Sunday, November 09, 2008

அருண்மொழிக்கு பதில் மொழி

அருண்மொழி எனும் ஒரு பதிவர் என்னை சில கேள்விகள் கேட்டு ஒரு பதிவெழுதி இருக்கிறார். அவர் அதை செப்டம்பர் மாதமே எழுதியிருப்பினும் இப்போது தான் அதை தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. இருப்பினும் கேள்வி கேட்டவருக்கு பதில்கள் இதொ இந்தத் தனிப் பதிவில். நீல நிறத்தில் உள்ளவை அவரின் பதிவில் அவர் கூறியுள்ளவை. சிவப்பு நிறத்தில் உள்ளவை நான் அளிக்கும் பதில்.

1. கோபால் கோட்செ (காந்தியஒ கொன்றவன்) விடுதலை செய்யப்பட்ட போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்

டோண்டு ராகவன் உங்கள் கேள்விக்கு விளக்கமாய் பதிலளித்துள்ளார். உங்கள் வசதிக்காக உங்கள் பதிவில் உள்ள அந்த பதில் இதோ...

இந்த உதார் எல்லாம் வேறு யாரிடமாவது வைத்து கொள்ளவும். மொட்டையாக கோட்சே என கூறியது நீங்கள். அதற்காகத்தான் எல்லோருமே உங்களை பிரித்து மேய்ந்தனர். நான் போனால் போகிறது என கோபால் கோட்சேயுடன் குழப்பிக் கொண்டீர்கள் என உங்கள் மானத்தை காப்பாற்றினேன்.மற்றப்படி மகாத்மா காந்தியை சுட்டு கொன்றது நாதுராம் கோட்ஸேதான். கோபால் கோட்ஸே அல்ல. கோபாலுக்கு ஆயுள் தண்டனை கொடுக்கப்பட்டு 17 ஆண்டுகளுக்கு பிறகு சட்டபூர்வமாக முறையாகத்தான் அவர் விடுதலை செய்யப்பட்டார். பிறகு ஒரு மாதம் கழித்து மீண்டும் கைது செயப்பட்டு கடைசியாக 1965-ல் விடுதலை செய்யப்பட்டார்.ஆக நீங்கள் சொல்ல நினைப்பது எதுவும் அவர் கேசுக்கு பொருந்தாது.

2. ஜெயலலிதா பிறந்த நாள் விடுதலையின் போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள்

நியாயமான கேள்விதான். ஆனா நான் அப்போது பதிவுகள் எழுதவில்லையே. அன்று செய்ததற்காக இன்று ஒரு பதிவெழுதுவது எந்த அளவிற்கு நல்லது? இன்றைய பேப்பர் தானே விற்க்கும். நேற்றைய பேப்பரை எடைக்குதானே போடமுடியும். குழி பிணத்தை தோண்டி எடுத்து இழவு கொண்டாடு என்கிறீர்கள். அப்படித்தானே?

3. 1405 பேர் தரப்பில் கோர்ட்டில் கூறப்பட்ட நியாயத்தை ஆராய்ந்து தான் இவர்களின் பரோலை எதிர்த்தீர்களா என்று உங்கள் மனச்சாட்சியை கேட்டு பாருங்கள்

1405 பேர் விடுதலை செய்யப்பட்டது மட்டும் தான் செய்தியாய் வெளியானது. அவர்கள் அனைவரும் பரோலில் விடுவிக்கப் பட்டனர் என்பது இச்சம்பவம் சர்ச்சையை கிளப்பிய பின் தான் வெளியானது. இது குறித்தும் நான் ஒரு பின்னூட்டம் போட்டிருந்தேன். எங்கே என்று சரியாய் தெரியவில்லை. தேடிப் பார்த்து, கிடைத்தால் சுட்டி தருகிறேன்.

