Sunday, December 21, 2008

கேள்வியும் அவரே பதிலும் அவரே

சென்னை: தி.மு.க ஆட்சி குறித்து தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ள கருத்துக்களுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்துள்ளார். முதல்வர் கருணாநிதி வெளியிட்டுள்ள ”கேள்வி - பதில்” அறிக்கை:மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கும் பணி எப்படி நடந்து கொன்டிருக்கிறது?

மிகவும் சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது. வெள்லப் பணிகளைப் பார்க்க வந்த மத்திய குழுவினர், நிவாரணப் பணிகளை வெகுவாக பாராட்டிச் சென்றுள்ளனர். கடந்த 2005ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் மொத்தம் 436 கோடியே 81 லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, தி.மு.க ஆட்சியில் கடந்த 19ம் தேதி வரை 534 கோடியே நான்கு லட்சம் ரூபாய் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. அது 700 கோடி ரூபாயைத் தொடும் என எதிர்பார்க்கப் படுகிறது. இதற்கிடையே சிலர் அவசரப்படுகின்றனர், அமைதியாக நடந்து வரும் நிவாரன நிதி வழங்கும் பணியை சிலர் தாமதப்படுத்தி, சாலை மறியலால் கெடுத்து, கலவரப்படுத்தப் பார்க்கின்றனர். இவை அனைத்தையும் நடுநிலையாளர்கள் கவனித்துக் கொண்டுதான் வருகின்றனர்.

இப்ப என்ன சொல்லவறீங்க? யார் அதிக நஷ்ட ஈடு தராங்கன்னு போட்டி வெக்கணுமா என்ன? ஏற்கென்னவே உள்ளதும் போச்சுடா நொள்ளைக்கண்ணான்னு உக்காந்திருக்காங்க மக்கள். இதுல குசும்பு வேற கேக்குதா உங்களுக்கு? உங்க அமைச்சர் துறைமுருகன் சொன்ன மாதிரி சமைச்சு எல்லாருக்கும் சாப்பாட்டை வீட்ல கொண்டுபோய் குடுத்திரலாம். அப்புறம் வெள்ளம் போன என்ன வேலை போனா என்ன.. நீங்களும் சரி அந்தம்மாவும் சரி, ஒருத்தரை ஒருத்தர் குத்தம் சொல்றதில காட்டுற அக்கரையை கொஞ்சமாவது ஊர் மேலா காமிச்சிருந்தா இந்தப் பிரச்சினை எல்லாம் வருமா? நீங்களும் தான் போட்டி போட்டுகிட்டு மக்கள் கஷ்டப்பட்டு அரசாங்கத்துக்கு கட்டுற வரியை இப்படி அள்ளி விடவேண்டி தான் வருமா?

நெல்லை மாவட்டம், சங்கரன் கோவில் வட்டத்தில் பந்தப்புளி கிராமத்தின் மாரியம்மன் கோவிலுக்குள் ஆதிதிராவிடரை நுழைய விடாமல் தடுத்தது குறித்து அரசு தலையிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கூறியுள்ளதே?

பந்தப்புளி கிராமத்தில் கண்ணநல்லூர் மாரியம்மன் கோவில் உரிமை மற்றும் வழிபாடு குறித்து பிற சமூகத்தினரும், தேவேந்திர குலத்தினரும் தொடர்ந்த வழக்குகள், உரிமையில் கோர்ட்டில் தள்ளுபடி செய்யபட்டன. இது குறித்து மூன்று முறை சமாதானக் கூட்டங்கள் நடந்துள்ளனர். மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடக்கிறது. இக்கோவில் இந்து சமய அறநிலை கட்டுப்பாட்டில் வராதது. 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதை மீறி மார்க்சிஸ்ட் கட்சியினர் கோவில் பிரவேச ஆர்பாட்டம் நடத்தினர். அதற்கு பந்தப்புளி கிராம மக்களின் ஆதரவு இல்லை. கோவில்கள் அனைவருக்கும் பொது என்பதால், கோவில் அறங்காவலர் குழுக்களில் ஆதிதிராவிடர் ஒருவரை கட்டாயம் இணைத்துக்கொள்ள உத்தரவிட்டு நிறைவேற்றி வருகிறது.

