சாகுறாங்களா? அவங்கள காப்பாத்தி பட்டினியால சாகடிங்கப்பா.” என்று தன் அறிவார்ந்த கருத்தை என்னுடைய இலங்கை பிரச்சினை குறித்த ஒரு பதிவில் பின்னூட்டமாக இட்டிருந்தார். இவர்களைப் போன்றவர்களின் கணக்குபடி உள்ளூரில் உள்ளவர்கள் எக்கேடு வேண்டுமானாலும் கெட்டுப் போகட்டும் ஆனால் வெளியூர் கூட இல்லை, வெளிநாட்டில் அதுவும் இலங்கையில் உள்ள தமிழன் உயிர் தான் முக்கியம் என்னும் நினைப்புதான் பெரிதாகத் தெரிகிறது.

அட இதைக் கூட விட்டு விடுவோம், காவிரிப் பிரச்சினையில் தமிழரகள் கர்நாடகத்தில் உதை வாங்கி ஒரு வேளை சோற்றுக்கு வழியில்லாமல் உட்க்கார்ந்திருந்தார்களே, அப்போது எங்கே போனது மு.க வின் இனப் பற்று? இது ஒரு முறை தான் நடந்துள்ளதா என்றால் இல்லை, பல முறை நடந்துள்ளது. ஆனால் காவிரிப் பிரச்சினையை தீர்த்து விட்டதாய் கூறி சட்ட மன்றத்திலேயே மு.க வுக்கு பாராட்டு விழா வேறு நடந்தது. இந்தக் கூத்தை எல்லாம் எங்கு போய் சொல்வது? போர் நிறுத்தம் இல்லையேல் ராஜினாமா என்று முழங்கிவிட்டு, கடைசியில் அப்படியே திரைக்கதையை மாற்றி அமைத்தவுடன் எங்கே ராஜினாமா என்றனர் எதிர் கட்சிகள். உடனே மு.க “நாற்பது ஆண்டு காலமாய் நடக்கும் பிரச்சினை இது, இதை நான்கு நாட்க்களில் தீர்க்க முடியாது” என்று திருவாய் மலர்ந்தருளியுள்ளார். ஏன் சர்வ கட்சி கூட்டம் கூட்டும் போதும், ராஜினாமா என்று தீர்மானம் ஏற்றும் போதும் இவர் மூளைக்கு இது தெரியவில்லையா? ஏற்கென்னவே என்னுடைய பின்னூட்டம் ஒன்றில் கூறியது போல் மக்களுக்கு இவரின் ஆட்சியின் மீதுள்ள கோபத்தை திசை திருப்பும் பொருட்டு கிடைத்த புதியதோர் ஆயுதம் இலங்கை பிரச்சினை. இதைத் தவிர மு.க வுக்கு இலங்கைத் தமிழர்கள் மீது எந்த ஒரு பற்றும் இருப்பதாய் தெரியவில்லை. யாரை எதை தந்து திருப்திப் படுத்துவது என்று குழம்பிக் குழம்பியே முடிந்துவிடும் மு.க வின் ஆயுள். ஆட்சியை யாருக்குத் தருவது? அழகிரியா அல்லது ஸ்டாலினா? தயாநிதியை அருகே சேர்ப்பதா வேண்டாமா? மக்களுக்கு ஆட்சியில் அதிருப்தி உண்டா இல்லையா? இறுதியில் இவரின் குழப்பங்களின் கூட்டணியில் இணைந்துள்ள இன்னொரு குழப்பம் இவர் வி.புலிகளை ஆதரிக்கிறாரா இல்லை எதிர்கிறாரா? இப்படி எங்கு பார்த்தாலும் மு.க வுக்கு குழப்பங்கள் தான். ஒரே குழப்பமையா!

11 comments:

இளஞ்செழியன் said...

திரும்பவும் அரம்பிச்சிட்டிங்களா கலைஞரின் எதிர்ப்பு வாதத்தை.


விடுதலைப்புலிகள்- இந்தியப் பிரதமர் அண்ணல் ராஜீவ் படு கொலை-அதன் பின்னர் தான் கலைஞர் அவர்கள் தன்னுடைய நிலைப் பட்டை மற்றிக் கொண்டார்கள்.

கலைஞரது இன்னுயிருக்கே ஆபத்து ஏற்படுத்தி தனக்கு பிடிதத தலைமை மாற்றத்தை திமுகவில் செய்திட்ட முயற்சிகள் தோற்றுப் போனதை தாங்கள் அறியாததல்ல.

விடுதலைப்புலிகளை கட்டுப் படுத்துகிறேன் என்ற சந்தடி சாக்கில்
அப்பாவித் தமிழர் குண்டடி படுவது கண்டு கலைஞரின் சொல்லெண்ணா வேதனை உங்களைப் போன்றோருக்கு கேலியாய், கிண்டலாய் தெரிவது
இன்று நேற்று நடப்பது அல்லவே.
காலம் காலமாய் நடக்கும் ஒன்று என்பதை தமிழர் இனம் தெரிந்தே வைதுள்ளது.


உங்கள் சதி அம்பலமேறாது .

காங்கிரஸ்+திமுக+பாமா.க+தமிழர் நலம் பேணும் கட்சிகள்

வலுவான கூட்டனி தொடர்கிறது.

எத்தனை சோ க்கள், எததனை அத்வானிகள் எத்தனை ரமானுஜம்கள்,எத்தனை மதுசூதன்கள்
யாரோடு சேர்ந்தாலும்


மத்தியில் அன்னை சோனியா அவர்களின் ஆசிர்வாதம் பெற்ற காங்கிரஸ் கூட்டணி ஆட்சி

தமிழகத்தில் கலைஞரின் அன்பு மகன்,செயல் வீரர் ,நம்பிக்கை நட்சத்திரம், அடலேறு ,காலம் கண்டெடுத்த கற்பகத்தரு,வாழும் வரலாறு,ஆற்றல்மிகு இளைய தளபதியின் இனிய ஆட்சி.பூரண பெரும்பான்மையுடன்

குழப்பங்கள் உங்கள் கூடாரத்தில் தான்

சிக்கிமுக்கி said...

சந்தடி சாக்கில் சிந்து பாடும் உங்களுக்கே உரிய 'புத்தி'!

குறைந்த அளவு மாந்தநேயங் கூட இல்லை!

'ஆரியப்பார்ப்பனர் திருந்தினர் என்றே ஆருனக் குரைத்தனர்?
அவர்குணம் ஒன்றே!'

-பாவலரேற்றின் பொய்யா வரிகள் மீண்டும் மெயப்பிக்கப் பட்டுள்ளன.

Anonymous said...

ஏம்பா உக்காந்து யோசிச்சியாக்கும். ரொம்ப பெரிசா கண்டு பிடிச்சிட்டே...

Madhusudhanan Ramanujam said...

//-பாவலரேற்றின் பொய்யா வரிகள் மீண்டும் மெயப்பிக்கப் பட்டுள்ளன.//

இதெல்லாம் நிஜமாகவே இருக்கட்டும். என் கேள்விக்கு பதில் இல்லையே. அதென்ன உங்களுக்கு உள்ளூர் தமிழன் மீது இல்லாத அக்கரை இலங்கைத் தமிழர் மீது மட்டும். இளஞ்செழியன் போல் முகஸ்துதி பாடி எனக்கு காரியம் செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை. என் வாழ்வில் எந்த ஒரு அரசாங்கத்தின் தயவும் இல்லாதுதான் நான் இன்று இருக்கும் நிலையில் உள்ளேன். மனித நேயம் எங்களுக்கும் உண்டு. நானும் என் சக்திக்கு முடிந்தவரை நிதி அளித்தேன் இலங்கைத் தமிழருக்கு. அதனால் இந்த அடுக்கு மொழி வசனமும் பார்பனீய எதிர்ப்பு என்ற பெயரில் திசை திருப்புவதும் வேண்டாம். கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் ஐயாக்களே.

Anonymous said...