2. உங்களுக்கே வெட்கமா இல்லையா.
3. இப்படி ஒரு கேவல சப்பைக்கட்டு தேவையா.
4. ஏன் இந்த இரட்டை வேடம்

இதையெல்லாம் ஒரு கேள்வியாகக் கருதுவதே கொஞ்சம் கஷ்டமாய் உள்ளது. என்ன இரட்டை வேடம் போட்டுவிட்டோம் நாங்கள்? கோபால் கோட்ஸே விடுதலை பெற்றது தண்டனை காலத்திற்குப் பின்னர் தான். நீங்கள் சொல்லும் பிரேமானந்தா ஒரு ஆயுள் தண்டனை மட்டுமே பெற்றிருந்தாலோ, அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஆயுள் தண்டனை பெற்று, அதை நீதிமன்றம் ஒரே சமயத்தில் தண்டனை அனுபவித்ததாய் கணக்கில் கொள்ளலாம் என்று சொல்லியிருந்தால் சட்டப்படி பிரேமாநந்தா விடுதலை செய்யப்பட வேண்டியதுதான். அவர் விடுதலையில் உடன்பாடு இல்லை என்றால் மேற்கொண்டு அப்பீல் செய்யலாம். அதில் நியாயம் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றம் அவரை மீண்டும் சிறையில் அடைக்கட்டும். இதில் என் மன சாட்சி எங்கிருந்து வருகிறது என்று எனக்கு சற்றும் புரியவில்லை.

5. கருணாநிதியை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இது போன்ற கேவல பிழைப்புகளை எத்தனை நாள் தான் செய்வீர்கள்

என் நோக்கம் தவறை கண்டிப்பது. அது கருணாநிதியா இல்லை வேறொருவரா என்பதில் எனக்கு அக்கறை இல்லை. என் பதிவுகளை தெளிவாய் படித்திருந்தால் நான் மற்றவர்களையும் இதே போல் கண்டிக்கிறேன் என்பது தெரியும். தவறுகளை கடிந்து கொள்வதும் விமர்சிப்பதும் ஒரு நல்ல குடிமகனின் கடமை என நான் கருதுகிறேன். அதை தொடர்ந்து செய்வேன். அதை எதிர்ப்பது நாகரீகமான செயல் என நீங்கள் கருதினால் உங்கள் நாகரீகம் எத்தகையது என்பதை காலம் உங்களுக்கு உணர்த்தும்.

6. ஜெயலலிதா பிறந்த நாளுக்கு மூன்று முறை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனரே. அது குறித்து ஏன் இந்த சு.சாமியோ, டோண்டுவோ, அவர்களது அல்லக்கைகளோ ஒன்றும் சொல்லவில்லை.

நல்ல கேள்வி. ஆனால் ஜெயலலிதா குறித்த இந்தக் கேள்விக்கு ஏற்கென்னவே இரண்டாவது கேள்வியில் பதில் கூறியாகிவிட்டது. சு.சாமியோ டோண்டுவோ ஏன் ஒன்றும் சொல்லவில்லை என்பது குறித்து நான் எப்படி பதில் சொல்ல முடியும்? அவர்களிடம் கேள்வி கேட்க்க வேண்டியதுதானே?

7. கோபால் கோட்சே விடுதலை செய்யப்பட்டார் என்று இப்பொழுதாவது உண்மையை ஏற்றுக்கொள்கிறீர்களா

கோபால் கோட்சே விடுதலை செய்யப்பட்டார் என்பது நாடறிந்த செய்தி. இதில் நான் மறுக்க என்ன உள்ளது? மேலும் அவர் தண்டனைக் காலம் முடிந்தபின் விடுதலை செய்யப்பட்டார். அது நீதி மன்றத்தின் நடவடிக்கை. இதில் நான் ஏற்கவோ மறுக்கவோ எதுவுமில்லை. உங்களுக்கு அதில் உடன்பாடு இல்லை என்றால் முன்னர் ஒரு பதிலில் சொன்னதுபோல் நீங்கள் போய் அப்பீல் செய்யலாமே?

8. ஜெயலலிதா பிறந்தநாளுக்கு விடுதலை கைதிகள் செய்யப்பட்டனர் என்ற உண்மையை ஏற்றுக்கொள்கிறீர்களா

இது நடக்கவில்லை என்றோ, இதை பொய் என்றோ நான் எங்காவது சொல்லியுள்ளேனா?