என்ன ஒரு நடுநிலையான பதில்! பேசாம அந்த பிரச்சினைக்குரிய கோவிலை அறநிலயத்துறையின் கட்டுப்பாட்டிக்கு கீழ கொண்டுவந்துட வேண்டியது தானே? அதை விட்டுட்டு சமாதானப் புறா பறக்க விடுவதை என்னவோ பெரிய சாதனை மாதிரி பேசறீங்க? இதே இந்த சிகப்புத் துண்டு கோஷ்டி உங்க கூட்டணியில இருந்தா பந்தப்புளி மக்கள் எல்லாரும் திரண்டு வந்து ஆதரவு தெரிவிச்சாங்கனு சொல்லி இருப்பீங்க.
இலங்கைப் பிரச்சினையில் நடவடிக்கை எடுத்து சிலரை கைது செய்து சிறையில் அடைத்தபிறகும் அமைதியடையாமல் தங்களையும் கைது செய்ய வேண்டுமென்று திட்டமிட்டு கிளர்ச்சி நடத்தி கலவரம் செய்தது, ஜெயலலிதாவின் தூண்டிவிட்ட செயல் என்கின்றனரே; உண்மையா?
சோனியாவை பதிபக்த்தி இல்லாதவர் என நடுங்கா நாக்குடன் பேசிய ஜெயலலிதாவுக்கு ஆதரவாக, அவர் உத்தரவுப்படி இங்குள்ள காங்கிரஸ் நண்பர்கள் நடந்து கொள்வார்களா என்ன? உங்கள் கூற்றை என்னால் நம்ப முடியாது.
சரி, சிறையில் அடைச்சீங்க. அதுக்கப்புறம் என்னாச்சு? சீமான் வெளிய வந்து சினிமா டையலாக் மாதிரி பிரபாகரன் அண்ணன். ஒரே வீரமான தமிழன் அவந்தான். உலகத்தோட தமிழர்களை எல்லாம் அவன்தான் காப்பாத்துவான்னு ஒரே டையலாக்தான் போங்க. சரி.. அண்ணன் அவ்வளவு முக்கியம்னா இலங்கைக்கு போய் கத்த வேண்டியதுதானே? ஆனா இதெல்லாம் நம்ம ஐயா கண்ணுக்த் தெரியுமா? தெரியாதே! மீறிப்போய் அம்மா வந்து வழக்கு போடுவேன்னு சொன்னா நா சும்மனாங்காட்டியும் தான் சொன்னேன் அப்படின்னு சொல்லிட வேண்டியது. நாடு வெளங்கிடும்டா சாமி.
எங்கள் தயவில்தான் தி.மு.க ஆட்சி நடக்கிறது என தங்கபாலு கூறியுள்ளாரே?
நெய்க்குத் தொன்னை ஆதாரமா? தொன்னைக்கு நெய் ஆதாரமா? என்பது போல் இருக்கிறது.
ஏன். காங்கிரஸ் ஆதரவு இல்லாட்டாலும் எங்களால தொடர்ந்து ஆட்சி நடத்த முடியும்னு சொல்லித்தான் பாருங்களேன். அப்புறம் கோபாலபுரத்தில் காத்துக் கூட எட்டிப்பார்க்காது. நம்ம கலைஞர் ஐயா அதையும் சொல்லுவார். எப்போ தெரியுமா? ஆட்சி முடிய அரை நாள் இருக்கும்போது.

3 comments:

dondu(#11168674346665545885) said...

