Thursday, November 27, 2008

புதிய முகம்

மொத்த இந்தியாவையும் காஷ்மீராக மாற்றும் உத்தேசத்துடன் இன்றைய தேதி வரை பல்வேறு வகையான குண்டு வெடிப்புகள் நிகழ்ந்து வந்தது என்னவோ தெரிந்ததே. நேற்று முதல் இத்தகைய தீவிரவாத்தத்தின் புதியதோர் அத்தியாயம் துவங்கியுள்ளது. வெடிகுண்டுகள் வெடித்தால் வெடித்த சிமிடத்தில் எல்லாம் முடிந்துவிடும், மக்களுக்கும் இத்தகைய நிகழ்வுகள் மிகவும் பழகிவிட்ட நிலையில் தங்களின் அன்றாட வாழ்க்கைக்கு வேகமாகத் திரும்பி விடுகின்றனர். பார்த்தார்கள் தீவிரவாதிகள்; அவர்களின் தாக்குதல்களின் தாக்கத்தை அதிகப்படுத்துவதே நல்லது என்று முடிவு செய்து வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததோடு மட்டுமல்லாமல் பலர் அன்றாடம் பயன்படுத்தும் ஹோட்டல், திரையரங்கு போன்ற இடங்களுக்குள் புகுந்து கொண்டு பலலரை பிணைக்கைதிகளாக்கினர். நேற்று முதல் இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமான மும்பையில் நடந்து வரும் நிகழ்வுகள் இதற்கு ஓர் சான்று. 1993ல் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளின் போது சற்றே தடுமாறிய பம்பாய் 2008ல் நடைபெறும் இந்த நிகழ்வுகளால் நொறுங்கிய நிலையில் அமர்ந்துவிட்டது என்று சொல்லும் படியாகவே உள்ளது. அமைதியே பிரதானமான கொள்கை என்று பல்லாயிரம் ஆண்டுகளாக இருந்த ஒரு நாட்டில் இன்று பொது மக்கள் எவரும் வீடுகளை விட்டு வெளியேறவே யோசிக்கும் நிலை வந்து விட்டது. வெளியே செல்லும் ஒருவர் தான் ஒரு துண்டாய் மறுபடி வீடு வந்து சேருவோமா என்னும் சந்தேகத்துடன் தான் வீட்டிலிருந்து கிளம்ப வேண்டியுள்ளது.

என்ன ஆயிற்று இந்த தேசத்திற்கு என்று என்னைப் போன்ற மக்களின் இடைவிடாத கேள்விக்கு நம் அரசாங்கம் எத்தகைய ஒரு பதிலையும் சரிவரத் தருவதில்லை என்பது பெருமளவில் தலை குனிவைத் தரும் ஒரு விஷயம். என்னுடன் பணி புரியும் ஒரு அமெரிக்க நண்பர் என்னுடைய இன்னொரு இந்திய நண்பரை ”உங்கள் நாட்டில் அரசாங்கங்கள் இத்தகைய தீவிரவாதத்திற்கு எதிராய் எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கின்றது? உங்கள் நாட்டு மக்கள் இத்தகைய சூழ்நிலைகளில் எப்படி செயல்படுகின்றனர்?” என்று வினவினார். அதற்கு அந்த இந்திய நண்பர் “என்கள் மக்கள் பலருக்கும் இத்தகைய நிகழ்ச்சிகள் பழகிப் போய்விட்டன. குண்டு வெடித்த சில நிமிடங்கள் கழித்து எல்லோரும் அவர் தம் வேலையைப் பார்க்க மறுபடியும் கிளம்பி விடுவர். இறந்தவர்கள் குடும்பங்களுக்கு அரசு ஏதேனும் ஒரு தொகையை இழப்பீடாக வழங்கும். கொஞ்ச காலத்திற்குப் பின்னர் இவை அனைத்தும் மறந்தும் போகும் என்றார்” மேலோட்டமாக பார்ப்பின் இது ஒரு பொருப்பற்ற பதில் எனினும், இது தான் இன்று நடைமுறையில் நடந்து வருவது என்பது எவ்வளவு வெட்க்கக் கேடான ஒரு விஷயம்?