//என் வாழ்வில் எந்த ஒரு அரசாங்கத்தின் தயவும் இல்லாதுதான் நான் இன்று இருக்கும் நிலையில் உள்ளேன்.//

ithu eppadi vilakkavum
arasin uthaviyillaal athuvum amrikkaavil eppadi saar
sollunkaa yellorukkum
ungalin saathanaiyai
neenkal saathithithai

Madhusudhanan Ramanujam said...

//arasin uthaviyillaal athuvum amrikkaavil eppadi saar//

என்னங்க காமெடி பண்றீங்க? ஒரு அரசாங்கம் உதவி செய்யாவிடில் நான் வேறு நாடு சென்று வேலை பார்க்க முடியாதா?

நான் படித்தது என் சொந்தப் பணத்தில். வேறு சிலரைப் போல மாநியத்தில் அல்ல. அரசு மாநியம் பெறும் கல்லூரியிலும் படிக்கவில்லை. கணிதத்தில் ஒரு இளநிலை பட்டம் மட்டுமே பெற்றேன். அதற்கு மேல் நான் படித்த, படிக்கும் எல்லா இடங்களும் தனியார்மயமான ஒன்று.

இளஞ்செழியன் said...

//Madhusudhanan Ramanujam said...
//arasin uthaviyillaal athuvum amrikkaavil eppadi saar//

என்னங்க காமெடி பண்றீங்க? ஒரு அரசாங்கம் உதவி செய்யாவிடில் நான் வேறு நாடு சென்று வேலை பார்க்க முடியாதா?

நான் படித்தது என் சொந்தப் பணத்தில். வேறு சிலரைப் போல மாநியத்தில் அல்ல. அரசு மாநியம் பெறும் கல்லூரியிலும் படிக்கவில்லை. கணிதத்தில் ஒரு இளநிலை பட்டம் மட்டுமே பெற்றேன். அதற்கு மேல் நான் படித்த, படிக்கும் எல்லா இடங்களும் தனியார்மயமான ஒன்று.//


அரசு உதவியில்லாமல் படித்து பட்டமும் பெற்று ,சொந்தப் பணத்தில் மேல்நிலை கல்வியும் படித்து அமெரிக்க சென்று பொருளீட்டும் அளவுக்கு உங்கள் பரம்பரை வசதியாய் உள்ளதால் தான் .

ஒடுக்கப் பட்ட மக்கள் படும் இன்னல் தெரிவதில்லை போலும்.

இருக்க இடமில்லாமல்,வாழ வழி தெரியாமல்,அரை வயிற்றுக் கஞ்சியோடு காலம் தள்ளும் கோடிக் கணக்கான பிற்படுத்தப் பட்ட மக்களில் ஒரு சிலர் இன்று நல்ல வேலையில் இருக்கிரார்கள் என்றால் அது அரசு உதவி பெற்றுத்தான்.
அதுவும் கலைஞரின் பொற்கால ஆட்சியினால் தான் இதில் பெரும் பகுதி ஜாத்யமாயிற்று நண்பரே.

ஒடுக்கப் பட்ட மக்களின் நம்பிக்கை நடச்த்திரமாய் ,என் கடன் பணி செய்து கிடப்பதே என பிறர் நலமே தன் நலமென வாழும் தங்கத் தலைவரை

பாராட்டி மகிழுவதே
தமிழனாய் பிறந்த
ஒவ்வொருவருடைய கடமை

இதெல்லாம் உங்களுக்கு புரியாது.

கலைஞர் புகழ்பாடும் பதிவர்களின் பதிவுகளை தொடர்ந்து படியுங்கள்.

உண்மை தெரியவரும் போது தாங்களும்

கலைஞர் புகழ் பாடி
பெருமிதம் அடைவீர்.

கலைஞரின் தீவிர எதிர்ப்பாளர்கள் பலர்
இன்று அவரது அதிதீவிர அதரவாளராய்
மாறி உள்ள சரித்திரச் சான்றுகள்
பல உள்ளன.

Madhusudhanan Ramanujam said...