9. தங்களின் அறியாமையை மறைக்க அடுத்தவர் தவறாக எழுதினார் என்று கொக்கரிக்கும் கேவல பிழைப்பு தேவையா.

எதை எனது அறியாமை என்று சொல்கிறீர்கள்? கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்...

இப்போது நீங்கள் உங்கள் புதிய பதிவில் கேட்ட கேள்விக்கு பதில்

இலங்கையில் போர் நிறுத்தத்தை நீங்கள் ஆதரிக்கிறீர்களா, இல்லையா?

நிச்சயம் ஆதரிக்கிறேன். இலங்கையில் போர் நிறுத்தம் கூடாது என்று நான் எங்கும் சொன்னதாய் நினைவில்லை. அப்படி எதுவும் இருந்தால் சுட்டிக் காட்டவும். போர் நிறுத்ததை வலியுறுத்திகிறோம் என்று கூறிக்கொண்டு சிலர் செய்யும் கேலிக் கூத்தை தானே கண்டிக்கிறேன். அப்படி இருக்க உங்கள் கேள்வியே எதற்கு என்று எனக்குப் புரியவில்லை.

-------------------------------------------------------------------------------------

இனி கேள்வி கேட்க்கிறேன் என்று கூறிக்கொண்டு ஏதாவது அசட்டுத் தனமாய் இல்லாமல் கேள்விபோல் ஏதாவது கேளுங்களேன். பதில் சொல்லும் எனக்கும், படிப்பவர்களுக்கும் கொஞ்சம் சுவாரசியமாய் இருக்கும்.

14 comments:

Anonymous said...

@அருண்மொழி aka செந்தழல்ரவி@
அபத்தமான கேள்விகள் நல்ல சூடான பதில்

வாக்காளன் said...
This comment has been removed by the author.
Madhusudhanan Ramanujam said...

//@அருண்மொழி aka செந்தழல்ரவி@
அபத்தமான கேள்விகள் நல்ல சூடான பதில்//

என்ன சொல்றீங்க நீங்க? அருண்மொழியும் செந்தழல் ரவியும் ஒண்ணா? உங்களுக்கு யாருங்க இப்படியெல்லாம் சொன்னது? அவர் இப்படியெல்லாம் கேள்வி கேட்க்க மாட்டாருங்க.

Madhusudhanan Ramanujam said...

//This post has been removed by the author//

என்ன வாக்காளரே? போட்ட பின்னூட்டத்தை சைக்கிள் கேப்பில நீங்களே அழிச்சிட்டீங்க? உங்க கருத்துல உங்களுக்கே உடன்பாடில்லையா?

வாக்காளன் said...

பொறுமை வேணும்ங்க.. இப்படி முன் முடிவு எடுக்கறது தான் உங்க பிரச்சனையே.-- .

அட்றா அட்றா. பாருங்கப்பா இவரு தான் நடுநிலைவாதியாம்.. துக்ளக் மேட்டரு தான் எப்பவும் போட்டு சிலாகித்து பேசுவாறு. ஜெயா பத்தி கேட்டா.. அப்போ பதிவெழுதல , புது பேப்பர் தான் விக்கும், பழசெல்லாம் எடைக்குத்தான் போகும்னு டகால்டி பேசுவாரு...

அப்போ உங்க பதிவின் பெயரை "ஆட்சியிலிருப்போர் தவறுகள் மட்டும் சுட்டிக்காட்ட மட்டும்" நு மாத்தி வெச்சுகோங்க.. மதுசூதன் சார்..

அப்புறம் உங்க பரமசிவன் இருக்கானே, அவன மத்த கட்சி , பொது விசயமெல்லாம் பேச வேண்டாம்னு சொல்லுங்க. ஆட்சில இருக்க தி மு க , காங் பத்தி மட்டும் பாயின்ட் எடுக்க சொல்லுங்க..

அப்போ பதிவெழுதலயாம். பழைய பேப்பராம்.. காமடிக்கு அளவு வேணும்பா..