//ஏன். காங்கிரஸ் ஆதரவு இல்லாட்டாலும் எங்களால தொடர்ந்து ஆட்சி நடத்த முடியும்னு சொல்லித்தான் பாருங்களேன். அப்புறம் கோபாலபுரத்தில் காத்துக் கூட எட்டிப்பார்க்காது. நம்ம கலைஞர் ஐயா அதையும் சொல்லுவார். எப்போ தெரியுமா? ஆட்சி முடிய அரை நாள் இருக்கும்போது.//
அதாவது மாறன் உயிருடன் இருக்கும்வரை அரசு செலவில் வெளிநாட்டு வைத்தியம் ஆகியவை முடிந்த பிறகு பாஜக கூட்டணியிலிருந்து விலகுவது. அதுவும் உள்ளிருந்து அவர்களை வேவு பார்க்கத்தான் போனதாக ஒரு துரோக கமெண்டுடன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Anonymous said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

நீருடனும் நெருப்புடனும் விளையாடி நிலைகுலைந்து வரும் புலிகள்!

வன்னியூரான்

பஞ்சபூதங்கள் என வர்ணிக்கப்படும் நிலம், நீர், ஆகாயம், காற்று, நெருப்பு முதலியன இந்தப்பூமியில் மனித இனம் வாழுவதற்கான ஆதார சக்திகள் என்பது பொதுவாக உலகில் அனைத்து இன மக்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒர் உண்மை. அதிலும் குறிப்பாக தமிழினம் இந்த கருத்தை தனது வாழ்வின் ஆதாரசுருதியாகவே வைத்திருக்கின்றது. எனவே இந்த பஞ்சபூதங்களில் ஏதாவது ஒன்றை சிதைக்க முயன்றால், அதுமனித இனத்தினதும் அது வாழும் இந்த பூமியினதும் அழிவுக்கே வழிவகுக்கும் என்பது அப்பட்டமான உண்மை என்பதை தற்போதைய சுற்றுச்சூழல் நிலைமை துலாம்பரமாக எடுத்துக்காட்டுகின்றது. ஆனால் பஞ்சமா பாதகங்களுக்கு ஒருபோதும் அஞ்சாத புலிகள் இதிலும் தமது கைவரிசையை காட்டத்தவறவில்லை. குறிப்பாக நீருடனும் நெருப்புடனும் அவர்களது விபரீத விளையாட்டு தொடர்ந்த வண்ணமே உள்ளது.

சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், (20-07-2006) மூதூர் பிரதேசத்தில் மாவிலாறு அணைக்கட்டை மூடி பல்லாயிரக்கணக்கான விவசாயிகளுக்கு தண்ணீர் போகாமல் தடுத்து அவர்களுடைய வாழ்க்கையுடன்விளையாடினர். தண்ணீருடனான அவர்களது விசமத்தனமான இந்த நடவடிக்கை இறுதியில் அவர்களை கிழக்கு மாகாணத்திலிருந்தே விரட்டியடிக்கப்பட காரணமாயிற்று. ஐந்து நாட்களின் முன்னர், அதாவது 31-12-2008 முன்னர், இலங்கை இராணுவத்திடம் கிளிநொச்சி நகரை பறிகொடுக்கும் சூழல் உருவானதும், அந்நகரில் மக்களுக்கு குடிநீர் வழங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த பிரமாண்டமான நீர்த்தாங்கியை புலிகள் தகர்த்துவிட்டு சென்றுள்ளனர்.

இந்த நீர்த்தாங்கி காலம்சென்ற செல்லையா குமாரசூரியர், சிறிமாவோ பண்டாரநாயக்க அரசாங்கத்தில் அமைச்சராகவும்,சிறீலங்கா சுதந்திரக்கட்சியின் கிளிநொச்சி தொகுதி அமைப்பாளராகவும் இருந்த காலத்தில் (1970 – 1977), அவரது முயற்சியால் கட்டப்பட்டதாகும். நல்ல தண்ணீருக்கு தட்டுப்பாடு நிலவும் கிளிநொச்சியில் இந்த நீர்த்தாங்கி கட்டப்பட்டது அங்குள்ள மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருந்து வந்தது. இப்பொழுது அதனை எந்தவிதமான முன்யோசனையும், மக்கள் நலனில் அக்கறையுமின்றி புலிகள்தகர்த்துவிட்டு சென்றுள்ளனர். இதேபோலத்தான் 2000ல் இலங்கை அரசபடைகளிடமிருந்து ஆனையிறவை கைப்பற்றும் இராணுவ நடவடிக்கையின்போது, இயக்கச்சியிலுள்ள சவுக்கு தோட்டத்திலிருந்த வற்றாத கிணற்றின்மூலம் ஆனையிறவு முகாமுக்கு நீர் வழங்கிவந்த தண்ணீர் குழாய்களை புலிகள் சேதமாக்கி, இலங்கை இராணுவத்திறகான நீர் வழங்கலை துண்டித்தனர். அது இன்றுவரை சீர்செய்யப்படவில்லை.

உண்மையில் இந்த நீர்த்திட்டம்பிரிட்டிசார் இலங்கையை அரசாண்டபோது ஆனையிறவில் உருவாக்கப்பட்ட உப்பளத்தில் வேலைசெய்த தொழிலாளர்களுக்கு நீர் வழங்குவதற்காக உருவாக்கப்பட்டதாகும். பின்னர் ஆனையிறவு தடைமுகாமில் பெரும் இராணுவமுகாம் அமைந்த போது, அவர்களுக்கும் நீர் வழங்குவதற்கு பயன்படுத்தப்பட்டது. நீருடன் மட்டும் புலிகளின் இந்த விபரீத செயல்பாடுகள் முற்றுப்பெறவில்லை, நெருப்புடனும் நடைபெறுகின்றது.

அண்மையில் முறிகண்டியைவிட்டும் கிளிநொச்சியைவிட்டும் புலிகள் ஓடும்போது முடியுமானவரை அங்கிருந்த கட்டிடங்களுக்கு நெருப்பு வைத்துவிட்டும் தகர்த்துவிட்டும் சென்றுள்ளனர். இந்த நெருப்பு பற்றவைக்கும் கைங்கரியத்தை அவர்கள் இதற்கு முன்னரும் பல இடங்களில்செய்துள்ளனர்.

1995ல் புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு தப்பியோடியபோது, நாவற்குழி, நீர்வேலி, செம்பியன்பற்று போன்ற இடங்களில், மக்களுக்கு வந்த நிவாரணப்பொருட்களை பறித்து, பதுக்கி வைத்திருந்த தமது உணவு களஞ்சியங்களுக்கு, தீ வைத்துவிட்டே சென்றனர்;. புலிகள் அவ்வாறு நெருப்பு வைத்ததிற்கு காரணம், தாம் உணவுப்பொருட்களை பதுக்கி வைத்திருந்ததை மக்கள் அறியக்கூடாது என்பதும்,எவருமே அவற்றை எடுத்து சாப்பிட்டுவிடக்கூடாது என்பதுமே.

தமிழின் பெயராலும், தமிழனின் பெயராலும் பழம்பெருமைபேசி, ஒருபக்கத்தில் மக்களை ஏமாற்றிக்கொண்டு, மறுபக்கத்தில் இயற்கையின் நியதிகளுக்கு மாறாகவும், தமிழினத்தின் பாரம்பரிய நம்பிக்கைகள், நடைமுறைகளுக்கெதிராகவும் காட்டுமிராண்டித்தனமாக செயற்படும் புலிகளுக்கு, மனிதர்கள் மட்டுமின்றி இயற்கையும் தனது தண்டனையை வழங்கியே தீரும் என்பதையே தற்போதைய புலிகளது அழிவுஎடுத்துக்காட்டி நிற்கிறது!