//அரசு உதவியில்லாமல் படித்து பட்டமும் பெற்று ,சொந்தப் பணத்தில் மேல்நிலை கல்வியும் படித்து அமெரிக்க சென்று பொருளீட்டும் அளவுக்கு உங்கள் பரம்பரை வசதியாய் உள்ளதால் தான் .//

மறுபடியும் தவறு. என் பெற்றோர் இருவருமே, பள்ளிக்கு நடந்து செல்ல செருப்புகூட வாங்க வசதியற்றவர்கள். ஒரு நாள் போட்ட சீருடைதனை துவைத்து காய வைத்து மறு நாள் அணிய வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்தவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை சுடு சோறு என்பது தான் அவர்களின் பால்ய காலத்தில் இருந்த நிலை. என் பெற்றோர் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு தான் என்னை வளர்த்தனர். நான் வேலைக்குச் செல்லும் முன் எங்கள் வீட்டார் அனைவரும் சேர்ந்து ஒரு உணவகத்தில் உணவருந்தியது என்றால் 5 முறைதான். திரைப்படம் - 8 முறை. சொந்தமாக ஒரு டிவி வாங்கியது நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது. வீட்டில் உள்ள தொலை பேசி இணைப்பு நான் வேலைக்குச் சென்றபின். இப்போது சொல்லுங்கள் எத்தனை வசதியானது எங்கள் பரம்பரை?

இந்திய / தமிழக அரசாங்கம் எங்களிடம் நன்றியுடன் நடந்து கொள்ள வேண்டும். பல லட்சங்களை வரியாய் தந்துள்ளோம். பல சமயங்களில் போருக்காகவும் இன்ன பிற தேவைகளுக்காகவும் நிதி திரட்டி தந்துள்ளேன். என் சொந்த பணத்தையும் தந்துள்ளேன். இன்று வெளிநாட்டில் நான் சம்பாதிக்கும் பணத்தினை இந்தியாவில் தான் முதலீடு செய்கிறேன்.

உங்கள் உதாரை வேறெங்காவது விடவும் அடுக்குமொழியாரே. உங்களுக்குத் தான் மு.க, ஜெ போன்ற தரம் கெட்ட அரசியல்வாதிகளை புகழ்ந்து வாழ வேண்டிய கட்டாயம்; எனக்கில்லை. இவ்வளவு பேசுகிறீறே உம்மிடம் ஒரு கேள்வி. மு.க திருக்குவளையில் இருந்தபோது கட்டிய வேட்டிக்கு மாற்று வேட்டி இல்லாத நிலையில் இருந்தவர். உணவகத்தில் உணவருந்திவிட்டு கையில் பணமில்லை, வேண்டுமானால் பார்த்துக்கொள் என்று வேட்டியை உதறிக்காட்டியவர் மு.க. இன்று அவரின் சொத்து மதிப்பு எத்தனை ஆயிரம் கோடி? எங்கிருந்து வந்தது இந்தப் பணம்?

நீங்கள் இவ்வளவு புகழ்ந்து தள்ளும் இந்த அரசியல்வாதிகள் துளி கூட ஊழல் அற்றவர்கள் என்று நீங்கள் தினமும் சாப்பிடும் சோற்றில் சத்தியம் செய்து சொல்லுங்கள் பார்க்கலாம். உங்களால் முடியாது. உலகத்துக்குத் தெரியும் உண்மை என்னவென்று. இனியும் தமிழ், தமிழினம் என்று கதை பேசி தமிழினத்தை ஏமாற்றாதீர்கள். உங்களால் வாழ வைக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. சாகடிக்காதீர்கள்.

இளஞ்செழியன் said...

//உங்கள் உதாரை வேறெங்காவது விடவும் அடுக்குமொழியாரே. உங்களுக்குத் தான் மு.க, ஜெ போன்ற தரம் கெட்ட அரசியல்வாதிகளை புகழ்ந்து வாழ வேண்டிய கட்டாயம்; எனக்கில்லை. இவ்வளவு பேசுகிறீறே உம்மிடம் ஒரு கேள்வி. மு.க திருக்குவளையில் இருந்தபோது கட்டிய வேட்டிக்கு மாற்று வேட்டி இல்லாத நிலையில் இருந்தவர். உணவகத்தில் உணவருந்திவிட்டு கையில் பணமில்லை, வேண்டுமானால் பார்த்துக்கொள் என்று வேட்டியை உதறிக்காட்டியவர் மு.க. இன்று அவரின் சொத்து மதிப்பு எத்தனை ஆயிரம் கோடி? எங்கிருந்து வந்தது இந்தப் பணம்? //


கலைஞரின் ஆரம்ப வாழ்க்கை தாங்கள் சொலவ்து போல் மிக ஏழ்மை நிலை தான்.