Madhusudhanan Ramanujam said...

//அப்போ பதிவெழுதலயாம். பழைய பேப்பராம்.. //

என்னங்க பண்றது? பதிவெழுதறவங்க எல்லாரும் உலகம் தோன்றிய தினத்திலிருந்துதான் எழுத ஆரம்பிக்கணும்னா அது நடக்குமா? என் நடுநிலை மேல எனக்கு சந்தேகம் இல்லை. ஆனால் உங்களுக்குத் தான் நடுநிலை என்ப்தது கிடையாது. என்ன செய்தாவது உங்களுக்கு கருணாநிதிக்கு குடை பிடிக்க வேண்டும். அதில் உங்களுக்கு என்ன ஆதாயமோ எனக்குத் தெரியாது. ஆனால் யாருக்கும் குடை பிடிக்க வேண்டிய தேவை எனக்கில்லை. அதனால் வரும் எத்தகைய ஆதாயமும் எனக்குத் தேவை இல்லை.

வாக்காளன் said...

கேட்கப்படும் கேள்விகளை விடுத்து, ஏதேனும் ஒரு வரியை எடுத்து ஏதோ ஒன்று எழுதி திசை திருப்பும் வேலையை மட்டும் மிக சரியாக செய்கின்றீர்களே, எங்கே கற்றீர் அந்த வித்தையை.. !

Madhusudhanan Ramanujam said...

//கேட்கப்படும் கேள்விகளை விடுத்து, ஏதேனும் ஒரு வரியை எடுத்து ஏதோ ஒன்று எழுதி திசை திருப்பும் வேலையை மட்டும் மிக சரியாக செய்கின்றீர்களே, எங்கே கற்றீர் அந்த வித்தையை.. !//

உங்க கேள்விதான் என்ன ? கேள்வியே கேட்க்காமல் ஏதோ உலக மகா கேள்வி கேட்டாற்போல் சிலாகித்துக் கொள்வதில் என்ன பயன்? நீங்கள் இதை எங்கு படித்தீர்கள் என்று எனக்குத் தெரியும்! எல்லாம் உங்க தலைவர்கிட்ட தான. அவர் தான் வாய்ச்சொல்லில் வீரராச்சே.

Anonymous said...

//Madhusudhanan Ramanujam said...
//This post has been removed by the author//

என்ன வாக்காளரே? போட்ட பின்னூட்டத்தை சைக்கிள் கேப்பில நீங்களே அழிச்சிட்டீங்க? உங்க கருத்துல உங்களுக்கே உடன்பாடில்லையா?//

athu vakkalar enpathu eppadi therinthathu sir

Vanangamudyy said...

மதுசூதனன் ராமானுஜம் சார் ஏன் இது போன்ற திராவிட அல்லக்கைகளுக்கு பதிலெல்லாம் அளித்து உங்களை தாழ்த்திக்கொள்ளுகிறீர்கள். இவனுகளுக்கு எவ்வளவு உரைத்தாலும் மண்டையில் ஏறாது.

Anonymous said...

//Vanangamudyy said...
மதுசூதனன் ராமானுஜம் சார் ஏன் இது போன்ற திராவிட அல்லக்கைகளுக்கு பதிலெல்லாம் அளித்து உங்களை தாழ்த்திக்கொள்ளுகிறீர்கள். இவனுகளுக்கு எவ்வளவு உரைத்தாலும் மண்டையில் ஏறாது.//

பதிவர்களுக்குள் போட்டி இருக்கலாம் ஆனால் தமிழர் நாகரிகம் காக்கப்படல் வேண்டும் வணங்காமுடி அண்ணா!

Madhusudhanan Ramanujam said...

