Monday, May 30, 2011

மீண்டும் நான்

எழுதி ரொம்ப நாளாச்சு. ஏதாவது எழுதனும்னு பதிவு போட்டு ரெண்டு மாசமாச்சு. ஆனாலும் எதுவும் எழுதலைன்னு  ஒரு உறுத்தல். அப்பத்தான் நம்ம டுபுக்கு கூட பேச ஒரு வாய்ப்பு கிடைச்சது.  அவரும் கொஞ்சம் உசுப்பேத்தவே, சரி எதையாவது எழுதுவோம்னு முடிவு பண்ணி, இதோ இந்தப் பதிவையும் போட்டாச்சு.



சமீபத்திய சினிமா
மெமோரியல் தினத்தை முன்னிட்டு நேரத்தை நல்ல வழியில் செலவழிக்கலாம்னு முடிவு பண்ணி, ரெண்டு படம் பாக்கனும்னு முடிவு பண்ணியாச்சு. எந்த ரெண்டு படம்னு யோசனை பண்ணி, ரொம்ப நாளா ஜீவா படம் எதுவும் பார்க்காததால், அதையே பாக்கலாம்னு முடிவு பண்ணி பார்த்த ரெண்டு படம், கோ மற்றும் சிங்கம் புலி.

கோ
இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் தான் படத்தின் அடிப்படை. அதை வைத்து ரொம்பவும் போரடிக்காதபடி கதை பண்ணி இருக்கிறார்கள். சுறா, காவலன் மாதிரியான தரமான படங்ககளை பார்த்து ஏற்பட்ட ஒரு உணர்வை இந்தப்படம் கொஞ்சம் மறக்கடித்தது. ஒன்றிரண்டு மெலடி இருப்பினும் எதுவும் மனதில் ஒட்டவில்லை. கதையின் நீளத்தை கொஞ்சம் குறைக்க முயற்சி செய்திருக்கலாம். ஒரு முறை பார்க்க கூடிய படம்.

சிங்கம் புலி
ஜீவா இரட்டை வேடத்தில் முதல் முறையாக நடித்துள்ளார். கதை ரொம்பவும் பழையது. இந்தியாவின் சினிமா உலகில் எல்லோரும் இப்படி ஒரு கதை பண்ணியே ஆகவேண்டும் என்று சத்தியம் செய்துவிட்டு வருவார்களோ என்னவோ. அநாவசியமான இடங்களில் பாட்டு கூத்து என்று தமிழ் சினிமாவின் அத்தனை கல்யாண குணங்களையும் உள்ளடக்கி இருந்தது சிங்கம் புலி.

என்னை மாதிரி நீங்களும் ரெண்டு படத்தையும் ஒண்ணா பாக்கிறதா இருந்தால், முதலில் சிங்கம் புலியை பார்க்கவும். இப்படி செய்வதால், கோவை இரண்டாவதாய் பார்த்து முடிக்கையில் ஜீவா மேல ரொம்ப கோவமில்லாமல் இருக்கும்.


சமீபத்திய அரசியல்
2G - இதுதான் சமீபத்திய சாதனை. சோனியாவும் கலைஞரும் இணைந்து தயாரித்திருக்கும் படம். நிறைய திருப்பங்கள். விறுவிறுப்பான கதையமைப்பு, சுவாரசியதிற்கு பஞ்சமில்லை. ஒரு லட்சத்து எழுபத்தி ஆறாயிரம் கோடி ருபாய் தயாரிப்பு செலவு தான் தலை சுற்றுகிறது. தேர்தல் முடிவிகளில் இருந்து நமக்குப்ப் புரிவது என்னவென்றால், படம் படு தோல்வி. இயக்குனர்களான கலைஞருக்கும், சோனியா அம்மாவுக்கும் எதுவும் பண நட்டம் இருப்பதாய் தெரியவில்லை. தயாரிப்பாளர்களுக்குத்தான் (நம்ம தாங்க) பெரிய நட்டம் போல. படம் இன்னும் முடியாததால் பொறுத்திருந்து தான் பார்க்கணும்.

சமிபத்தில் படித்தது 
டேவிட் பால்டாக்கி எழுதிய "The Sixth Man". விறுவிறுப்பான பிக்க்ஷன். அதைத் தவிர வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.

No comments: