Tuesday, December 27, 2011

சமீபத்திய சினிமா (டிசம்பர் 2011)


கிருஸ்துமஸ் லீவுல  அசுர வேகத்தில் முன்று படங்களை பார்த்துத் தீர்த்தேன். இங்க நா சொல்ற விஷயம் இதுவரை இந்தப் படங்களை பார்க்காதவங்களுக்கு ஒரு எச்சரிக்கையாக இருக்கும். ஏற்க்கேன்னவே பார்த்திருந்தால் என்னோட ஆழ்ந்த அனுதாபங்கள். (கடைசி படம் தவிர....அது ஒரு தனி விதம்).

ராஜபாட்டை - சுசீந்திரனுக்கு சிலை தான் வெக்கணும்!

நேற்று மாலை ராஜபாட்டை படம் பார்த்தேன். அட அட...என்ன ஒரு அற்புதமான படைப்பு. விக்ரமின் உடை மற்றும் சிகை அலங்காரதிர்க்காகவே அந்தப் படத்திற்கு ஒரு அக்கடமி அவார்டு தர வேண்டும். இன்றைக்கு அந்தப் படத்தின் கதை கருவிற்கு இருக்கும் மவுசுக்கு அதை நல்லதொரு மசாலா கலந்த ஆக்ஷன் படமாக்கி (தில், தூள் போன்ற படங்களைப் போல) இருக்கலாம். ஆனால் படத்தின் இயக்குனருக்கு இந்தப் படம் எப்படிப்பட்ட ஒரு ரியாக்ஷனை தோற்றுவிக்க வேண்டும் என்பது போன்ற எந்த ஒரு கவலையோ அல்லது யோசனையோ இருப்பதற்கான எந்த ஒரு அறிகுறியும் இல்லை.கதையின் நாயகிக்கு ஒரு வேலையும் இல்லை. அதிலென்ன புதுசுன்னு கேக்காதீங்க. பின்னணி மற்றும் பாடல்களை ஓரளவுக்கு உன்னிப்பாக கவனிக்கும் பழக்கமுண்டு எனக்கு. ஆனால் சொல்லிக்கொள்வது போல் எதுவும் இல்லை. படத்தின் பின்னணி இசை ரொம்பவே சத்தமா இருந்தது. ஒரு ௭௫ பேர் படம் பார்க்கக் கூடிய திரை அரங்கில் இருபதுக்கும் குறைவானவர்கள் மட்டுமே இருந்தார்கள் (பக்கத்துக்கு ஸ்கிரீனில் ஓடிய பால கிருஷ்ணாவின் "ராஜான்ன"விற்கு இதை விட கூட்டம் அதிகம்) 


தெய்வதிருமகள் விக்ரமிற்கு வித்தியாசமான ஓரளவிற்கு தரமான ஒரு படம் என்றால் இந்தப்படத்தை ஒரு திருஷ்டி என்று தான் சொல்லவேண்டும். அவ்வளவு மட்டமான ஒரு படம். இது மாதிரி ஒரு படம் சிம்புவோ அல்லது விஜயோ பண்ணலாம், ஆனால் விக்ரம் இன்னும் கொஞ்சம் நல்ல திரைகதையை தேரேந்தேடுக்கலாம் என்பது என் எண்ணம். ஆக மொத்ததுல இப்படி ஒரு படத்தை குடுத்த சுசீந்திரனுக்கு சிலை தான் வெக்கணும்.


கூடுதல் தகவல்: தெய்வத் திருமகள் - இந்தப்படம் ஷான் பெண் நடித்து 2001 ஆம் ஆண்டு வெளிவந்த "I am Sam" என்னும் படத்தோட ரீமேக். தமிழ்ல பாதத்தை விட ஆங்கிலப்படம் ரொம்பவே மனதை தொட்டது. வாய்ப்பு கிடைச்சா பாருங்க...என்ன சொல்றேன்னு உங்களுக்குப் புரியும். ஆனால் தமிழில் இது ஒரு நல்ல முயற்சி என்பதை மறுப்பதற்கில்லை.


ஒஸ்தி - ம்ம்ம்முடியல...
ஒரு ரெண்டு மாசம் முன்னாடி சல்மான் நடிச்ச தபாங் பார்த்தேன். படத்தில கதைன்னு எதுவுமே புதுசா இல்லாட்டாலும், அந்தக் கதைய சொன்ன விதம் ரொம்ப நல்ல இருந்தது. அதனால அந்தப்படம் ரொம்ப அலுப்பு தட்டாம இருந்தது. ஆனால் அந்தப் படத்தோட ரீமேக்கான இந்த ஒஸ்தி படத்துல அப்படி ரசிக்கும் படியா எதுவுமில்ல. சுட்டுப் போட்டாலும் சிம்புவுக்கு திருநெல்வேலி சாயல்ல தமிழ் பேச வராது அப்படிங்கிறதை தான் படத்தோட முடிவுல கத்துக்க முடிஞ்சது. சிம்புவுக்கு மட்டுமில்ல, அந்தப்படத்துல நடிச்ச யாருக்குமே அது வராதின்னு சொல்லலாம், அவ்வளவு மட்டமா இருந்தது அவங்க தமிழ் பேசின அழகு. சில இடங்களில் சந்தானத்தின் புண்ணியத்தால் சிரிக்க முடிந்தது. மத்தபடி, ஒஸ்தி...சிம்பு படத்துக்கு ஒரு வித்யாசமான பேரு, அவ்வளவுதான்.

மயக்கம் என்ன - முழு ஏமாற்றமில்லை ஆனால் நிறைவுமில்லை...
செல்வ ராகவன் படம்ங்கிறதால சுமாரான ஒரு எதிர்பார்ப்போட தான் உக்காந்தேன். சுத்தமா ஏமாந்திட்டேன்னு சொல்ல மனசு வரல, ஆனா அதே சமயம், கதையை ரொம்ப ஜவ்வு மாதிரி இழுத்தது போல ஒரு உணர்வு இருக்கறதை தவிர்க்க முடியல. திரைக் கதையை கையாளர்துல இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம். பின்னணி இசை கொஞ்சம் ரசிக்கும் படியா இருந்தது. ராஜபாட்டைல பாத்த அதே கதாநாயகி தான் இதுலயும். நடிக்க கிடைச்ச வாய்ப்பை இன்னும் கொஞ்சம் நல்லாப் பயன்படுத்தி இருக்கலாம். ஏற்கென்னவே சொன்ன மாதிரி மொத்தமா மோசம்னு சொல்ல மனசு வரலை, அதனால நூத்துக்கு ஒரு அம்பது மார்க் போடலாம். மயக்கம் என்ன - தனுஷுக்கு ஒரு வித்யாசமான படம்.

1 comment:

Sakki said...

Unakku roomba thairiyamthan
Tamil Cinema yellam parkkira