//athu vakkalar enpathu eppadi therinthathu sir//

அந்த பின்னூட்டத்தை அவர் நீக்குவதற்கு முன்னர் நான் அதை படித்துவிட்டேன். மேலும், அதை அவருடைய அடுத்த பின்னூட்டத்தில் அவரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

//பதிவர்களுக்குள் போட்டி இருக்கலாம் ஆனால் தமிழர் நாகரிகம் காக்கப்படல் வேண்டும் வணங்காமுடி அண்ணா!//

என்னைக் கேட்டால் இன்னும் சில பேருடன் ஒப்பிடுகையில் இவர் பரவாயில்லை என்றே சொல்வேன். இருப்பினும் இவரும் கொஞ்சம் நல்ல முறையில் தன் வருத்தம் / அதிருப்தியை தெரிவித்திருக்கலாம்.

அருண்மொழி said...

நன்றி

உங்கள் பதில்களில் பல குழப்பங்கள் இருப்பதால் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள மேலும் சில கேள்விகள்

http://arunmozhi985.blogspot.com/2008/11/blog-post_11.html

Madhusudhanan Ramanujam said...

//உங்கள் பதில்களில் பல குழப்பங்கள் இருப்பதால் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள மேலும் சில கேள்விகள்//

இப்படி அரைக் கேள்வி முக்கால் கேள்விக்கெல்லாம் ஒரு பதிவு போடாம இதை இங்கேயே கேட்டிருக்கக் கூடாதா. சரி பரவாயில்லை. உங்கள் கேள்விகளுக்கு மறுபடியும் பதிலளித்துள்ளேன். இந்தப் பதிவை படிப்பவர்களின் வசதிக்காக அதை இங்கும் வெளியிடுகிறேன்.

//ஆயுள் தண்டனை என்பது 17 ஆண்டுகளா//

சட்டப்படி ஆயுள் தண்டனை என்பது 17 ஆண்டுகள் இல்லை.

//17 ஆண்டுகளில் ஒரு ஆயுள் தண்டனை கைதி விடுதலை செய்யப்படுவது தண்டனை குறைப்பு தானே
அவர் அரசால் விடுவிக்கப்பட்டாரா அல்லது நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டாரா//

இது நமக்கு பொருந்தாது. ஏனெனில் நான் சேகரித்துள்ள செய்திப்படி கோபால் கோட்ஸேவுக்கு 18 ஆண்டு காலம் சிறை தண்டனை என்றே தீர்ப்பானது. அப்படிப் பார்த்தால் அவர் தனக்கு விதிக்கப் பட்ட தண்டனைக் காலம் முழுவதையும் அனுபவித்தார் என்பதே நிஜம். உடனே நீங்கள் அவர் ஓராண்டு முன்னர் விடுவிக்கப் பட்டாரே என்று கேட்க்கலாம். ஆனால் அவர் தண்டனைக் காலம் முடிந்த பின்னரே விடுதலை செய்யப்பட்டார். அது மட்டுமின்றி அவர் மீண்டும் கைது செய்யப் பட்டு சுமார் ஓராண்டு கழித்து விடுதலை செய்யப் பட்டார்.

//மழுப்பல் மற்றும் தவறான பதில்களை அளித்த மதுசூதனன் ராமானுஜம் அவர்களுக்கு மீண்டும் சில கேள்விகள்//

எதை மழுப்பல் என்கிறீர்கள்? சற்றே விளக்கமாய் சொல்லுங்களேன்...

மு.க, ஜெ இவர்கள் இருவருமே பெரிய அளவில் தவறான அரசியல்வாதிகள். இந்த கைதிகள் விவகாரத்தில் இவர்கள் இருவருமே முறையாக நடந்து கொள்ளவில்லை. இரண்டுமே ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் தானே...

உங்கள் கோபம் தான் என்ன? நான் மு.க வை விமர்சிப்பதா? அல்லது ஜெ வை அதிகம் விமர்சிக்கவில்லை என்பதா?

நீங்களும் கேள்வி கேட்க்கிறேன் பேர்வழி என்று சொல்லிக்கொண்டு பக்கத்து வீட்டு குழாயில் போன ஆட்சியின் போது தண்ணீர் வரவில்லை இது ஜெவின் தவறு தானே என்றெல்லாம் கேள்வி கேட்ப்பீர்கள் போலிருக்கிறதே!