இந்த மும்பை சமாச்சாரத்தை எடுத்துக் கொண்டால்; தாக்குதல் குறித்த தகவல் தெரிந்தபின் அரசின் செயல்பாடுகள் திருப்திகரமாகவே உள்ளது. ஆனால் இத்தகைய செயல்களை தவிர்க்கும் வண்னம் ஏதேனும் செய்யப் படுகிறதா என்று யோசித்தோமேயானால், இல்லை... எதுவுமே இல்லை என்னும் பதில் தான் நம் மனத்தினுள் வேதனையுடன் ஒலிக்கிறது. கடந்த அறுபது ஆண்டுகளாக இந்தியாவின் பல பகுதிகளிலும் தினமும் ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடைபெற்ற வண்ணம் தான் உள்ளது. போட்டி போட்டுக்கொன்டு ஓட்டு வங்கி அரசியல் செய்பவர்களுக்கு இலவச வேட்டி, சேலை பல்போடி, வீட்டு மனை, டிவி என்று பல்வேறு பொருட்களை பட்டுவாடா செய்யவும், அப்படிச் செய்ததின் பலனாய் பெற்ற ஆட்சியில் பல்லாயிரம் கோடிகளை சுவிஸ் வங்கிகளில் சேர்க்கவுமே நேரம் போதவில்லை. இவர்கள் எவ்வாறு மக்களின் பாதுகாப்பு பற்றி யோசிப்பார்கள்? இலங்கைத் தமிழரென்றால் ஓடிப்போய் காப்பாற்றலாம், வீர வசனம் பேசலாம்! மும்பை வட மாநிலம் அன்றோ? எப்படித் தவிக்கலாம். இலங்கைத் தமிழனைக் காப்பாற்ற வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால், முதலில் இந்தியனை அல்லவா காப்பாற்ற வேண்டும்? ஆனால் அப்படி எத்தகைய உணர்வும் எவரிடமும் இருப்பதாகத் தெரியவில்லை. இத்தகைய போக்கின் எதிரொலி தான் புலிகளின் தலைவருக்கு புகழ் மாலை சூட்டும் வைபவங்கள்.

இந்நிலை நீடித்தால் நம் நாட்டிலும் இஸ்லாமியர்களின் காவலன் என்று கூறி பின் லாடனுக்கு பாராளுமன்றத்தில் சிலை வைத்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை! எல்லா முறையும் நடப்பது போல இந்த முறையும் குண்டு துளைக்காத கூண்டிற்குள் நின்று கொடியேற்றி விட்டு, நாங்கள் தீவிரவாதத்தினை பொறுக்க மாட்டோம், இரும்புக் கரம் கொண்டு
அடக்குவோம் இத்யாதி இத்யாதி என்று எல்லாவற்றையும் முழங்கிவிட்டு குண்டு துளைக்காத காரில் புடை சூழ வீட்டுக்குள் சென்று பதுங்கிவிடுவார்கள். தப்பித் தவறி சட்டப்படி ஒரு நபர் தண்டிக்கப் பட்டாலும், அந்த தண்டனை ஓட்டு லாபம் கருதி ஆளும் கட்சியாலேயே தடுத்து நிறுத்தப்படும். கேட்டால் அதற்கு மைனாரிட்டி, மதச்சார்பு, மனித உரிமை இத்யாதி இத்யாதி என்று பல்வேறு வண்ண முலாம்களைப் பூசுகின்றனர்.

சக பதிவர் ஒருவர்,.
“ஏன் கஷ்டப்பட்டு ஒவ்வொரு முறையும் ஒரு அறிக்கை அல்லது உறையை தயார் செய்ய வேண்டும்? அதற்கு பதிலாய், வெடித்த குண்டுகளின் எண்ணிக்கை, இறந்தவர் எண்ணிக்கை,
இழப்பீட்டு தொகை ஆகியவற்றிற்கு இடம்விட்டு ஒரு பொதுவான அறிக்கையை தயார் செய்து வைத்துக் கொண்டால் வசதியாய் இருக்கும்” என்று கூறி இருந்தார்.

வெடித்த குண்டுகள் வெடித்துவிட்டன. இறந்தவர்கள் என்னவோ திரும்ப வரப்போவதில்லை. ஆனால் இனியும் இதைப் போல் வெடிக்காது இருக்க என்ன செய்யப் போகிறது இந்திய அரசு? இது தான் இன்று ஒவ்வொரு சாதாரணக் குடிமகனின் மனதிலும் உதிக்கும் கேள்வி. கேளிவிகள் பல்கிப் பெருகிக் கொண்டிருக்க, வரும் பாராளுமன்றத் தேர்தல் அறிக்கைகள் வெளியானதும் மறுபடியும் துவங்கிவிடும் இலவசங்களின் அணிவகுப்பு. இவை தரும் மயக்கத்தில் வாக்காளர்களும் மயங்கி நிற்பார்கள்.

இலவசங்கள், மதச்சார்பு, சாதீயம், இடஒதுக்கீடு எனப் பலப் பல விதமான அரிதாரங்களைப் பூசி அரசியலை விற்றுக் ஓட்டாக்கி அமைக்கும் அடுத்த ஆட்சியிலும் தொடரும் இந்தத் தீவிரவாதத்தின் புதிய முகம்.

2 comments:

Indy said...

Matravargalin Urimaigal parikkapadum pothu adhai naam "Patriotistic view" il paarkirom.

Ippo anubavikkirom.

We should condemn our political leaders for not having appropriate policies.

Madhusudhanan Ramanujam said...

//Matravargalin Urimaigal parikkapadum pothu adhai naam "Patriotistic view" il paarkirom.

Ippo anubavikkirom. //

உங்கள் வாதம் எனக்குப் புரியவில்லை. யாருக்கு எந்த உரிமையை மறுத்தோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்?