கலைத்துறையில் ஈட்டிய பொருளை தந்து சாமர்த்தியத்தால் முதலீடு செய்தும் அதன் பின்னர் அவரது வாரீசுகளின் முயற் சியாலும் இன்றய உயர் நிலையை அடைந்துள்ளார்.

வருமான வரி ஒழுங்காய் கட்டபட்டுவருவதற்கு இதற்குச் சான்று.

தேர்தல் வேட்பாளாராய் போட்டியிடும் போது இதனுடைய விபரங்கள் தணிக்கை செய்து அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதே!


//நீங்கள் இவ்வளவு புகழ்ந்து தள்ளும் இந்த அரசியல்வாதிகள் துளி கூட ஊழல் அற்றவர்கள் என்று நீங்கள் தினமும் சாப்பிடும் சோற்றில் சத்தியம் செய்து சொல்லுங்கள் பார்க்கலாம். உங்களால் முடியாது. உலகத்துக்குத் தெரியும் உண்மை என்னவென்று. இனியும் தமிழ், தமிழினம் என்று கதை பேசி தமிழினத்தை ஏமாற்றாதீர்கள். உங்களால் வாழ வைக்க முடியவில்லை என்றால் பரவாயில்லை. சாகடிக்காதீர்கள்.//


அரசியல் என்றாலே எல்லா நாட்டிலும்
( ஏன் உங்கள் அமெரிக்கவிலும்) பணம் தண்ணிராய் செலவழிக்கப் படுகிறதே.

ஜன நாயகத்தில் பண நாயகம் தவிர்க்க முடியாது எனச் சொல்லப் படுகிறது.

எதிரிகளை சமாளித்து த்மிழ்னுக்கு நல்லது செய்யும் போது ஒரு சில தவறுகள் .இதையும் தவிர்ப்பதற்கு தலைவர் முயற்சி செய்து வருவது கண்கூடு.

இளஞ்செழியன் said...

//மறுபடியும் தவறு. என் பெற்றோர் இருவருமே, பள்ளிக்கு நடந்து செல்ல செருப்புகூட வாங்க வசதியற்றவர்கள். ஒரு நாள் போட்ட சீருடைதனை துவைத்து காய வைத்து மறு நாள் அணிய வேண்டிய கட்டாயத்தில் வாழ்ந்தவர்கள். ஒரு நாளைக்கு ஒரு வேளை சுடு சோறு என்பது தான் அவர்களின் பால்ய காலத்தில் இருந்த நிலை. என் பெற்றோர் இருவரும் மிகவும் கஷ்டப்பட்டு தான் என்னை வளர்த்தனர். நான் வேலைக்குச் செல்லும் முன் எங்கள் வீட்டார் அனைவரும் சேர்ந்து ஒரு உணவகத்தில் உணவருந்தியது என்றால் 5 முறைதான். திரைப்படம் - 8 முறை. சொந்தமாக ஒரு டிவி வாங்கியது நான் ஒன்பதாம் வகுப்பு படித்தபோது. வீட்டில் உள்ள தொலை பேசி இணைப்பு நான் வேலைக்குச் சென்றபின். இப்போது சொல்லுங்கள் எத்தனை வசதியானது எங்கள் பரம்பரை//


தவறாய்
எண்ணியதற்கு/எழுதியதற்கு

( தங்களது குடுப்ப பின்னணி மற்றும் பொருளாதார நிலை பற்றி தெரியாமல்)

வருந்துகிறேன் நண்பரே.


good bye

Anonymous said...

இதுவா புதுயும்
நாறுது
கூவ யுகமுண்ணு வையுங்க