Friday, December 12, 2008

பாயிண்ட் பரமசிவம் (6)

பாக் வெளியுறவுத் துரை செய்திக் குறிப்பு: இந்தியாவின் நன்மை வேண்டியே நாங்கள் கைது செய்யப் பட்டுள்ள தீவிரவாதியிடம் விசாரணை நடத்த தூதரகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி தருமாறு கேட்கிறோம். ஒரு வேளை அவன் பாக்கிஸ்தானைச் சேர்ந்தவன் என்றால் அது நிச்சயம் விசாரணையில் தெரியவரும்.

அப்படின்னா இப்ப வரைக்கும் அஜ்மல் கசப் பாக்கிஸ்தானை சேர்ந்தவனே இல்லை. அந்த பேர் உள்ளவங்களே எங்க நாட்ல கிடையாது அப்படின்னெல்லாம் பில்டப் குடுத்தீங்க! அதெல்லாம் இப்போ என்னாச்சு? கடைசியா எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைங்கிற கைதையா போச்சே.

பாக் வெளியுறவுத் துரை செய்திக் குறிப்பு: ஐக்கிய நாடுகள் சபை ஜமாத் உத் தவா இயக்கத்தைச் சேர்ந்தவர்களை கைது செய்துள்ளோம். அது மட்டுமின்றி அவர்களின் அலுவலகங்களையும் மூடியுள்ளோம். தீவிரவாதிகள் எங்கள் நாட்டில் எவரும் இல்லை என்று மறுப்பது மட்டுமே எங்கள் கொள்கை எனில் நாங்கள் இவை எல்லாவற்றையும் ஏன் செய்ய வேண்டும்?

இந்த தில்லாலங்கடி தான இங்க வேண்டாம்கிறது. உங்க நாட்டுல உள்ள ஒரு அமைப்பு தீவிரவாத இயக்கம்னு ஐநா சபைல சொன்னாத்தான் உங்களுக்கே தெரியுமா? அதுவரைக்கும் உங்களுக்கு அவங்களைப் பத்தி எதுவுமே தெரியாதுன்னு சொன்னா நாங்க நம்பிடணும். எங்க ஊர் அரசியல்வாதிங்களை மிஞ்சிடுவீங்க போலருக்கே!

தமிழக முதல்வர் கருணாநிதி: செய்தியாளர்கள் ஸ்பெக்ட்ரம் ஊழக் பற்றி கேட்ட கேள்விக்கு; ”அது முடிந்து போன விஷயம்”

எப்படி திடீர்னு முடிஞ்சு போச்சு? நீங்களும் மாறன்களும் மறுபடி ஒரே குடும்பமாயிட்டதாலயா? இல்லை தயாநிதி மேல் சொல்லப் பட்ட 10000 கோடி ஊழல் மாயமா போன மாதிரி இதுவும் போச்சா? இனிமே இந்தியாவுல உள்ள கோர்ட்டை எல்லாம் மூடிட்டு அந்தந்த மாநில முதல்வர்களையும் அமைச்சர்களையும் நீதிபதிகளா நியமிச்சிட வேண்டியது தான். நாட்டில் ஊழலும் ஊழல் குற்றச் சாட்டுகளும் அறவே இல்லாமல் போய்டும்.

செய்தி: தமிழக முதல்வர் கருணாநிதியின் குடும்பத்துக்கும் மாறன் சகோதரர்களுக்கு இருந்த பிணக்கு நீங்கி இரு குடும்பங்களும் இணைந்தன.

சந்தோஷமான விஷயம்தான். ஆனா அரசு கேபிள் டிவிக்காக செலவழிச்ச சில நூறு கோடிகள் என்னாகும்னுதான் தெரியலை. அதுல வேலை பார்த்தவன் எல்லாம் இனி தலைல துண்டு போட்டுகிட்டு வீட்டுக்கு போக வேண்டியதுதான். அரசு கேபிள் டிவிக்கு மக்கள் மத்தியில் ஆதரவு அதிகம் இல்லாததால் கொஞ்ச காலத்தில் அது மூடப்படுகிறது அப்படின்னு இன்னும் கொஞ்ச நாளில் செய்திகள் வரும். அவ்வளவுதான்.

6 comments:

dondu(#11168674346665545885) said...

//தமிழக முதல்வர் கருணாநிதி: செய்தியாளர்கள் ஸ்பெக்ட்ரம் ஊழக் பற்றி கேட்ட கேள்விக்கு; ”அது முடிந்து போன விஷயம்”//
மொழிபெயர்ப்பு: சம்பாதித்த பணத்தின் பங்கீடு சரியாக நடந்து முடிந்து விட்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

சுரேகா.. said...

பாயிண்ட்டெல்லாம் சூப்பரு!

வாழ்த்துக்கள்

கால்கரி சிவா said...

Please visit this page too http://sivacalgary.blogspot.com/2008/12/48.html

ஒரிஜினல் "மனிதன்" said...
This comment has been removed by a blog administrator.
அருப்புக்கோட்டை பாஸ்கர் said...

//மொழிபெயர்ப்பு: சம்பாதித்த பணத்தின் பங்கீடு சரியாக நடந்து முடிந்து விட்டது.//

டோண்டு சார் மொழி பெயர்த்தால் அது சரியாகத்தான் இருக்கும் !

மதுசூதனன் ராமானுஜம் said...

//டோண்டு சார் மொழி பெயர்த்தால் அது சரியாகத்தான் இருக்கும் !//

வழிமொழிகிறேன்...